news
தமிழக செய்திகள்
16-வது பொது அவையின் இறுதி ஆவணம் வெளியீடு!

சென்னை-நசரேத்பேட்டையில், 16-வது பொது அவையின் இறுதி ஆவணத்தின் தமிழாக்கம், தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. பேராயர் அவர்களின் 20-ஆம்  ஆண்டு ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வில் இந்நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  கத்தோலிக்கத் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, தன்னைத்தானே புதுப்பிக்கும் பணியில் கூட்டொருங்கியக்கத் திரு அவையாகத் தன்னை அடையாளப்படுத்துவதற்காக, கருத்துச் செறிவுமிக்க கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தமர்வுகளை உள்ளடக்கிய உலகளாவிய 16-வது ஆயர் மாமன்றமானது, 2023 அக்டோபர் மற்றும் 2024 அக்டோபர் ஆகிய இரண்டு வெவ்வேறு தருணங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பதற்காக, தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஒப்புதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இக்கருத்துச் செறிவுமிக்க ஆவணத்தை, கோவை-நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மொழிபெயர்ப்பு செய்தனர். தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுபதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. விலை : ரூ.150/-

தொடர்புக்கு: ‘நம் வாழ்வுபதிப்பகம், 62, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.

செல்: 94980 32244

news
தமிழக செய்திகள்
பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தையின் உரை

கோவை மறைமாவட்டத்தில் உள்ள புனித செபமாலை அன்னை பசிலிக்கா தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாகும். இந்தப் பசிலிக்காவின் வரலாறு 385 ஆண்டுகள் கொண்டதாகும். இங்கு வரும் மக்கள் ஏராளமானோர் அன்னையைத் தரிசித்து இறையேசுவின் வழியாக அருள் வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

அன்னையின் அளவிட முடியாத அன்பும் அரவணைப்பும் வழிநடத்துதலும் பரிந்துரையும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நம்பிக்கை கீதங்களாக ஒளிர்கின்றன.

நம் அன்னையின் பெருவிழா வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிறு 5-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இறைமக்கள் அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் வழியாக இறைமகன் இயேசுவின் அருளைப் பெற்றுச் செல்ல எம் மறைமாவட்ட அருள்தந்தையர்கள், இருபால் துறவியர்கள் மற்றும் எம் பங்கு மக்களோடு இணைந்து இறைவனின் ஆசிர்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றேன். அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!


news
தமிழக செய்திகள்
முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது. இந்த அழகுமிக்க பசிலிக்கா மறைமாவட்டத்திற்குப் பெரும் புகழைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றார்கள். பசிலிக்கா நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாகச் சந்தித்து உரையாட வைத்து இறைவனின் அர்ச்சிப்பைப் பெற்றுக்கொண்டு நம்மைப் பிறருக்கு நல்ல மனிதர்களாக மாற்றுகின்ற ஓர் உன்னதமான இடம்.

இங்கு வரும் அனைத்து மக்களும் ஏராளமான வரங்களை மகிழ்ச்சியோடு பெற்றுச்செல்ல இந்த இறைவேண்டலின் வீடு துணைபுரிவதாக! இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். பசிலிக்கா அதிபர், அருள்தந்தையர்கள், பங்கு இறைமக்கள், வருகின்ற திருப்பயணிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


news
தமிழக செய்திகள்
நன்மைகளையும் புதுமைகளையும் வாரி வழங்குபவர் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை!

கோவை ஆயரின் ஆசியுரை

அன்புள்ளம் கொண்ட அருள்பணியாளர்களே! இருபால் துறவியரே! இறைமக்களே! ‘நம் வாழ்வுவாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் புனித செபமாலை அன்னையின் பெயரால் வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக்கொள்கின்றேன். புனித செபமாலை அன்னை நம்மை அண்டி வருவோருக்கு எல்லாம் ஏராளமான நன்மைகளையும் புதுமைகளையும் வழங்கி வருகிறார். இறைநம்பிக்கையில் நிறைவை அடைய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமை நமக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, அனைத்து மதத்தினரும் சமய நல்லிணக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அடியெடுத்து வைக்கும் புண்ணிய பூமி. அன்னை மரியாவின் பரிந்துரையை நாடிவருவோரின் வேண்டுதல் நிறைவேறி அன்னையின் வழியாக இயேசுவுக்கு நன்றி செலுத்தும்போது பார்ப்பவரின் உள்ளத்திற்குள் பேரானந்தம் நிழலாடும்.

