news
சிறப்புக்கட்டுரை
தர்மம் எப்போது வெல்லும்?

காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் மனிதாபிமானமற்றப் போர் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ‘ஹமாஸ்அமைப்பின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழித்து ஒழிக்கவும், அவர்கள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டினரை மீட்டெடுக்கவும் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்ட இஸ்ரேல் அரசின் இராணுவ நடவடிக்கைகள், தற்போது காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, முழுமையாக அழித்தொழிக்கும்இன அழிப்புப் போராகமாறியுள்ளது.

இதுவரை 60,000 பாலஸ்தீனியர்களுக்கு மேலாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 18,000 பேர் குழந்தைகள். காசா மக்கள்தொகையில் சுமார் 10% மக்கள் ஊனமாக்கப்பட்டிருக்கின்றனர். இருபது இலட்சம் மக்கள் அவர்களது  வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு சாலையோரங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டு, பயிர்களே விளையாத கந்தகப் பூமியாக மாற்றப்பட்டு வருகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்ற உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்ல சர்வதேச நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் பசியாலும் பட்டினியாலும் இறந்து வருகின்றனர். சர்வதேச உதவி மையங்களில் உணவு  வாங்க வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்று கூறி இதுவரை ஆயிரம் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேல் இராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் சர்வதேச ஊடகவியலாளர்களையும் உதவி செய்வதற்காக வந்துள்ள தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களையும்கூட இஸ்ரேல் இராணுவம் சுட்டுத்தள்ளுகிறது.

இத்தனை அநியாய அக்கிரமங்களுக்கும் பகிரங்கமாக உதவி செய்பவர்உலகச் சமாதானத்தின் காவலராகதன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசை வாங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த மரணக் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் பணக்கார ஐரோப்பிய வல்லரசுகள். இந்த அபஸ்வரக் கச்சேரியைக் காசு கொடுத்து அமைதியாகக் கேட்டு இரசிக்கும் இரசிகர்களாகப் பணக்கார அரபு நாடுகள் மாறிப்போனது மற்றுமொரு கொடுமை. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரத்தினை முதன்முதலில் வழங்கிய இந்தியா போன்ற நாடுகளும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய இரஷ்யா-சீனா போன்ற நாடுகளும் இன்று அவர்களுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு, அவர்களுடைய எல்லைகளிலிருக்கும் பதற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக டிரம்ப் எனும்அநியாயமான பேராசைக்காரர்சர்வதேச நாடுகளின்மீது தொடுத்திருக்கும் அநியாய வரிவிதிப்புப் போர் போன்ற பிரச்சினைகளால் பாலஸ்தீனியர்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க முடியவில்லை.

இதுபோன்ற தருணங்களில் நியாயம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பாதுகாப்புக் கவுன்சிலும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால் செயலிழந்து நிற்கின்றன.

பாலஸ்தீனம் முழுவதும் மரண பயம். குடியிருப்புகளில் எல்லாம் பிணவாடை. முன்னறிவிப்பின்றிப் பறந்துவரும்ட்ரோன்கள்வீசும் அமிலக் குண்டுகளால் அடையாளமே தெரியாமல் சிதைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண அவர்களது உடல்களில் குழந்தைகளின் பெயர்களைப் பச்சை குத்தி வைக்கும் தாய்மார்கள். அடையாளம் தெரிந்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தங்கள் கைகளில் தங்களது பெயர்களைப் பச்சை குத்திக்கொள்ளும் இளைஞர்கள். பெண்கள் தங்கள் பெயர் பொறித்த வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. மொபைல் போன்களின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அவலம். மயக்க மருந்துகளின் தட்டுப்பாட்டால் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆண்களுக்கு இரண்டு வேலைகள்: ஒன்று, இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகளைச் செய்வது; இரண்டு, மற்ற நேரங்களில் உதவி மையங்களில் வழங்கப்படும் உணவுக்காகக் காத்திருப்பது. பெண்களுக்கு இரண்டு வேலைகள்: இறந்துபோன தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைக் கட்டிப்பிடித்து அழுவது; மற்ற நேரங்களில் உதவி விமானங்கள் வந்து கீழே வீசும் உணவுத் தானியங்களை மண்தரைகளிலிருந்து பொறுக்குவது. இவ்வளவு கொடுமைகளையும் உலகம் முழுமையும் பார்த்தும் அறிந்தும் எதுவுமே தெரியாததுபோல இருப்பதை இஸ்ரேல், சர்வதேச நாடுகள் தனக்குத் தெரிவிக்கும் ஆதரவாகப் பார்க்கின்றது.

