news-details
வத்திக்கான் செய்திகள்
அமைதிக்கான செபமாலை: திருத்தந்தையுடன் இணையும் குழந்தைகள்!

திரு அவைக்கு உதவும் அமைப்பு (ACN) ஒருங்கிணைக்கும் ‘ஒரு மில்லியன் குழந்தைகள் செபிக்கும் செபமாலை’ இயக்கத்தின் தொடக்கமாக அக்டோபர் 1 அன்று உரோமையில் பல்வேறு பங்குகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் வருகை தரும் 700 முதல் 1,000 வரையிலான குழந்தைகள், திருத்தந்தை  லியோவுடன் இணைந்து வத்திக்கான் தோட்டத்தில் செபமாலை செபிக்கவுள்ளனர். லூர்து மாதா கெபியில் நடைபெறும் இந்நிகழ்வில், உலகம் முழுவதிலும் உள்ள குடும்பங்கள் மற்றும் கிறித்தவச் சமூகங்களுடன் இணைந்து குழந்தைகள் அமைதிக்காக மன்றாடுவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இத்திட்டம், வரலாற்றிலேயே முதன் முறையாக அக்டோபர் 1 முதல் அக்டோபர் 7 செபமாலை மாதா திருவிழாவுடன் இந்நிகழ்வு நிறைவடைகிறது.

“ஒரு மில்லியன் குழந்தைகள் செபமாலை செபிக்கும்போது உலகமே மாறும்” என்ற புனித பியோவின் கூற்றை நாம் நினைவுகூர்வோம்.