news
இந்திய செய்திகள்
தவக்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

கத்தோலிக்கத் திரு அவை தவக்காலத்தில் 10,000 மாற்றுத் திறனாளிகளுக்குகாரிதாஸ் இந்தியா  சமூக சேவை அமைப்பின் வழியிலும், டெல்லி அர்சபாகம் மற்றும் இந்தியத் துறவற அமைப்புகளின் ஒத்துழைப்புடனும்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை, ஆதரவு, உதவிப் பொருள்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி, வேலை மற்றும் மருத்துவ சேவைகள் தடையின்றிக் கிடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.


news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்றினால் மத நல்லிணக்கம் துளிர்க்கும். மதத்தைக் கையில் எடுத்து அதற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சினை வருகிறது. இந்துகளிடம் இசுலாம், கிறித்தவ மதங்களைஅந்நிய மதம்என வேற்றுமைப்படுத்துகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். பிரித்தாலும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்கப் பார்க்கிறது பா... சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.”

- திரு. தொல் திருமாவளவன், மக்களவை உறுப்பினர், தலைவர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்தியாவில் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இளைய தலைமுறையினருக்குத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தற்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதேவேளையில் பட்டச் சான்றிதழ் மட்டும் அந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தராது. திறன்கள் இல்லாத சான்றிதழ் வெறும் வெள்ளைத் தாளுக்குச் சமம். மாணவர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கற்றுக்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து நன்கு புரிந்து கொண்டால், பயணிக்க வேண்டிய பாதை அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படும். திறன் மேம்பாட்டுக் கல்வி ஒரு நபரின் திறன்களை மேம்படுத்தி, அவரது இலக்குகளை அடைய உதவும்; அது சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரும்.”

- உயர்திரு. குமார் மொலுகரம், துணைவேந்தர் உஸ்மானிய பல்கலைக்கழகம்

வரலாற்றில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எப்போதும் மக்களிடையே ஒரு பிளவைத் தொழில்நுட்பம் தோற்றுவிக்கும்; அப்போது அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில் நுட்பத்தைக் கையாண்டு வரலாற்றிற்கு நிலையான சான்றுகளை உருவாக்குகிறார்கள்.”

- முனைவர் திரு. வைகைச் செல்வன், மேனாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
அஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக அருள்பணி. ஜான் கார்வாலோ அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1969- ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று உடுப்பி மறைமாவட்டத்தில் உள்ள மார்கோலியில் பிறந்த அருள்பணி. ஜான் கார்வாலோ,  மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், நிர்மலா நிகேதனில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1996- ஆம் ஆண்டு மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற இவர் பங்குத்தந்தை, புனித பவுல் ஆலய உதவிப் பங்குத்தந்தை, பள்ளி, கல்லூரிகளின் முதல்வர், மறைமாவட்டச் சமூகப்பணிக் குழுக்களின் பொறுப்பாளர், உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டச் சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளைச் சிறப்பாக ஆற்றியவர். அஜ்மீரில் உள்ள புனித பவுல் பள்ளியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

news
இந்திய செய்திகள்
நற்கருணை அவமதிப்பு!

பிப்ரவரி 5 அன்று பெங்களூரு மறைமாவட்டத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனிதமான நற்கருணையுடன் நற்கருணைப் பாத்திரம்  திருடப்பட்டது. இந்நிகழ்வு குறித்து மறைமாவட்டப் பேராயர் பீட்டர் மச்சாடோ தன்னுடைய அறிவிப்பில்இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆலயத்திலுள்ள பலிபீடத்தில் வைக்கப்பட்ட நற்கருணை பேழையை உடைத்து நற்கருணைப் பாத்திரத்தைத் திருடியுள்ளனர்என்றார். மறைமாவட்டத் தகவல் தொடர்பாளர் அருள்பணி. சிரில் விக்டர் ஜோசப், “நற்கருணைப் பாத்திரத்தின் தங்க நிறத்தைப் பார்த்து, அதைத் தங்கம் என நினைத்துத் திருடியிருக்கலாம்என்றார். மேலும், “காவல்துறை நற்கருணைப் பாத்திரத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், திருடப்பட்ட நற்கருணைப் பாத்திரம் மற்றும் அதன் அவமதிப்பு எங்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறதுஎன்றார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நமது நான்கு அண்டை மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் கணக்கெடுப்பை நடத்த முதல்வர் தயங்குவது ஏன்? ஆந்திராவில் அனைத்துச் சமூகத்தினருக்கும் தனி வாரியம் உள்ளது; தமிழ்நாட்டிலும் அதுபோன்று அமைய வேண்டும். அப்போதுதான் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் எல்லாச் சமூகத்தினரையும் தூக்கிவிட முடியும்.”

- உயர்திரு. மருத்துவர் இராமதாஸ், பா... நிறுவனத் தலைவர்

கோபப்படுவது மனிதர்களின் இயல்பு. சினம் கொள்வதை வெவ்வேறு வகையாக வரையறுக்கலாம்; தனிப்பட்ட முறையில் ஒருவர்மீது கொள்ளும் கோபம் முதல் வகை. குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது குழுவினரிடம் கோபத்தை வெளிப்படுத்துவது இரண்டாம் வகை. மூன்றாவதாக, ஒருவரைப் பழிவாங்கவும் வன்மத்துடன் செயல்படவும் காரணமாக இருக்கும் கொடுங்கோபம். இதைத் தவிர நமது சுயநலத்தின் மீதும் சினம் கொள்வதும் உண்டு. அடுத்தவர்களைப் பாதிக்கும் எந்தக் கோபத்தாலும் பயனில்லை. அதே வேளையில் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது.”

- உயர்திரு. கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க மேனாள் ஆளுநர், மகாத்மா காந்தியின் பேரன்

அறிவியல் வளர்ச்சியால் மனிதர்களிடையே இடைவெளி அதிகரித்து, தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து பாலின சமத்துவம் அடைய வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். ‘போக்சோசட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.”

- மாண்புமிகு அமைச்சர் பி. கீதாஜீவன், சமூக நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

விடுதலை இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதிலிருந்து சுமார் 14 கோடி தகுதி வாய்ந்த இந்தியர்கள் தடுக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதி வாய்ந்த இந்தியர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல; மாறாக, அது அடிப்படை உரிமை!\"  

- திருமதி சோனியா காந்தி காங்கிரஸ் மேனாள் தலைவர்

கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில்  அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்களை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்காகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூபாய் 50 இலட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன் மூலம் அதிக இலாபத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்றி, அதைத் தங்கள் பங்குதாரர்களுடன் பிரித்துக் கொண்டார்களே தவிர, தங்கள் பணியாளர்களுக்குக் கூடுதலாக ஊதியம் ஏதும் வழங்கவில்லை.\"

- எம்.ஆர். சிவராமன், மத்திய வருவாய்த்துறை மேனாள் செயலர்

\"ஒன்றிய அரசு தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் அத்துடன் சேர்ந்து ஏதாவது இந்திய மொழி ஒன்றைக் கற்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி இருக்குமாயின் இந்தி பேசக்கூடியவர்கள் எந்தப் பிராந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்கின்றனர் என்று ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\"

- வி.சி.. தலைவர் திருமாவளவன் எம்.பி.