அமெரிக்காவின் ஆயுத உதவிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் இஸ்ரேலின் மீது பாயாத அளவுக்கு அமெரிக்கா தருகின்ற பாதுகாப்பும், ஐரோப்பிய நாடுகளின் வணிகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இல்லாமல் இஸ்ரேல் ஒரு மணிநேரம்கூட போர்க்களத்தில் நிற்க முடியாது. தெற்கு ஆசியப் பகுதியில் செயல்படும் ஒரே சனநாயக நாடு என்ற முறையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் கடைந்தெடுக்கப்பட்ட சுயநலமும், கலப்படமில்லாத வணிக ஆதாயமும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முக்கியமாக, எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க இஸ்ரேல் என்றரௌடி நாடுஅவர்கள் கைவசம் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றன. நாகரிகம் மிக்க, சனநாயக உணர்வுள்ள, மனிதநேயம் மிக்க நாடுகள் என்று எப்போதும் தங்களைப்பற்றிப் பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் தங்களால் நேரில் செய்யமுடியாத அயோக்கியத்தனங்களை இஸ்ரேல் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இத்தகைய அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கான வசதிகளையும் தொழில்நுட்பங்களையும் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது இவர்களுக்குப் பெரும் வசதியாக உள்ளது. இதற்கான நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் இஸ்ரேலுக்குச் செய்து வருகின்றன.

இன்று காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புப் போரின் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றனர் என்பது குறித்து, பாலஸ்தீனத்திற்கான .நா. சிறப்புப் பிரதிநிதியான பிரான்செஸ்கா ஆல்பனீஸ் அம்மையார் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். போரின் மூலமாகப் பயனடைந்த பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களின் பட்டியலையும் அதில் இணைத்திருந்தார். இந்நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பங்களையும் ஆயுதக் கண்டுபிடிப்புகளையும் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்களமாக காசாவை மாற்றியிருந்ததை விளக்கியிருந்தார்.

ஆல்பனீஸ் பட்டியலிட்டிருந்த நிறுவனங்களில் அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களாகும். மற்றவை ஐரோப்பிய நிறுவனங்கள். இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆல்பனீஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர்மீதுயூதர்களின் விரோதிஎன்றும், ‘பயங்கரவாதத்தின் ஆதரவாளர்என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்மீது பல தடைகளை விதித்து, அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன.

சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமாகவும், .நா. சபையின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்த இந்திய நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இப்போதுதான் தெளிவு பிறந்துள்ளது. ஆனால், இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்னரே செய்துகாட்டியது.

வாஜ்பாய் பிரதமரானதும், அத்வானி இஸ்ரேல் சென்றார். அது முதற்கொண்டு இஸ்ரேலோடு இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் வாங்குவதும், உளவு வேலைக்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதும் என்று நெருக்கம் பல மடங்குகள் அதிகமாயிற்று. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பைப்போல நமது பிரதமரின் நெருங்கிய நண்பர். இதனால் கடந்த அக்டோபர் 26 அன்று .நா. பொது அவையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தபோது, 120 நாடுகள் தீர்மானத்தினை ஆதரித்த வேளையில், இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் நவம்பர் 21 அன்று நடந்தபிரிக்ஸ்நாடுகள் கூட்டத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று சீன அதிபர் முன்மொழிந்த தீர்மானத்தினை இந்தியா வழிமொழிய மறுத்துவிட்டது. ஆனால், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குத் தனது எதிர்ப்பினை மட்டும் பதிவு செய்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக மோடி எத்தனை நாள் நடிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

