news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“தேர்தல் ஆணையம், மத்தியில் ஆளும் பா.ச.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. முழு நாட்டிலும் தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக பீகாரிலும் ‘பா.ச.க. - தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி நடக்கிற து. அதாவது, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்த (Special Intensive revision – SIR) செயல்முறை, வாக்காளர் பட்டியலில் போலிப் பெயர்கள் சேர்ப்பதையும், உயிருள்ளவர்களை ‘இறந்தவர்கள் என்று குறிப்பிடுவதையும்தான் செய்கிறது. அரசியலமைப்பையும் சனநாயகத்தையும் கேலிக்குள்ளாக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல், தேசத் துரோகத்திற்குச் சமம்!”

உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

“தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர்களை அகற்றி, மகாராஷ்டிராவில் பா.ச.க. வெற்றிபெற்றது. இப்போது பீகாரிலும் அதைச் செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில், தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இது மாநில அரசின் நிர்வாகத்தைக் குலைக்கும் முயற்சி, பா.ச.க. ஓர் ஊழல்வாத, வாக்குத் திருடர்களின் கட்சி!

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள முதல்வர்

“விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும், சமூகம் சார்ந்த விரோத மனநிலை எடப்பாடிக்கு இருக்கிறது என்கிறேன். தொடக்கத்திலிருந்து தலித் அமைப்புகளில் பணியாற்றி, இப்போது தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். என்னைப் பார்த்து, ‘பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்துகிறார் எனில், சமூக விரோத எண்ணங்கள் அவருக்குள் புதைந்திருக்கின்றன என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இன்னும் சாதிய விரோத மனநிலை இருப்பது வேதனையளிக்கிறது. அது தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதல்ல.”

திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூக அரசியலில் புரட்சி செய்யும் ‘நம் வாழ்வு’ இதழுக்கு உயரிய விருது!

இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் அமைப்பின் (Indian Catholic Press Association) 30-வது தேசிய மாநாடு புனே நகரின் ஞானதீப கல்விக்கூடத்தில் உள்ள இனிகோ சதன் அரங்கத்தில் கடந்த மூன்று நாள்களாக (செப். 19-21) நடைபெற்றது.

இந்த மாநாட்டில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் சமூக, ஆன்மிக, அரசியல் மற்றும் வாழ்வியல் வழிகாட்டியாக விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழின் சிறப்பான பணிகளைப் பாராட்டி இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகை அமைப்பு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவ்விருதினை அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்கியூரா, ICPA-இன் இந்திய ஆயர் பேரவை ஆலோசகர் மேதகு ஹென்றி டிசூசா அவர்களும், ICPA-இன் தலைவர் உயர்திரு. இக்னேசியஸ் கொன்சால்வா அவர்களும் வழங்க, ‘நம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.

இவ்விருதைப் பெற்றுக்கொண்ட அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவையின் மேனாள் மற்றும் இந்நாள் ஆயர் பெருமக்களுக்கும், முதன்மை ஆசிரியர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மற்றும் சந்தாதாரர்களுக்கும் இவ்விருதினை அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.

news
இந்திய செய்திகள்
‘நம் வாழ்வு’ முதன்மை ஆசிரியர் ICPA செயற்குழு உறுப்பினராகத் தேர்வு!

இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் தென் மாநிலங்களின் பிரதிநிதியாக, தமிழ்நாடு கத்தோலிக்க இதழானநம் வாழ்வுவார இதழின்  முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனேயின் ஞானதீப கல்விக் கழகத்தின் வளாகத்தில் உள்ள இனிகோ சதனில், இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் (ICPA) ஆண்டுப்  பொதுக்குழுக் கூட்டம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில்புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தலில்இந்தியன் கரன்ட்ஸ்பத்திரிகையின் மேனாள் ஆசிரியர் அருள்பணி. சுரேஷ் மேத்யூ OFM CAP தலைவராகவும், அருள்பணி. ஜோ எருப்பக்காட் SSP துணைத்தலைவராகவும், அருள்சகோதரி டெஸ்ஸி ஜேக்கப் SSPS செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்பொருளாளராக அருள்பணி. சஜித் சிரியக் SSP, இணைச் செயலாளராக ரெஞ்சித் லீன், தென் மாநிலங்களின் பிரதிநிதியாக தமிழ்நாடு கத்தோலிக்க இதழானநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன், வடக்கு மண்டலத்திற்கு அருள்பணி. . கௌரவ் நாயர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கு ராஜேஷ் கிறிஸ்டியன், நிறுவன உறுப்பினராகதி நியூ லீடர்பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான அருள்பணி. ஆண்டனி பங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தல், மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் கோயல்ஹோ தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் மேனாள் தலைவர் இக்னேஷியஸ் கொன்சால்வஸ் அவர்களுக்குச் சிறப்பாக நன்றி தெரிவித்தனர். இந்த ICPA, கத்தோலிக்க ஊடக வல்லுநர்களுக்கான ஒருங்கிணைந்த தளம் என்பது குறிப்பிடத்தக்கது.  

