news
இந்திய செய்திகள்
மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்

ஆசிரியர்கள் இளையதலைமுறையினருக்குப் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின், கலாச்சாரத்தின் முக்கிய விழுமியங்களையும், நெறிகளையும் கற்பிக்க வேண்டும். ‘எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவைஎன்றும், ‘ஆழமான அறிவைப் பெறுதல் ஞானத்தை வளர்க்க உதவும்என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆழமான அறிவு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பொறுப்பு பற்றிய புரிதலையும், கற்கும் ஆர்வத்தையும் தூண்டும். இளைஞர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தேடவும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக மாறவும், இடர்களைக் குறைத்து வாய்ப்புகளைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.”

- திரு. பவன்குமார் சிங், திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர்

news
இந்திய செய்திகள்
பணியிடத்தில் நேர்மை அவசியம்

பணியிடத்தில் நேர்மையாகப் பணியாற்றுவது அவசியம். அரசு நிர்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச்சாளர முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நேர்மையின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்எனும் குறளுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும்.”

- திரு. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

news
இந்திய செய்திகள்
சிறந்த நூல் ஆசிரியர்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்

சிறந்த நூல் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பதிப்பாளர்கள் அனைவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். புத்தகத் திருவிழா, கண்காட்சி நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் பிறகும்கூட நூல்கள் விற்பனை ஆவது இல்லை என்பது வருத்தத்துக்குரியது. அனைவரும் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். நூல்களை வாங்கினால்தான் எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.”

- திரு. . சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்

news
இந்திய செய்திகள்
வத்திக்கானின் தீபாவளி வாழ்த்து!

ஒளியின் ஆதாரமான கடவுள், தீபாவளி திருநாள் கொண்டாடுபவர்களின் மனத்தையும் இதயத்தையும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும் என்றும், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இரக்கம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்றும் வத்திக்கானின் பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் மிகுவேல் ஏஞ்சல் அயுசோ குய்சோட் மற்றும் அதன் செயலாளர் இந்துனில் ஜனகரத்ன கொடித்துவக்கு கங்கனமாலகே ஆகியோர் இணைந்து செய்தி அனுப்பியுள்ளனர்.

கிறித்தவர்களும், இந்துகளும், பிற சமய மரபுகளைச் சேர்ந்தவர்களோடும், நல்லெண்ணம் கொண்டவர்களோடும், வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அவசியம் என அவ்வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

news
இந்திய செய்திகள்
முஸ்லிம்களுக்கு ‘தாயாக’ மாறிய அருள்சகோதரி!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் தாய் என்று போற்றப்படும் 58 வயதான கார்மல் அருள்சகோதரி மரியானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அக்டோபர் 24 அன்று உயிரிழந்தார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் 2010- ஆம் ஆண்டு முதல் பாத்திமாகிரி சமூக சேவை மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த இவர், பெண்களின் நலனுக்காக அயராது உழைத்து, அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் வெள்ளத்தின் போது நிவாரணம் மற்றும் ஆறுதல் ஆகிய இவரின் செயல்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

அருள்சகோதரி மரியானி தனது சமூகப் பணிகளுக்காக கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை, பல உள்ளூர் மற்றும் தேசிய அமைப்புகளிடமிருந்து பல விருதுகளைப் பெற்றார். முஸ்லிம்களுக்குஅம்மாவாகமாறி பல உதவிகளையும், சீர்திருத்தங்களையும் செய்த இவரின் இழப்பு மிகப்பெரியது.

news
இந்திய செய்திகள்
மருத்துவ மாணவியாகக் கந்தமால் சிறுமி!

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து ஒரு குழந்தையாகத் தப்பிய ஓர் இளம் கத்தோலிக்கப் பெண்ணான லின்சா பிரதான், தேசியத் தகுதி தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்றுள்ளார்.

கிறிஸ்துவின் வல்லமைதான் கடினமான தேர்வில் வெற்றி பெற என்னைப் பலப்படுத்தியதுஎன்றும், “ஒரு மருத்துவர் என்ற முறையில், மத மற்றும் சாதி வேறுபாடுகளைக் கடந்து, எனது ஆண்டவர் இயேசுவைப் போல மக்களுக்குச் சேவை செய்வேன்என்றும் லின்சா பிரதான் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.