போர் நிறுத்தத்திற்கும், பிணையக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஹமாஸ் அமைப்பினர் தயார் என்று அறிவித்த பின்னரும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இல்லை. அவரது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த யுத்தம் அவருக்கு அவசியம் தேவை. போர் நின்றுவிட்டால் உடனடியாக அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்நாட்டில் கடுமையான மக்கள் எதிர்ப்பை மீறி அவரால் வெற்றிபெற இயலாது. அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை, யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் விசாரணை தொடரும். தண்டனை நிச்சயம் என்று சொல்கிறார்கள். எனவே, யுத்தத்தின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்த நெதன்யாகு முயற்சிக்கிறார்.

பத்து இலட்சம் மக்கள் வாழும் காசா நகரையும், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் நாட்டின் பகுதி என்று அறிவிக்கும் தீர்மானத்தை அவரது அமைச்சரவை சில நாள்களுக்கு முன் நிறைவேற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மக்களை அங்கே குடியமர்த்தும் பணியையும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளைக் கட்டத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 60,000 இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று இரு நாடுகளே இல்லை; இனி இஸ்ரேல் மட்டும்தான்என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் கொக்கரிக்கின்றார். காசா நகரின் நகர்மன்றத் தலைவர் முஸ்தபா குவாசத், “இது பேரழிவு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி நகரை விட்டுப் பீதியுடன் ஓடுகின்றனர். தங்க இடமின்றித் தரிசு நிலங்களில் மேற்கூரைகூட இல்லாமல் தங்கியுள்ளனர். உலக நாடுகளே, இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்களேன்!” என்று கதறுகின்றார்.

அரபு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் வெறும் கண்டனங்களோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக மௌனம் காக்கிறார்கள். டிரம்ப் உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காகக் காத்திருக்கின்றார். நெதன்யாகு, ‘அப்பரிசு பெற தகுதியான ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான்என வழிமொழிகிறார். டிரம்புக்கு நோபல் பரிசினை வழங்காவிடில் நோபல் பரிசு தலைமைச் செயலகத்தை டிரம்பும், நெதன்யாகுவும் சேர்ந்து குண்டுகள் போட்டு அழித்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்!’ என்று அடிக்கடி சொல்கிறார்களே... அந்தத் தர்மம் எப்போது வெல்லும்? பாலஸ்தீனக் குழந்தைகளின் மரண ஓலம் எப்போது நிற்கும்?

news
சிறப்புக்கட்டுரை
ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவோம்!

இந்தியாவில்ஆசிரியர் தினம்செப்டம்பர் 5-ஆம் நாள் டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. அவர் புகழ்மிகு அறிஞர். பாரத இரத்னா விருதாளர். முனைவர், பேராசிரியர். சுதந்திரத் திருநாட்டில் முதல் துணைக் குடியரசுத் தலைவர். தமிழ்நாட்டின் இரண்டாம் குடியரசுத் தலைவர். தத்துவமேதை, சிறந்த கல்வியாளர்.

1888-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம்  நாள் பிறந்தார். இராதாகிருஷ்ணனின் நண்பர்களும், பல மாணவர்களும் அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்புவதாக அவரை அணுகியபோது, “எனது பிறந்த நாளைத் தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்என்றார். 1967-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவையும் ஞானத்தையும் பரப்புவதற்காக ஆசிரியர் தொழிலைத் தேர்வு செய்கின்றனர். படித்த மக்கள் தொகை உள்ள நாடுதான் பெரும் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வெற்றிபெற சரியான வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் வேண்டும். பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடும்ப மக்களாக, குடும்பங்களாக அவர்களை வடிவமைக்கிறார் ஆசிரியர்.