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டம் என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதே சட்டக்கல்வியின் உயரிய நோக்கம். விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத்தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்குத் தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது. நீதிபரிபாலனச் சமத்துவம், சகோதரத்துவம், நீதிநெறி என்பதே பல வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங்

எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் தேவையற்ற குப்பையும் இருக்கின்றன. நாம்தான் குழந்தைகளுக்குச் சரியானதை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. தொழில்நுட்பத்திற்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்தவேண்டும். அறத்தின் வலிமையையும் நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத் தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் புரியவைக்க வேண்டும். கல்வி தொடர்பாகச் செய்யும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சமத்துவம், சமூகநீதியின் தேவையைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு, ஆசிரியர்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.”

- உயர்திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எனக் கூறுவது சரித்திரப் பிழை. பெண் சமுதாயத்திற்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியுள்ளனர். பல்வேறு தடைகளைத்தாண்டி இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவு செய்தவர் கார்னிலியா. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்தச் சமுதாயம் எப்போது பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ, அப்போதுதான் மண்ணும், நாடும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி வர வேண்டும்சமூகமும் காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. ஆகவே, பெண் வழக்கறிஞர்கள் நோக்கமும் செயல்பாடுகளும் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதைப் பீகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராகப் பீகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப்பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும். தற்போது பா.ச.க. தலைவர்களை ‘வாக்குத் திருடர்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

“அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாமீது 50 விழுக்காடு வரி விதித்துள்ளார். இரஷ்யா கச்சா எண்ணையைக் குறைந்த விலைக்குத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அம்பானிக்கும் அதானிக்கும்தான் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு இரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.”

- திரு. செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. அதேபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடும் தரவேண்டும். தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.”

- இரா. முத்தரசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர்

news
இந்திய செய்திகள்
அரசியல் களம் - அதிரும் எதிரொலி!

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி, விவசாயிகளைக் காப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக மோடி கூறினார். ஆனால், பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தவறிவிட்டார். அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ள சிறு தொழில்துறை, நவரத்தின ஆபரணத் தயாரிப்புத் தொழிலில் இலட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டித்தழுவுவது, சிரித்து மகிழ்வது, தற்படம் எடுத்துக்கொள்வது போன்ற பிரதமர் மோடியின் மேம்போக்கான வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது.”

திரு. மல்லிகார்ஜீன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

டிரம்ப் இன்றைக்கு என்ன கூறினார் என்பதை அறிவீர்களா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் மோடியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ‘24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்திவிட வேண்டும்என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்குப் பிரதமர் மோடி உடனடியாகக் கீழ்ப்படிந்திருக்கிறார். 24 மணி நேரம் அவகாசம் அளித்தபோதும், பாகிஸ்தான் உடனான சண்டையை அவர் அறிவுறுத்திய 5 மணி நேரத்தில் பிரதமர் நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆகஸ்டு 27 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.”

திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

பீகாரில் நியாயமாக வாக்குப் பதிவு நடைபெற்றால் பா... கூட்டணி தோற்றுவிடும் என்பதால், மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாகத் தேர்தல் ஆணையத்தைப் பா... மாற்றிவிட்டது. 65 இலட்சம் பீகார் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது சனநாயகப் படுகொலையாகும். சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதைவிட பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா?”

மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இந்திய மக்கள் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மரபணுவைப் பெற்றுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகாலச் சமூக சமத்துவ மேன்மை குறித்து நாம் பேசுகிறோம்; அவர்கள் பா..., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்போதைய அமைப்பானது 40,000 ஆண்டுகள் தொன்மையானது என்று பேசுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா... தோற்கடிக்கப்பட்டது. தற்போது பீகாரிலிருந்து அக்கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.”

திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்போடு பயணித்து வருகிறது. ‘தலைவர்களைக் களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம்தானா?’ என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. அரசியல் ஆர்வம், கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை ஆகிய எண்ணங்களுடன் எந்தத் துறையிலிருந்து யார் வந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால் அவர்கள் எந்த உச்சத்தையும் பெற முடியும் என்பதை தமிழ்நாட்டு அரசியல் உணர்த்தி இருக்கிறது

திரு. மு. தமிமுன் அன்சாரி, மனிதநேய சனநாயகக் கட்சித் தலைவர்

சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாற்று அரசியல் பேசலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமின்றி எந்தத் துறையிலிருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், மாற்று அரசியல் பேசி புதிய கட்சி தொடங்குவோர் இப்போது உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து எந்த வகையில் மாற்றுக்கொள்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். திரைக் கவர்ச்சி மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தரும் என நடிகர்கள் புதிய கட்சிகள் தொடங்கிமாற்றுஎனக் கூறி ஏமாற்றமாக மாறியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.”

திரு. கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி