news
வத்திக்கான் செய்திகள்
“அழகு நமது பார்வையை விண்ணை நோக்கி உயர்த்த உதவுகிறது” - திருத்தந்தை லியோ

காஸ்டெல் காண்டோல்போ அப்போஸ்தலிக்க அரண்மனை முற்றத்தில், அல்பானோ மறைமாவட்டம் சார்பில் திருத்தந்தையின் கோடைக்கால வருகையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் நிறைவில் உரையாற்றிய திருத்தந்தை, “நாம் அழகு குறைந்து காணப்படும் ஓர் உலகில் வாழ்கிறோம். போர்கள், வெறுப்பு, வேலையின்மை எனப் பல பிரச்சினைகள் சூழ்ந்த இந்நாள்களில், இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்காக நாம் ஒன்றுகூடுவது ஒரு பெரிய வரமாகும்என்று தெரிவித்துள்ளார்.   இசை, கலை மற்றும் அழகு ஆகியவை தற்போதைய கடினமான சூழல்களுக்கு அப்பாற்பட்டு நமது பார்வையைக் கடவுளை நோக்கி உயர்த்தவும், மனித மாண்பை மீட்டெடுக்கவும் உதவுகின்றன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார். அண்மையில் தான் மேற்கொண்ட ஸ்பெயின் பயணத்தின் நோக்கமும் இதுவே என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

வயலின் கலைஞர் மார்கோ ரோக்லியானோ மற்றும் பியானோ கலைஞர் ரொசானா டோமாசி கோல்கர் ஆகியோரின் சிறப்பான இசைத் திறமையைப் பாராட்டிய திருத்தந்தை, இறைவனின் படைப்பில் உறைந்துள்ள பேரழகை இந்த இசையின் மூலம் உணர முடிந்ததாகக் கூறி, கலைஞர்களுக்கும், அல்பானோ மறைமாவட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“ஆயுதக் குறைப்பால் மட்டுமே அமைதியை உருவாக்க முடியும்” - திருத்தந்தை லியோ

அணு ஆயுதப் பெருக்கத்தால் அல்ல; மாறாக, படிப்படியான ஆயுதக் குறைப்பால் மட்டுமே உலக அமைதியை உருவாக்க முடியும்என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளஆயுதங்களற்ற நிலை: அமைதி ஒரு கொடைஎன்ற அவரது புதிய நூலில் இக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் உக்ரைன், மத்திய கிழக்கு, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 103 நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, “மூன்றாம் உலகப்போர் துண்டு துண்டாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுஎன்று கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுதப் போட்டியும், நவீனத் தொழில்நுட்பச் சேர்க்கையும் மனிதகுலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளார். அமைதி என்பது தனிநபரின் அன்றாட நடத்தையிலிருந்தும், மன்னிக்கக்கூடிய மனப்பக்குவத்திலிருந்தும் தொடங்குகிறது என்றும், அது அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலால் ஒருபோதும் சாத்தியமாகாது. இயந்திரங்கள் முடிவெடுக்கும் நவீன உலகில் மனிதச் சான்றாண்மையே பேரழிவைத் தவிர்க்கும். எனவே, வன்முறையற்றப் பாதையில் பயணித்து அமைதியைக் கட்டியெழுப்ப உலக மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தோனேசிய மரியன்னை திருப்பயணம்!

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லபுவான் பாஜோ மறைமாவட்ட ஆயர் மாக்சிமஸ் ரெகஸ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புகழ்பெற்றகோலோ கோயேதிருவிழாவை முன்னிட்டு, விண்ணேற்பு அன்னை திருவுருவத்தின் வாராந்திர மாபெரும் திருப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாண்டின் திருப்பயணம் அன்னை மரியாவின் மீதான பக்தியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் உன்னத நோக்கத்துடன், ‘இறைப்படைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஒன்றிணைந்த திருப்பயணம்என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொள்ளும் வகையில் கடற்கரை தூய்மைப் பணி, தென்னை மரக்கன்றுகள் நடுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இத்திருப்பயணத்தின் வழியெங்கும் நிலவிய மதநல்லிணக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அன்னை மரியாவின் திருவுருவப் பவனி இசுலாமியர் வாழும் கிராமத்தைக் கடந்தபோது, அங்குள்ள மக்கள் பாரம்பரிய நடனமாடி அன்போடு வரவேற்றனர். ஆகஸ்டு 10 முதல் 15 வரை நடைபெறவுள்ள இறுதி விழாக்களில் இத்தீவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இளைஞர்களும் சமூகமும் ஒன்றிணைய உள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
“செயற்கை நுண்ணறிவு மனித இதயத்தை உருவாக்க முடியாது”

