news
இந்திய செய்திகள்
மருத்துவ அலுவலராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்சகோதரி

பிப்ரவரி 15 அன்று,  கேரள அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக அருள்சகோதரி சென் ஜீன்ரோஸ் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள பெருநிலை மாமன்றமும் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையும் முன்வைத்தஅருள்சகோதரிகளின் குரல்என்ற திட்டத்தின்படி, ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரோசம்மா தாமஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படும் ஜீன்ரோஸ், பெங்களூருவில் உள்ள புனித ஜான் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மற்றும் மயக்கவியல் துறையில் கல்வி பயின்று, 10 ஆண்டுகளுக்கு மேல் மறையூரில் உள்ள சர்ச் மேனேஜ் மருத்துவமனையில் பணியாற்றியவர். கேரள அரசு பணியாளர் ஆணையம் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மறையூர் பகுதியின் பழங்குடி மற்றும் ஏழை சமூகங்களுக்குச் சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சமூகத்தில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கங்களை உருவாக்குவதால் விளிம்புநிலை மக்கள் குறித்து நாம் தொடர்ந்து அக்கறை கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படும் மகத்தான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; தொழில்நுட்ப மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.”

- மாண்புமிகு. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

இந்தியா திறமை மிகுந்த இளைஞர்களைக் கொண்டுள்ளது; அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலும், உண்மையான தொழில் துறை சக்தியைக் கட்டமைப்பதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டம் தேவை. வெற்று வார்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை.”

- திரு. இராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ச் சுவையில், தமிழ் நாடகம் என்பது மிகுந்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட கலை வடிவம். பொழுதுபோக்கு அம்சங்கள் அபரிமிதமாகப் பெருகிவிட்ட சூழலில் பழம்பெரும் கலையான நாடகக்கலை நசிந்து வருகிறது. எனவே, நாடகக் கலையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அதை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன்உலக நாடக தினம்ஆண்டுதோறும் மார்ச் 27- அன்று கொண்டாடப்படுகிறது. சீனாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும்சர்வதேச நாடக நிறுவனம் 1961-ஆம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறது. உலகமெங்கும் உள்ள நாடக ஆசிரியர்களும் நாடகக் குழுக்களும் இரசிகர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.”

- திருமதி. தாரிணி கோமல், நாடக இயக்குநர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவத்தை இழிவுபடுத்தும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு!

இந்தியில் வெளியிடப்பட்டசனாதனி - கர்மா ஹி தர்மாபடம் கிறித்தவ மதத்தையும் நம்பிக்கையையும் இழிவாகச் சித்தரிக்கிறது. மதமாற்றத்தைத் தவறாகச் சித்தரிப்பதுடன், மதச்சுதந்திரத்தை மதிக்காது, கிறித்தவக் கோட்பாட்டின் முக்கியக் கூறுகளை இழிவுபடுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடிக் கிராமங்களைப் பின்புலமாகக் கொண்ட இப்படம், மத அடிப்படையில் பழங்குடிச் சமூகங்களைப் பிளவுபடுத்தும். இது சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று இந்திய ஆயர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் மாந்திரீகம் மற்றும் கிறித்தவ மதமாற்றம் மையமாக உள்ளது. 2008-இல் கந்தமால் மாவட்ட வன்முறையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தைத் தடை செய்யக் கோரும் இந்த மனுவை பிப்ரவரி 5 அன்று ஒரிசா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

news
இந்திய செய்திகள்
புதிய பேராயர் மற்றும் துணை ஆயர்களை வரவேற்போம்!

திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி புதிய பேராயர் மற்றும் மூன்று துணை ஆயர்களை நியமித்துள்ளார். ஆயர் உடுமாலா பாலா ஷோரெட்டி அவர்களை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் பேராயராக நியமித்துள்ளார். அருள்பணி. . செல்வராஜன் அவர்களை கேரளாவின் நெய்யாற்றின்கரா வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் 2019 முதல் திருப்புரம் புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர். அருள்பணி. பினர்டு லாலோ அவர்களை ஷில்லாங் பேராயத்தின் வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 30, 2006 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியின் மறைமாவட்ட ஆயராக அருள்பணி. ஃபேபியன் டோப்போ நியமிக்கப்பட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கல்வி உள்ளிட்ட அனைத்திலும் செவித்திறன், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றம் அடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை. மாற்றுத் திறனாளிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களின் செயல்பாட்டை மேம்படுத்த .. உள்ளிட்ட இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்.”

- மாண்புமிகு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (..) ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அதில் நாம் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. மருத்துவத்துறையிலும் .. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், இது நோய்களைக் கண்டறிந்து சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், இதை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தத் தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது; பெருநிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு அவசியமானது.”

- உயர்திரு. பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு 

வரலாற்றைப் பதிவு செய்வது அவசியம்; இன்றைக்கு நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் பத்து ஆண்டுகளுக்குத் தவறாகப் பதிவு செய்வர். இந்தியர்களும் தமிழர்களும் வரலாறு படைத்தனர்; ஆனால், அவற்றை முறையாகப் பதிவு செய்யத் தவறிவிட்டனர்.”

திரு. வே. இராமசுப்பிரமணியன், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்

மதநெறி தேவை; ஆனால், மதவெறி கூடாது. பழைய மூடப்பழக்கவழக் கங்களையும் நம்பிக்கைகளையும் தகர்க்க வேண்டும். சாதி என்பது ஒரு சதி; சாதியும் மதவெறியும் சமூகத்திற்கு அழிவையே உண்டாக்கும்.”

திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது; பெண்கள் சமூகத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகின்றனர்.” 

- டாக்டர் சுதா சேஷய்யன், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
மீண்டும் தலைவராகக் கர்தினால் ஃபிலிப் நேரி!

36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) தலைவராக மீண்டும் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஆயர் பீட்டர் மச்சாடோ துணைத் தலைவராகவும், ராஞ்சி ஆயர் வின்சென்ட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல்கள், புவனேஸ்வரில் உள்ள XIM பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கர்தினால் ஃபெரோ 2019-ஆம் ஆண்டில் சென்னை நகரில் நடந்த 31-வது பிளீன பேரவையில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 2023 -இல் நடந்த 34 -வது பேரவையில் இரண்டாவது முறையாகவும், தற்பொழுது மூன்றாவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.