news
தமிழக செய்திகள்
கனடாவின் புதிய தேர்வு நிலை பேராயர் அருள்பணி. சூசை சேசு OMI (சிவகங்கை மறைமாவட்ட மண்ணின் மைந்தர்!)

தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் பங்கின் மண்ணின் மைந்தரான அருள்பணி. சூசை சேசு OMI அவர்கள் கனடாவின் கீவாட்டின்-லே-பாஸ் (Keewatin-Le Pas) உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தை  14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமலமரி தியாகிகள் சபை (OMI) உறுப்பினர் ஆவார். தற்போது எட்மண்டன் உயர் மறைமாவட்டத்தில் உள்ள திரு இருதய  ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும், அச்சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

அருள்பணி. சூசை சேசு அவர்கள் 1971-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டம், புஷ்பவனம் பங்கில் பிறந்தவர். அவர் தனது தொடக்கக் கல்வியினை அருகிலுள்ள உலையூர் கிராமத்திலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை, திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்பெங்களூருவில் உள்ள தர்மாரம் Vidya Kshetram கல்லூரியில் தத்துவயியலையும், ஆஷ்டாவில் உள்ள கிறிஸ்து பிரேமாலய இறையியல் நிறுவனத்தில்  இறையியலையும் பயின்றவர். பின்னர் ஒட்டாவாவில் உள்ள புனித பவுல் பல்கலைக்கழகத்தில்  மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2000-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர்கடந்த பல ஆண்டுகளாகத் துணைப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை மற்றும் OMI சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினர் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்.

புதிய பேராயரின் பணி சிறக்கநம் வாழ்வுவாழ்த்துகிறது!

news
தமிழக செய்திகள்
நினைவுகூரப்பட்ட மறைமாவட்ட இறையடியார்களின் முன்மாதிரியான வாழ்க்கையால் தூண்டப்பட அழைப்பு!

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் நாள், யூபிலி 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 9 தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவன்று ஒவ்வொரு தலத் திரு அவையும் புனிதர்களை மட்டுமன்றி, அந்தந்த மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்டு பிறந்து, உலகளாவியத் திரு அவைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அருளாளர்கள், இறை ஊழியர்கள், வணக்கத்திற்குரியவர்கள் அனைவரையும் நினைவுகூர கடிதம் ஒன்றின் வழியாக அழைப்பு விடுத்திருந்தார்.

திருத்தந்தையின் அழைப்பின்படி தூத்துக்குடி மறைமாவட்ட இறையடியார்கள் அகுஸ்தின் பெரைரா, அந்தோனி சூசைநாதர் ஆகியோரின் முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்பட்டு, அவர்கள் விரைவில் அருளாளர் நிலைக்கு உயர சிறப்புத் திருப்பலி, இறையடியார் அந்தோனி சூசை நாதர் கல்லறை இருக்கும் வடக்கன்குளம், புனித திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது.

news
தமிழக செய்திகள்
மாற்றம் நோக்கி... 100 கருத்தாளர்கள்! (தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் முன்னெடுப்பு!)

மாற்றம் நோக்கி 100 கருத்தாளர்கள்என்கிற இலக்கோடு இளைஞர்களைக் கருத்தாளர்களாக உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது நேரடி அமர்வு Sisters of Charity (SCCG) சபையின் தென் கிழக்கு இந்திய மாகாணத்தின் தலைமையகமான திருச்சி மரியகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்தப் பயிற்சியில் தமிழ்நாட்டிலிருந்து 36 இளையோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இலக்குப் பாடலானபொது இலக்கு கனவெடுத்துஎனும் பாடலுடன் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வில்அம்பேத்கரின் பார்வையில் சமூக நீதிஎன்ற தலைப்பில் புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான பணி. . செகன் போசு கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில்சமூக நன்மை (சமூக நீதி) என்பது இரக்கம் சார்ந்தது அல்ல; அது உரிமை சார்ந்தது. மேலும், இது தனிமனிதனின் பொறுப்பல்ல, அரசின் கடமைஎன்று கூறினார். மற்றோர் அமர்வில், ‘பூவுலகின் நண்பர்கள்இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களோடு இணைந்து இளைஞர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இயக்கத்தின் இயக்குநரான பணி. கு.. எடிசன், ‘சாதியற்ற தமிழ்ச் சமூகம், சாதியத் தமிழ்ச்சமூகம்என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் எவ்வாறு சாதி ஊடுருவியது என்றும், சாதியற்ற தமிழ்ச் சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் இன்றைய அவல நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாள் அமர்வில், ‘காவிமயமாகும் நீதித்துறைஎனும் தலைப்பில் வழக்கறிஞரான அருள்பணி. சவரிமுத்து கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய சூழலில் மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறை எவ்வாறு மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது என்பது பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, அதனை உயர்த்திப் பிடிப்பதற்கான தேவை பற்றியும் எடுத்துரைத்தார். சிறந்த கருத்தாளர்களாக உருவாக வேண்டுமெனில் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கவேண்டும் என்ற கருத்தும் இந்தப் பயிற்சிப் பாசறையில் வலியுறுத்தப்பட்டது.

news
தமிழக செய்திகள்
கரூர் துயரம்: “ஆழ்ந்த துயருறுகிறோம்!” – தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி!

