news
இந்திய செய்திகள்
பணம் இல்லையா, விளையாட முடியாது

“பணம் இல்லையா, விளையாட முடியாது என்பதே இந்தியாவில் இன்று பெரும்பாலான தடகள வீரர்களின் உண்மை நிலை. அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாமல் அவதிப்படுவதுடன், நாட்டின் விளையாட்டு அமைப்பு மீதான ஏமாற்றம் காரணமாக விளையாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிடுவதைவிட மிகப்பெரிய இழப்பு. இந்தியாவிடம் அளப்பரிய திறமை உள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் வெளிப்படையான முறையில், நியாயமாகக் கிடைப்பது மட்டுமே வெற்றிபெறக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்களும் சமமாகப் பலனடைவதை உறுதி செய்யும்.”

- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
பள்ளி மாணவர்கள் புகையிலை பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க

“இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக, பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள்கள் விற்பதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலை பொருள்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.”

- திரு. பரத சக்கரவர்த்தி, உயர் நீதிமன்ற நீதிபதி

news
இந்திய செய்திகள்
நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரச் சூழலை உருவாக்க

“அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரச் சூழலை உருவாக்க அலுவல் மொழியை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மொழியை வலுப்படுத்த வேண்டும். மொழி வளர்ச்சியை இரயில்வே பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும்.”

- திரு. கௌசல் கிஷோர், தெற்கு இரயில்வே கூடுதல் பொது மேலாளர்

news
இந்திய செய்திகள்
வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கை

“வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பெண் வெறுப்பு அல்லது எந்தவொரு சமூகப் பிரிவுக்கும் பாதகமான கருத்துகளை வெளியிடாமல் கவனமாக நீதிபதிகள் செயல்பட வேண்டும். இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் ‘பாகிஸ்தான் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், அவ்வாறு குறிப்பிடுவது அடிப்படையில் நமது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.”

- உச்ச நீதிமன்றம்

news
இந்திய செய்திகள்
‘இந்தியாவில் தயாரிப்போம்’

“இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் குறித்து பா.ச.க. பெரிதாகப் பேசுகிறது. ஆனால், அனைத்து ஒப்பந்தங்களும் அதானி வசமாகின்றன என்பதே உண்மை நிலவரம். ஓர் இஸ்ரேல் நிறுவனம் ஆயுதங்களைத் தயாரிக்கிறது. அதில் தனது முத்திரையை இடுகிறார் அதானி. இதுதான் ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டமா? பாதுகாப்பு உற்பத்தி மட்டுமன்றி, அனைத்துத் துறைகளிலும் இதுவே நிலைமை.”

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கான தொடர் போராட்டம்

 “நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை சூழல் தொடர்வது துரதிருஷ்டவசமானது. பெண்களின் தொடர்ச்சியான போராட்டம், அவர்களைப் பலவீனமாகக் கருதும் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகம் மற்றும் பழமைவாதத்திற்கு எதிரானது. சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆழமாக வேரூன்றிய சில பழமைவாதம், பெண்களின் சமத்துவத்திற்குத் தடையாக இருக்கிறது. எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும் முக்கியமானதாகும். நமது நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.”

- இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு