news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.”

- உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் சாத்தியக்கூறு உள்ளது. நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அது உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் தீர்க்கமான, விரைவான, வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். மேலும், நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றவுடன் அரசின் மற்றொரு நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதி பதவியை இராஜினாமா செய்வது நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவிகித நிறுவனங்கள்தாம் 50 சதவிகிதப் பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படிப் பணக்கார நிறுவனங்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. இங்குக் கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் மூன்று வேளை சாப்பாடு, அவர்களது குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.”

- மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ்

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தை இந்திய நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு

வத்திக்கானில் நடந்த ஒரு கூட்டத்தில் CBCI தலைவரான திருச்சூர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் திருத்தந்தையை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய மக்கள் அனைத்துச் சடங்குகள் மற்றும் சமயங்களைக் கடந்து  திருத்தந்தை லியோ அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறிய பேராயர், “திருத்தந்தையின் வருகை நம்பிக்கையாளர்களுக்கு ஓர் ஆழமான ஆசிராகவும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒற்றுமையின் வலுவான அடையாளமாகவும் இருக்கும்என்றும் தெரிவித்தார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பல குடும்பங்கள் தங்கள் சொத்துகளை விற்றுப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது இங்கே சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணம் கொடுத்துக் கல்லூரியில் சேர்ப்பதால்நான் எப்போது விழுந்தாலும் பணம் கொடுத்துத் தூக்கி விடுவார்கள்என்கிற தவறான எதிர்பார்ப்பைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். எனவே, பணம் கொடுத்துச் சேரவேண்டிய நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, எங்கெல்லாம் தகுதியின் அடிப்படையில் சேர முடியுமோ, அங்குப் போட்டியிட்டுச் சேருவதற்கு அரசுக் கல்வி நிறுவனங்கள்தான் ஒரே இடம்.”

- கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்

ஒரு நாட்டில் வறுமை ஒழிய, வேலையில்லாத் திண்டாட்டம் குறைய உயர்கல்வி மிக மிக அவசியம். ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்கல்வி பெற்றாலே, அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக நிச்சயம் வலுப்பெறும் என்பதுதான் உண்மை. ஒரு குடும்பத்துக்கான அதே அளவுகோல்தான் இந்த நாட்டுக்கும் சரி, மாநிலங்களுக்கும் சரி. எனவே, நாம் எந்த அளவுக்கு உயர்கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதைப் பொறுத்துதான் நமது வளர்ச்சி, இலக்கு எல்லாமே.”

- முனைவர் கோ. விசுவநாதன், வேந்தர், வி..டி. பல்கலைக்கழகம், வேலூர்

சிறிய குடும்பங்களில் பெண்களுக்குப் பெரும் சொத்தாகவும், உடனடியாகப் பணம் பெற அரிய வழியாகவும் இருப்பது தங்க நகைக் கடன்தான். திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள், அவசர நெருக்கடியான காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. வசதியானவர்கள் வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தி வந்தாலும், எளியவர்கள் அடமானத்தையே தங்கள் இறுதித் தீர்வாகப் பார்க்கிறார்கள். நகைக்கான  அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.”

- முனைவர் வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
இந்தியா-பாகிஸ்தானிடையே அமைதி: கர்தினால் வேண்டுகோள்

ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் 26 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற பதற்ற நிலைகளும் இராணுவத் தாக்குதல்களும் தற்போது இடைக்காலப் போர் நிறுத்தத்தால் அமைதி அடைந்துவரும் நிலையில், நிரந்தர அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார் மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் கிரேசியாஸ். “இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒரே கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் எண்ணப்போக்குகளையும் உணர்வுகளையும் பொதுவாகக் கொண்டிருப்பதால், நேரடியாக உட்கார்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது இரு நாடுகளுக்கும் இலகுவாக இருக்கும்என்றார் அவர்.

news
இந்திய செய்திகள்
திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் மாநிலங்களவையின் துணைத் தலைவர்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் இந்தியாவின் பிரதிநிதியாக மாநிலங்களவையின் துணைத் தலைவர் திருமிகு. ஹரிவன்ஸ் சிங் மற்றும் நாகலாந்து மாநிலத்தின் துணை முதலமைச்சர் யாந்துங்கோ பேட்டர்ன் ஆகியோர் பங்கெடுத்து இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பணியேற்புத் திருப்பலிக்குப் பிறகு திருத்தந்தையைச் சந்தித்த திருமிகு. ஹரிவன்ஸ் சிங், திருத்தந்தையின் ஆன்மிகத் தலைமைக்கு இறையாற்றலும் ஞானமும் கிடைக்க உளமார்ந்த வாழ்த்துகளையும் இறைவேண்டலையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சமயங்களிடையிலான ஒற்றுமை குறித்த திருத்தந்தையின் செய்தியை வெகுவாகப் பாராட்டினார்.

news
இந்திய செய்திகள்
இந்திய - தமிழ்நாடு ஆயர் பேரவையின் நினைவூட்டல்

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பெயரைத் திரு அவைக்காகத் திருப்பலியில் மன்றாடும்போதுதிருத்தந்தை 14-ஆம் லியோஎன்று கூறுவதற்குப் பதிலாகதிருத்தந்தை லியோஎன்று மட்டும் உச்சரிக்கவேண்டும். மேலும், 14-ஆம் சிங்கராயர் என்று உச்சரிப்பது தவிர்க்கப்படவேண்டும் என இந்திய ஆயர் பேரவை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆயர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது முதல் பெயரை மட்டும் உச்சரிக்க வேண்டும் எனவும் மேனாள் ஆயர்கள் திருப்பலி நிறைவேற்றும்போதோ அல்லது பங்கெடுக்கும்போதோ அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் எனவும் இந்திய ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.