இந்த நாள் தரமான கல்வியைப் பெறுவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்நாள் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமானது. ஏனெனில், இந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் மாணவர்கள் மற்றும் புகழ்மிக்க அமைப்புகளால் கௌரவிக்கப்படுகின்றார்கள். ஆசிரியச் சான்றோரைப் பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையிலான தூய்மையான பிணைப்பைக் கொண்டாடும் அற்புதமான நாள். ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை ஏற்பாடு செய்து, இந்தச் சிறப்பு நாளை மறக்க முடியாததாக மாற்றுகின்றார்கள். எவ்வளவு பாராட்ட, வாழ்த்த, போற்ற முடியுமோ அத்தனையும் செய்து பெருமைப்படுத்துகின்றார்கள்.

ஒன்றிய அளவில் உள்ள கல்விப் பட்டியலை மாநில அரசுக்கு மாற்றி, அந்தந்த மாநில அரசுகளே செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு, கேரளம் போன்ற தென் மாநிலங்கள் கல்வியில் நாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வியில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகப் பணி வாய்ப்பிலும் சரி, எல்லாத் துறைகளிலும் உள்ளது. இதற்கு மூலகாரணம் ஆசிரியர்களே. மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் தன்னை எவ்வாறு ஆசிரியச் சான்றோர் உருவாக்கினார்கள் என்பதைப் புத்தக வடிவில் வெளியிட்டு ஆசிரியச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

நமது நாட்டில் உயர் பதவிகளில் இருந்த பலரும் ஆசிரியர்களே! பல்துறை சேர்ந்த பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்குபவர்களும் ஆசிரியர்களே!

இந்நாளை நாம் கொண்டாடும்போது ஆசிரியர்கள் தன்னலமற்ற சேவையை நினைத்து அவர்களைப் பெருமைப்படுத்தத் தவறக்கூடாது. ஆசிரியர்கள் தாங்கள் செய்யும் பணியைப் போற்றி அவர்கள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக ஆற்றிட அவர்களை வாழ்த்துவோம்.

news
சிறப்புக்கட்டுரை
சிறுபான்மையினர் உரிமைகளைக் காப்போம்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டக்குழுவில்ஆசிய ஜோதிஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய நாட்டின் மாபெரும் மனிதராக வாழ்ந்தவர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்று கூறினார். ஆகவே, சிறுபான்மையினர் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் உறுதி செய்தார்.

சிறுபான்மையினர், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகப் பல ஆண்டு காலம் இருந்தார்கள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகப் பல இடங்களில் பாதிக்கப்பட்டு வருகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியான குரல் வலுத்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டம் 25-வது பிரிவு சிறுபான்மையினருக்கு மனச்சுதந்திரம், மதச்சுதந்திரம் அளிக்கிறது. இந்தியக் குடிமகன் விரும்பும் சமயத்தைத் தழுவ, வழிபட மற்றும் அச்சமயத்தைப் பரப்ப உரிமை அளிக்கிறது. ஆனால், இன்றைய நிகழ்வுகள் உரிமையை முற்றிலுமாகப் பறிப்பதாக உள்ளன.