அக்டோபர் மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதமாகும். எனவே, வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் அன்னையின் பெருவிழாவில் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறையாசிரைப் பெற்றுச்செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கின்றேன்இறையாசிர்!


news
தமிழக செய்திகள்
எதிர்நோக்கின் திருப்பயணிகள்- வின்செந்தியர்கள் வழியே!

இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலத்திற்குப் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டனர். 2025-இன் யூபிலி ஆண்டுஎதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகிறது. அவ்வகையில் சிவகங்கை மறைமாவட்டத்தில் யூபிலி ஆண்டுக்கான திருப்பயணத் திருத்தலமாக இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

news
தமிழக செய்திகள்
இளையோர் கரங்களில் மிளிரும் ‘நம் வாழ்வு’ – மின்னஞ்சல் நாளிதழ்!

அண்மையில் நாம் வெளிக்கொணர்ந்தநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper) பல தளங்களில் பலராலும் வரவேற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் பாராட்டப்படுவதும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இளையோர்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவும், அவர்களைத் திரு அவை, சமத்துவம், ஒற்றுமை, நேரிய வழி, சமூக அக்கறை, விடியல் தரும் மாற்றுச்சிந்தனை, புத்துலகம் படைக்கும் இறையரசு மதிப்பீடு என்னும் பல்வேறு தளங்களில் தெளிந்த சிந்தனை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க நாம் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

பங்கு, மறைமாவட்ட, மாநில இளையோர் அமைப்புகள், இளையோர் பணியாற்றும் பணித்தளக்குழுக்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், இளையோர் தங்கிப் பயிலும் - பணிபுரியும் விடுதிகள் எனப் பல தளங்களில்நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழ், அவர்களின் கரங்களில் தவழ்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. யாம் விரும்பியது அதுவே! இளையோரை எழுச்சிமிகு ஆளுமைகளாக உருவாக்கவேண்டும் என்பதுதான்.

இத்தகைய பெரும் கனவில் எழுந்த பெரும் முயற்சியில் அன்றாடம் தோள் கொடுக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களையும், இளையோரை வழிநடத்தும் அமைப்புகளின் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். குறிப்பாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழு, மதுரை அக்சீலியம் கல்லூரி, மாதா தொலைக்காட்சிப் பணியாளர்கள், மதுரை - அமெரிக்கன் கல்லூரி விடுதி மாணவியர், சாந்தோம் இல்லக் கல்லூரி மாணவியர் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் குழுவில் எல்லாருக்கும் இது பகிரப்படுகிறது...”, “எங்கள் அலுவலகத்தில் அனைவரும் இதை அன்றாடம் வாசிக்கிறோம்...”, “ஓய்வு நேரத்தில் என்னுடைய கணினியில் இதை நான் வாசிக்கிறேன்...” எனப் பலரும் செய்திகளை அனுப்பி வைத்திருப்பது இது எங்கும் எல்லாராலும் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

பங்கு அமைப்புகள், பக்த சபைகள், இளையோர் இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் என யாவரும் தாங்கள் கொண்டிருக்கக்கூடிய புலனக் (வாட்ஸ் அப்) குழுவில் இச் செய்திகளைப் பகிர்ந்து, மின்னஞ்சல் நாளிதழ் எல்லாருடைய கரங்களிலும் தவழ, தொடர்ந்து பேராதரவு தந்திட, அன்போடு வேண்டுகிறேன்!

வாருங்கள் இணைந்து பயணிப்போம்!

புதிய உலகு படைப்போம்!!

- முதன்மை ஆசிரியர்