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்புப் பிரிவு (CBCI-OSC) மற்றும்நிஸ்கார்ட்கல்வி நிறுவனம் இணைந்து, திருத்தந்தை 14-ஆம் லியோவின்மகத்தான மானுடம்திருமுகத்தின் வழிகாட்டுதலில், ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித கண்ணியம்குறித்த உலகளாவிய கருத்தரங்கை நடத்தின. இதில் திரு அவைத் தலைவர்கள், இறையியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு, அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலில் மனித விழுமியங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். கருத்தரங்கில் வத்திக்கான் செய்தித்துறை இயக்குநர் டாக்டர் நடாஷா கோவேக்கர் முதன்மை உரையாற்றினார். அப்போதுஎவ்வளவு அதிநவீன கணினி அமைப்பாக இருந்தாலும், மனித இதயத்தை உருவாக்க முடியாதுஎன்று குறிப்பிட்ட அவர், “தொழில்நுட்ப வளர்ச்சி எப்போதும் மனிதரை மையமாகக் கொண்டதாகவே இருக்கவேண்டும்என வலியுறுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘அமோரிஸ் லெதீசியா’ குறித்த அக்டோபர் மாநாட்டிற்கான ஆயத்த ஆவணம் வெளியீடு

குடும்பங்கள் குறித்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியஅமோரிஸ் லெதீசியா (அன்பின் மகிழ்ச்சி) எனும் திருத்தூது மடல் வெளியாகிப் பத்தாண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் அக்டோபர் 2026-இல் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஆயத்த ஆவணத்தை வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. திருத்தந்தை லியோ அவர்களால் கூட்டப்பட்டுள்ள இம்மாநாடு, வரும் அக்டோபர் 7 முதல் 14 வரை வத்திக்கானில் நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள கீழைநாட்டுக் கத்தோலிக்கத் திரு அவைகளின் தலைவர்களும், ஆயர் பேரவைகளின் தலைவர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பல குடும்பங்கள் நேரடியாகப் பங்கேற்றுத் தங்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

news
வத்திக்கான் செய்திகள்
“இறைவனின் இரக்கத்தால் மட்டுமே இதயங்களில் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க முடியும்”

இத்தாலியின் லோடி (Lodi) மறைமாவட்டத்தில் நடைபெற்ற 27-வதுகொலம்பனஸ் தினம் (Columbanus Day) விழாவை முன்னிட்டு அம்மறைமாவட்ட ஆயர் மவுரிசியோ மல்வெஸ்டிட்டிக்கு, வத்திக்கான் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியெட்ரோ பரோலின் வழியாகத் திருத்தந்தை லியோ அனுப்பிய கடிதத்தில், “பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் போர்களின் பேரழிவுகளுக்கு மத்தியில், மனித இதயங்களில் உண்மையான மனிதாபிமானத்தை விதைக்க இறைவனின் இரக்கம் மட்டுமே ஒரே வழிஎன்று வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பாவில் கிறித்தவப் பாரம்பரிய விழுமியங்களை மீண்டும் கண்டறியவும், தற்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் தூய கொலம்பனஸின் ஆன்மிக மரபு பெரிதும் உதவுகிறது என்று பாராட்டிய திருத்தந்தை, “போர் மற்றும் பிளவுகளின் உன்னதத் தீர்வாகமன்னிக்கும் மனப்பான்மைஇருக்க வேண்டும்எனக் குறிப்பிட்டுள்ளார்.