பெரும்பான்மையான இந்து நண்பர்கள் இந்துத்துவக் கொள்கையை ஏற்பதில்லை. இந்துகள் என்ற பெயரில் சிறு குழுவினர் அல்லது இந்து சிறுபான்மையினர் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள், குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மனத்தை உருக்கும் நிகழ்வை அனைவரும் கண்டனம் செய்கின்றனர். ‘சிஸ்டர்ஸ் ஆப் இமாக்குலேட் கன்ஸபசன்சகோதரிகள் வந்தனா பிரான்சிஸ், பிரீத்தி மேரி மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர். இரயில்வே நிலையத்தில் மூன்று ஏழைப் பெண்களை ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தார்கள். அங்கு சுக்மன் மண்டாவி என்பவர் மூன்று பெண்களை அழைத்து வரும்போது பார்த்த சங்கீகள் பஜ்ரங்கால் தொண்டர்கள், முக்தி வாகினி பெண்களையும் அழைத்து வந்து பிரச்சினையை உருவாக்கினார்கள். இரயில்வே போலிஸ் ஸ்டேஷனில் மூன்று பெண்களை விற்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்தார்கள். அவர்களை மதமாற்றம் செய்யப் போகிறார்கள் என்று பொய்யான FIR பதிவுச் செய்து சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அருள்சகோதரிகள், பெண்கள் அவர்களின் பெற்றோர் சொன்ன உண்மைகளைப் பதிவு செய்யவில்லை. பெற்றோர்கள் கூறுவது அவர்கள் ஏற்கனவே கிறித்தவர்களாக இருக்கிறார்கள். தங்கள் சம்மதத்துடன் பெண்களை வேலை செய்வதற்காக அழைத்து செல்கிறார்கள். ஏழைகள் எங்களுக்கு இது பெரிய சேவையாகும் என்று சொன்னதைக்கூட பதிவு செய்யவில்லை. அருள்சகோதரர்களைச் சிறையில் தள்ளினார்கள். சத்தீஸ்கர் முதலமைச்சர் தண்டனையை நியாயப்படுத்தினார். பா.. தலைவர்கள் வழக்குத் தொடர்ந்தபோதும் இந்தியா எங்கும் போராட்டம் வலுத்து அருள்சகோதரிகள் கடையில் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்துத்துவ கொள்கையை இந்து சிறுபான்மையினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் முகமான பா.. தூக்கிப்பிடிக்கிறது. பரிவாரங்கள் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்களைத் தாக்குகின்றனர் 1992 பாபர் மசூதி இடிப்பு 2002 குஜராத் இஸ்லாமியருக்கு எதிரான கலவரம் மற்றும் படுகொலைகள் 2008, காந்தமால் ஒரிசா மாநிலத்தில் கிறித்தவர் படுகொலையைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் மட்டும் 824 கிறித்தவர் தாக்கப்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. கிறித்தவச் சமூகம் மக்கள்நல பணிகளை ஆற்ற அயல்நாட்டு உதவி பெறும் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு, சிறுபான்மையினருக்கு எதிரான குரல் வன்முறை சம்பவங்களில் முடிகிறது.

சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகிறபோதும் பாதிக்கப்படுகிறபோதும் பொது சமூகம் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள் உரிமைகளைப் பாதுகாக்கக் களத்தில் போராடுகின்றனர். கிறித்தவச் சமூகம் முழுவதும் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு நீதியை நிலைநாட்டுவது  அடிப்படைக் கடமையாகும்.

news
சிறப்புக்கட்டுரை
சுதந்திரம் 79, உண்மையான சுதந்திரம் எங்கே?

நம் நாடு சுதந்திரம் அடைந்து, அன்றைய மற்றும் இன்றைய ஆட்சியாளர்களின் முன்னோக்கிய அறிவியல், தொழில்நுட்பச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சிக்கான சீரிய முயற்சிகள், அவர்களின் அளப்பரிய பங்களிப்பு ஆகியவற்றால் இன்று இந்தியா, உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனியையும் ஜப்பானையும் கடந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம்.

தினமும் 27 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு, மாதத்திற்கு இரண்டு புதிய விமான நிலையங்கள் திறக்கப்படுகின்றன. பணப் பரிவர்த்தனைகளில் 46% பங்கு வங்கிக்குச் செல்லாமல், மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது. 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். 3 இலட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், வங்கிக் கணக்குகள்... இவை அனைத்தும் மகிழ்ச்சி தரும் சாதனைகள்! பல குடும்பங்கள் அரசு உதவிகளை நேரடியாகப் பெற்றுள்ளன. கிராமங்களில் மின்சாரம், குடிநீர், வீடுகள் போன்ற வசதிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், ‘இந்த வளர்ச்சி எல்லாருக்கும் சமமாகச் சென்றடைகின்றனவா?’ என்பதே நமது கேள்வி.

பல கிராமங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், சில இடங்களில் மருத்துவர் இல்லாமை, மருந்து பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் நீங்கவில்லை. நோயுற்றவர் தொலைதூரம் நகரம் செல்ல வேண்டிய நிலையும் தொடர்கிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பெண்களின் கல்வி முன்னேற்றமும் உற்சாகமளிக்கிறது. ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் சிறந்த கற்றல் சூழல், திறமையான ஆசிரியர்கள் இருக்கின்றார்களா?

