news-details
உலக செய்திகள்
“இறைஅழைத்தல்கள் பிறப்பது இறைச்சமூகத்தின் செபத்திலிருந்தே...”- திருத்தந்தை

இத்தாலியின் கப்புச்சின் பூவர் கிளார் (Capuchin Poor Clare) அருள்சகோதரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைத் திருத்தந்தை லியோ சந்தித்தார். அப்போது “அழைத்தல்கள் என்பவை திட்டமிட்ட உத்திகளாலோ, பிரச்சாரங்களாலோ உருவாவதில்லை; மாறாக, செபம், நற்செய்தி வாழ்வு, அமைதி மற்றும் பலவீனங்களை ஏற்றுக்கொள்ளும் சகோதரத்துவச் சூழலிலிருந்தே பிறக்கின்றன. துறவற அழைப்பு குறைவது சுயபரிசோதனைக்கும், தங்களது வாழ்க்கை முறையைப் புதுப்பித்து இறைநெருக்கத்தை வளர்ப்பதற்குமான வாய்ப்பாக அமையவேண்டும். அருள்சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை எளிமையாகவும், உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்டும் வாழவேண்டும்” என்றார்.