தமிழ்நாட்டில் கடந்த  27-09-2025 அன்று, கரூரில் நடைபெற்ற  ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி நம் இதயங்களுக்குத் துயரத்தை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் உயிரிழந்த பரிதாபம் மிகுந்த வேதனையைத் தருகிறது.

உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை இறைவேண்டல் கலந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் சகோதர-சகோதரிகள் விரைவில் நலம்பெறவும் கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறோம். இந்த எதிர்பாராத பெருந்துயர் நிகழ்வு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. இறைவேண்டல்கள் மூலம் உங்கள் குடும்பங்களுக்கு எங்கள் நெருக்கத்தை உறுதியளிக்கிறோம். ஆறுதல் அருளும் இறைவன், இறந்தவர்களுக்கு நிலைவாழ்வை வழங்குவாராக!

துயரமான தருணத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் வேளையில், உறவினர்களின் இழப்பினால் துயருறும் குடும்பங்கள் அமைதியும் ஆறுதலும் வலிமையும் நம்பிக்கையும் பெற்றுக்கொள்ள இறைவனை இறைஞ்சுகிறோம். காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல்நலம் மற்றும் ஆன்ம நலம் பெற்றிட எங்கள் இறைவேண்டல்களில் அவர்களை நினைவுகூருகிறோம். மீண்டுமாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் அனைவருக்கும் தமிழக ஆயர் பேரவை மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்

news
தமிழக செய்திகள்
சிறப்பான நன்றி!

நம் வாழ்வின்பொன்விழா ஆண்டில்நம் வாழ்வுஇதழின் தனித்துவம், முக்கியத்துவம், இதழின் சிரமங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்கூறி, பல மக்களைநம் வாழ்வுசந்தாதாரராக மாற்றியுள்ளார் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. அருள் ஜேசுதாஸ் அவர்கள்.  குறிப்பாக, குழந்தைகளை வாசிக்க ஊக்குவிக்கும் பொருட்டு, 65 மாணவர்களுக்கு, ‘கல்விச் சுரங்கம்எனும் மாணவர் மாத இதழை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அண்மையில் வெளியிட்டவானவில் வரிசை நூல்கள் (மாணவர்களின் பன்முக ஆளுமை வளர்ச்சிக்கான 7 நூல்கள்) 65 மாணவர்கள் வாங்கிப் பயன்பெற ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட அருள்தந்தை அருள் ஜேசுதாஸ் அவர்களுக்கும், அனைத்து மறைக்கல்வி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கும் சிறப்பான நன்றி!             

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
நல்லாசிரியர் விருது பெற்ற அருள்பணியாளரைப் பாராட்டி மகிழ்கிறோம்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் - பள்ளிவிடை புனித உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்முனைவர் சாந்தகுமார். கடந்த செப்டம்பர் 5 அன்று, கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது முன்னிலையில் துணை முதலமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் இவர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். தற்போது புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற அருள்தந்தை அனைத்துச் செயல்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஓர் எடுத்துக்காட்டான ஆசிரியராகத் திகழ்கின்றார். மாணவர் சேர்க்கை, மாணவர் தேர்ச்சி, பசுமை வளாகம், சிறுவர் பூங்கா, கணினி அறைகள், இசைக்கருவிகளுடன் கூடிய கலைக்கூடம், மழைநீர் தேங்காத வண்ணம் சாலைகள், எழில்மிகு வண்ணங்களில் பள்ளிக் கட்டடங்கள், பேண்ட் வாத்திய இசைக் குழு, .பி.ஜே. அப்துல் கலாம் இலவச மாலைப் பள்ளி, விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம், ஆங்கில இலக்கண வகுப்புகள், இலவச விளையாட்டுச் சீருடை, இலவசப் புத்தகப் பைகள் என மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்து வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் இவர் மேற்கொண்ட முயற்சிகளும் உழைப்பும் எண்ணிலடங்காதவை. இவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமேநல்லாசிரியர் விருது. தந்தை அவர்கள் தொடர்ந்து கல்விப் பணியில் பல சாதனைகள் படைக்கநம் வாழ்வுஅன்போடு வாழ்த்துகிறது.                                    

- முதன்மை ஆசிரியர்