“மாணவர்கள்
தங்களின் அறிவு, திறமையை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு ஆகியவற்றில் பங்களிப்பை வழங்கி நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தங்கள் கல்வியை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இறுதிவரை புதியனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அப்போதுதான் அவர்கள் நிலைத்திருக்க முடியும். எதிர்காலத் தேவைகளை உணர்ந்து வேலை தேடுபவர்களாக அல்லாமல், தாங்களே புதிய முயற்சிகளை மேற்கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”
- உயர்திரு. எம். நிர்மல்
குமார்,
சென்னை
உயர்நீதிமன்ற
நீதிபதி
“அனைத்து மாவட்டங்களிலும் பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள்
அமைப்பதற்கான தடையில்லாச் சான்று, மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்படும் இடத்தின்
சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுப் பொதுச்சட்டம் மற்றும் ஒழுங்கு துறை மூலமாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. ஆகவே, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டடத்திற்கு அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை அமைக்கலாம். இதற்குத் தடையாக எந்தச் சக்திகள் இருந்தாலும் அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்.”
- மாண்புமிகு. நாசர், சிறுபான்மை
நலத்துறை
அமைச்சர்,
தமிழ்நாடு
“தற்போது சி.பி.ஐ.
-இன் விசாரணைப் போக்கு விமர்சிக்கும் வகையில்தான் உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்துச் செயல்படுகின்றனர். சில வழக்குகளில் வலுவான ஆதாரங்கள் இருந்தும், உயர் அதிகாரிகளை விடுவித்து, கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டுகின்றனர். சி.பி.ஐ.
அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. சில வழக்குகளில் தேவையற்றவர்களைக் குற்றவாளிகளாகச் சேர்ப்பது, தேவையற்ற விசாரணையைத் தொடர்வது, ஆவணச் சாட்சியங்களை ஆய்வு செய்யாமல், அறிவியல்பூர்வ தடயங்களைச் சேகரிக்காமல் முக்கியக் குற்றவாளிகளை விடுவித்துவிட்டு விசாரணை நடத்துகின்றனர். இதன் காரணமாக, சி.பி.ஐ.மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சி.பி.ஐ.
விசாரணை அமைப்பு தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கிறார்களா?\"
- நீதிபதி கே.கே.
இராமகிருஷ்ணன்,
உயர்நீதிமன்றம்,
மதுரை