இதழால்
நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமா
இவ்விதழ் வழி கூறினால் ஏற்புடையதாகிடும்.
மலர்களின் இதழ்கள் விரியவிரிய இரசிக்கத்
தூண்டி மனம்
இலகுவாகிடும் இவ்விதழ்களின் ஏடுகள்/ விரிய
உச்சரித்து
சுவைத்து சுவைதரச் செய்யும்/
இதன் பிறப்பு 1975 சிறப்போ 2025/
கிறித்தவத்திற்கு மட்டுமல்ல படைப்பனைத்திற்கும் ஏதுவாக/
ஓருலகப் பார்வையில் உருவான இறைத் திட்டம்/
ஆகச்சிறந்த
ஆளுமைகள் உள்ளத்துள் உதித்தது/
இறைஇயேசு இராஜாவின் இலட்சியக்கனவை நிறைவேற்ற /
கருவுருவாகி ஆய்வாளராக ஆட்சியாளராக சட்டமன்ற/
நாடாளுமன்ற உறுப்பினர்களாக மிகுதியாகப் பங்கேற்று/
சமநீதி
சமத்துவம் உலகளவில் மலர்ந்து /
மனிதம்காத்து மக்கள்நலன் கருதும் அரசமைய/
மலர்ந்தின்று பணி இராஜன் இயக்கத்திதழ்/
நல்லவர்களின் நாடித்துடிப்பாக அமைய கூர்முனை/ கொண்டு
புரட்சி
சீர்மிகுலகாக மறுமலர்ச்சியகமாக மாற்ற/
இடையில் பணி ஆனந்தானந்தமாக மனிதம் உயர்வடைய/
ஆனந்தமடைய
பல உருவாக்க படைப்புகளில்/ செயல்களில்/
எழுத்தாளர் பயிற்சிபட்டறையுமொன்று ஒருகருவி நானும்/
இதுவரை
இவையெல்லாம் ஒரு முன்னுரை இனி கவிதையின் வாயிலில்
உரோ:
5:5-இல் உள்ளது போல் யூபிலியாண்டின் எதிர்நோக்கு இதழ்
யோவா: 10:09 உரைத்த வாயிலாக எதற்கு வாயில்?
இறைஇயேசுதாம் அமைதியின் கதவு உள்ளே நுழைய துணிவில்லை
இனி கடந்து ஆன்ம பரிசோதனை செய்து சவால் விட்டு
பயணிக்கும் பாதை நீயாக உர்பி எத் ஓர்பி யூபிலி டிசம்பர் 6, 2025
ஒருசாராருக்கு
உபதேசம் உரைத்தவர் பேறுபெற்றுயர்ந்தவரெனில்
/
உருளுகின்ற உலகத்து மாந்தரெல்லாம் உவந்தேற்கும் /
அருங்கருத்தை உரைத்த எம்பெருமான் இறைவார்த்தைக்கேற்ப
தரணிக்கெல்லாம் பெருவிருந்து அருமருந்தான இதழிது/
உதிக்கின்ற
ஆதவனைப் பின்னிறுத்தி உறக்கமெழுந்து/
கொதிக்கின்ற பொதிசுமக்குமுன் கையேந்தும் இதழிது/
விதியென்றெண்ணாதே விதையாகப் பிறப்பெடுமெனும் இதழ்/
மதிகொண்டு மாசின்றி நானிலம் போற்றும் / இதழ்
விழுவிட்டு
விசாலமாக நெடுந்துயர்ந்து இதழ்/
எழுதுவதும் பேசுவதும் மனிதத்தின் எழுச்சிக்காக/
பழுதான உள்ளங்கள் வழக்கமென்பதைத் தவிர்த்து/
ஒழித்து அழுமக்கள் துயர்துடைக்கும் இதழ்/
கண்ணுற்றுப்
பார்ப்பதற்குக் கவின்மிகு விருந்து/
மின்னேற்றி தன்னகத்தே முன்னேற்றும் ஒளி/
எல்லோரா ஓவியத்திற்கீடாய் ஓங்கின எழிலோவியம்/
நல்லறிவுகளைப் படைப்பாக்கி நாடேற்றும் கலைக்கோயில்/
சொல்லாற்றல்
மிகுதிங்கு செழுங்கருத்து ஊற்றிது/
மெய்யுணர்வு நுண்ணறிவு தூண்டிடும் நெறிபிழகாதிங்கு/
ஆறாக ஓடியது வற்றாத எமது உழைப்பு /
நூறில் நிச்சயம் தடம் பதிப்பேன்/
வேரறுந்து
வீழ்வேனோ தேரேறிச் செல்வேன் / மனத்தேரேறிச் செல்வேன்/
இதழேந்துவோம் வாசிப்போம் யோசிப்போம் நேசிப்போம்/
தரணியெங்கும் விடுதலை நாயகனின் புகழ் / பரப்புவோம்
நறுமணம் பரவிவர பரவலாக்கம் செய்வோம்!