news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஆங்கில மொழி என்பது அணை கிடையாது; அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல; அது அதிகாரம் அளிப்பது. ஆங்கிலம் சங்கிலி அல்ல; சங்கிலியை உடைக்கும் கருவி. இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்றவேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கவேண்டும். உலகத்துடன் போட்டியிடுவதற்கான பாதை அதுதான்.”

- உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே உயர்வானது. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட சனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுபவை மட்டுமே. மேலும், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மட்டுமே நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மாறாக, அதன் அடிப்படைக் கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் மாற்ற இயலாது. நீதித்துறைக்கு அதிகாரம் மட்டுமல்ல பொதுமக்களின் உரிமைகள், அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் கடமையும் உள்ளது.”

- மாண்புமிகு பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

தமிழர்களின் தொன்மை வெளி உலகுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வு பற்றிய உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. நல்ல வேளையாகக் கீழடியில் நடைபெற்ற அகழாய்வைத் தொடர்ந்து அங்குக் கிடைத்த பொருள்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை நிலைநாட்டியுள்ளது. இந்த ஆய்வு இன்னமும் தொடரவேண்டும். தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்ற உண்மை நிலை நிறுத்தப்படும்.”

- உயர்திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம் இன்றைய குழந்தைகளைச் சார்ந்துள்ளது. அவர்கள்தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெண்களை மதிக்கவும், அவர்களுக்குச் சம உரிமை வழங்கவும், வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால் தமிழ்ச் சமுதாயம் முன்னேறும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.”

- மாண்புமிகு அமைச்சர் பி. கீதா ஜீவன்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான் அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். சமூக ஊடகங்கள் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும். அதனால் நேர மேலாண்மை மிக முக்கியம். எனவே, சமூக  ஊடகங்களுக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது. மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது போதைப்பொருள் பழக்கம். போதைப்பொருள்களுக்கு இங்கே ஒரு தேவை இருக்கிறது. அதனால்தான் பிற மாநிலங்களில் இருந்து அது கடத்தி வரப்படுகிறது. அந்தத் தேவையை இல்லாமல் செய்வதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது.”

- திரு. சங்கர், ஆவடி காவல் ஆணையர்

news
இந்திய செய்திகள்
ஜலந்தர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

ஜூன் 7, சனிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இந்தியாவிலுள்ள ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு ஜோஸ் செபாஸ்டின் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். 1962, டிசம்பர் 24 அன்று கேரளாவில் உள்ள பாலை மறைமாவட்டத்தின் களக்கட்டி என்னும் ஊரில் பிறந்த இவர், 1991, மே 1 அன்று ஜலந்தர் மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். உரோம் உர்பானே திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டத்தில் முதுகலைக் கல்வி கற்றார். ஜலந்தர் மறைமாவட்டத்தின் துணைவேந்தர், மறைக்கல்வி இயக்குநர், ஜலந்தரிலுள்ள தமத்திருத்துவக் கல்லூரியின் தத்துவவியல் துறையின் தலைவர், கிறிஸ்து அரசர் பள்ளி இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் தனது பணிகளை ஆற்றியவர் புதிய ஆயர்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பூமி கிரகத்தைக் காக்கவும், வளங்களைப் பாதுகாக்கக் கூட்டாக உழைக்கவும் மக்கள் மீண்டும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமைப் பூமியை உருவாக்க வழி வகுக்கும்.”

- மாண்புமிகு திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறு வரையறையும் தற்செயலானவை இல்லை. தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படிவரை வந்துவிட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. நமது மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்திற்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ் அல்லாத ஒரு மொழி, திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் 73 மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும், பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தாம். இந்த நான்கு மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்களைத் தமிழ் கொண்டுள்ளது.”

திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தைக்கான நன்றிப் பெருவிழா!

2025, ஜூன் 1 அன்று புதுதில்லி உயர் மறைமாவட்டம், கடவுளின் கொடையாம் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்காக நன்றிப் பெருவிழா திருப்பலி ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் திருத்தூதர் லியோ போல்டோ ஜெரல்லி திருப்பலிக்குத் தலைமையேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மேலும், பேராயர் அனில்குட்டோ, ஆயர் தீபக், அருள்தந்தையர்கள்,  அருள்சகோதரிகள்  மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.

news
இந்திய செய்திகள்
சீரோ-மலங்கரா தலத் திரு அவைக்குப் புதிய ஆயர்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலம் சீரோ- மலங்கரா மாவேலிக்கரா மறைமாவட்டத்திற்கு, மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். ஆயர் மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்கள் 1955-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மணக்காரகாவில் பிறந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2022, மே 15 அன்று ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர் திருவனந்தபுரம் துணை ஆயராகவும்  பணியாற்றியுள்ளார்.