news
இந்திய செய்திகள்
இந்தியாவிலிருந்து புதிய கர்தினால்!

கேரளாவின் சங்கனாச் சேரி சீரோ-மலபார் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பேரருள்தந்தை ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் (51) அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கிறார். இவர் ஆகஸ்டு 11, 1973 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். ஜூலை 24, 2004 அன்று  குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். தென் கொரியா (2009-2012), ஈரான் (2012-2014) ஆகிய நாடுகளில் தூதரகத்தின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கோஸ்டாரிகா (2014-2018), வெனிசுலா (2018-2020) ஆகிய நாடுகளில் துறவிகளின் ஆலோசகரானார். 2020-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் திருத்தந்தையின் பயணங்களை ஒருங்கிணைப்பதிலும் நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
அருள்செல்வர் மொழிபெயர்ப்பு விருது - 2024
‘அருள்செல்வர்’ பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், ‘கதவுகள் திறக்கப்படும் போதினில்’ (When the Doors open… by Anungla Zoe Longkumar) என்ற மொழிபெயர்ப்பு நூலைப் பாராட்டி பேரா. முனைவர் ச. வின்சென்ட் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.  விருது பெற்றுள்ள ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. வின்சென்ட் அவர்களுக்கு, ‘நம் வாழ்வு’ தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறது.
news
இந்திய செய்திகள்
ICPA – Fr. Louis Careno Award 2024 For Excellence in Journalism

அருள்பணி. அந்தோணி பங்குராசு, ஆசிரியர், நியூ லீடர்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட நிர்வாகத்தில் மலர்ந்து, தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில் வலம் வந்து, உலகெங்கும் பயணித்து, 137 ஆண்டுகால வரலாற்றுச் சாதனை படைத்து வரும் ‘நியூ லீடர்’ இதழுக்கு, சிறந்த இதழுக்கான ‘ICPA-2024’ விருது வழங்கப்பட்டுள்ளது.  சீரிய சிந்தனை கொண்ட தலையங்கத்தாலும், மானுட மதிப்பீடுகளைச் சுமந்து வரும் கட்டுரைகளாலும், ஆழமான இறையியல், விவிலியம், ஆன்மிக, உளவியல் கட்டுரைகளாலும் சமூக மாற்றத்திற்கான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘நியூ லீடர்’ இதழின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தந்தை பங்குராசு அவர்களையும், ‘நியூ லீடர்’ இதழின் நிர்வாகத்தினரையும் ‘நம் வாழ்வு’ வாழ்த்துகிறது.

news
இந்திய செய்திகள்
SIGNIS-வாழ்நாள் சாதனையாளர் விருது-2024

அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் CEO - மாதா தொலைக்காட்சி, Director- சாந்தோம் சமூகக் கலைத்தொடர்பு மையம்

சீரிய சிந்தனையாலும், கடின உழைப்பாலும், நேரிய நிர்வாகத்தாலும் உலகமெங்கும்இல்லந்தோறும் இறையாட்சிபணியில் மாதா தொலைக்காட்சி உருவாகத் தன்னையே அர்ப்பணித்து, மாபெரும் வெற்றிகண்டு, தமிழ்நாடு திரு அவையில் தவிர்க்க இயலாத ஊடகப் பேராளுமையாய்த் தடம் பதித்திருக்கும் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அவர்களின் பணிகளைப் பாராட்டி, 2024-ஆம் ஆண்டிற்கானவாழ்நாள் சாதனையாளர் விருதை, SIGNIS – India வழங்கியிருக்கிறது. தந்தையின் பணிகளை அருகிருந்து அறியும்நம் வாழ்வுதன் வாசகர்களுடன் வாழ்த்துக் கூறி மகிழ்கிறது.

news
இந்திய செய்திகள்
காலிப் பணியிடங்களுக்குக் குவியும் விண்ணப்பங்கள்

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் நிலையிலும் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது சில மாநிலங்களின் காலிப் பணியிடங்களுக்குக் குவியும் விண்ணப்பங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தொழிலாளர்கள் தேவை அதிகமுள்ள துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு தரப்பினர் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நாட்டின் பெரும் பகுதி மக்கள் வாங்கினால் மட்டும்தான் பொருள்களின் நுகர்வு அதிகரிக்கும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த பொருள் நுகர்வு இன்னும் எட்டப்படவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.”

- திரு. இரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர்

news
இந்திய செய்திகள்
‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘மதுவிலக்கு’

“மதுவிலக்கு என்பது நான் கண்டுபிடித்த புதிய கோரிக்கை அல்ல; கௌதம புத்தர் காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை இருந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தியடிகளின் இரு கொள்கைகளான ‘மதச்சார்பின்மை மற்றும் ‘மதுவிலக்கு இரண்டிலும் நமக்கு உடன்பாடு உண்டு. சுகாதாரமான வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதனால்தான், இந்திய அளவில் மதுவிலக்கு வேண்டும் என்கிறோம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ளவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மதுவிலக்கு கோரப்படுகிறது. மதிப்பிட முடியாத மனிதவளத்தைப் பாதுகாக்க வேண்டும்.”

- திரு. திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்