“ஒரு
படைப்பானது அது தன்னை என்றும் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும்; இதுதான் படைப்பு என அறியப்படக்கூடிய அந்த ஒரு
கணத்திலேயே அது தன் முகத்தை வேறு விதத்தில் காட்டித் தரும். அதுதான் படைப்பின் சிறப்பு. எளிய மனிதர்களின் சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய படைப்புகளுக்கு என்றும் அழிவில்லை. அவை காலம் கடந்தும் நிலைக்கும். படைப்பு எனும் ஆகிருதியை உணர்ந்து பார்க்க வேண்டும்; தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற காதலினால் எழுந்து நிற்கக்கூடியவர்கள்தான் படைப்பாளர்கள்.”
- திரு. ஆர். மகாதேவன்,
உச்ச
நீதிமன்ற
நீதிபதி
“அண்மைக்காலமாக ‘ஆன்லைன்’ முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதிநிறுவனங்களின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிக இலாபம் கொடுப்பதாகக் கூறும் ‘ஆன்லைன்’ முதலீடு விளம்பரங்களை நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கிக்கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுமக்கள் ஏதேனும் பணமோசடியில் சிக்கினால் உடனடியாகச் சைபர் குற்றப்பிரிவு ‘1930’ என்ற இலவசத் தொலைப்பேசி எண் மூலமாகவோ அல்லது http://cybercrime.gov.in
என்ற வலைத்தள முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.”
- திரு. அருண்,
காவல்
ஆணையர்
“அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில், ஆட்டோ உதிரிப் பாகங்கள் உற்பத்தி, கடல்சார் பொருள்கள், காலணி உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்து வருகின்றது. அமெரிக்காவின் வரிவிதிப்பு முறை, அது சார்ந்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். இதனால், பொருளாதாரத்தில் நிலையற்றத்தன்மை இருக்கவே செய்கிறது. சாதகமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று தெரிகிறது.”
- திரு. த. உதயச்சந்திரன்,
நீதித்துறை
முதன்மைச்
செயலர்