news-details
தமிழக செய்திகள்
அவருக்குச் செவிசாய்ப்போம்’(ஆயர் இராயப்பன் அவர்களின் செயலி)

அவருக்குச் செவிசாய்ப்போம்(Let us listen to Him)  செயலி ஆன்மிக வளங்கள், ஒலிவடிவத் திருவிவிலியம், திருப்புகழ்மாலை, திருவழிபாட்டு உரைகள் மற்றும் திரு அவைச் சட்டப் போதனைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் உங்களுக்காகக் கொண்டு வருகிறது. உங்களின் அன்றாட ஆன்மிக வாழ்க்கையை வளப்படுத்த ஒரே செயலி மூலம் எளிதாக அணுகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தினமும் திருவிவிலியம் வாசிக்க நேரமில்லை என்று கூறலாம், ஆனால், இறைவார்த்தையைக் கேட்க நேரமில்லை என்று யாருமே கூறமுடியாது. பயணம் செய்யும்போது, சமையல் செய்யும்போது அல்லது வேலை பார்த்துக்கொண்டே மிக எளிதாகக் கேட்கலாம். அதேபோல், ‘திருப்புகழ் மாலை(Liturgy of the Hours) மற்றும்புனிதர்களின் ஆன்மிக வாசிப்புகள்(Spiritual Readings by Saints) ஆகியவை ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் எல்லாரும் திரு அவையின் அதிகாரப்பூர்வமான செபத்தை நாள்தோறும் தவறவிடாமல் செபிக்கப் பெரிதும் உதவுகின்றன.

இன்றே இந்தச் செயலியை (App) பதிவிறக்கம் (Download) செய்து (https://play.google.com/store/apps/details?id=org.bishopsalem.bishop_app), இந்த ஆன்மிக வளங்கள் அனைத்தையும் உங்கள் விரல் நுனியில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் செயலி பற்றிய தகவலை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பங்கு மக்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!