பல கிராமங்களில் குடிநீர், சாலைகள், போக்குவரத்து வசதிகள் உருவாகி வருகின்றன. அதேநேரத்தில், சில இடங்களில் இவை இன்னும் குறைவாகவே உள்ளன. வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன. கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் பலர், மிகக் குறைவான வசதிகள் உள்ள வீடுகளில்தான் இன்றும் வசிக்கின்றனர்.

கிறித்தவச் சமூகம் உள்பட பல மதத்தினரும், தன்னார்வ அமைப்புகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும் பல ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இவற்றில் கிறித்தவச் சமூகம் சிறந்த பங்களிப்புச் செய்து வந்துள்ளது. தற்போது சில அரசின் புதிய சட்டங்கள் இப்பணிகளைத் தடுக்கும் வகையிலும் இடையூறுகள் விளைவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றன.

இன்று நமக்குத் தேவையானது புள்ளிவிவர வளர்ச்சி மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம். நமது விழாக்களில் செலவுகளைக் குறைத்து, ஏழைக் குடும்பங்களுக்குக் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் முதலீடு செய்ய நாம் சிந்திக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்றால், நகரத்தில் உள்ள ஒரு மாணவனுக்கும், கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் மகனுக்கும் ஒரேமாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதுதான்; ஒரே மாதிரியான கனவுகள் வளர்வதுதான்; மருத்துவச் சேவைகள் நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் சமமாகக் கிடைப்பதுதான்.

நம்மால் முடிந்த அளவில் கருணையுடனும் நீதியுடனும் அன்புடனும் செயல்பட்டால், புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் உண்மையான முன்னேற்றத்தை நாம் காணமுடியும்.

அப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை யாவரும் கொண்டிருக்க முடியும்.

news
சிறப்புக்கட்டுரை
இணையப் பெண் (வலையும் வாழ்வும் – 26)

இரவு பத்து மணி. திருச்சி நெடுஞ்சாலை. கார் பயணக் களைப்பு. டிரைவரிடம்டீ குடிச்சிக்கிட்டு போகலாம், கொஞ்சம் ரோட்டோரத்தில் நிறுத்துஎன்றேன். அவனும் நிறுத்தினான்.

தனித்து விடப்பட்டக் கடை என்றாலும்கூட எல்..டி. பல்புகளால் அலங்கரிக்கப்பட்டுப் புதுப் பெண்கோலம் பூண்டிருந்தது. அந்த நெடுஞ்சாலையோரம் மீடியம் சுகர் போட்ட அந்தத் தேனீர் கப்பை கையிலே ஏந்தி நின்றிருந்த என் கண்களுக்குச் சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் வாகன வெளிச்சத்தில் மின்னி மறைந்தது.

கையில் ஒரு குட்டைக் குடை. தோளில் தொங்க விடப்பட்ட பை. இளமஞ்சள் நிற சாரி. ‘யாராக இருக்கும் இந்த நேரத்தில்?’

பக்கத்தில் யாருமே இல்லை. அப்பெண் யாரையோ தேடுவதுபோல் இருந்தது. சாலையில் கடந்துபோகும் இருசக்கர வாகனங்கள் சில அப்பெண்ணின் அருகே வந்து நோட்டம் விட்டுச் சென்றன.

இந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் தேவை தானா? இந்த இரவு நேரம் இப்படி விபச்சாரத் தொழில் செய்துதான் பிழைக்கவேண்டுமா?’

கேள்விகள் பல என் மனத்தின் ஆழத்தில் கொக்கிப்போட்டு அமர்ந்துகொண்டன. கையிலிருந்த தேநீர் கொஞ்சம் மீதமிருக்கையில் ஒரு பைக் அப்பெண்ணின் அருகில் வந்து நின்றது. மழை வந்தால் பூக்கும் அல்லி மலரைப்போல பைக்கில் வந்த அந்த மனிதரைப் பார்த்தவுடன் அப்பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி! பொய் கோபத்தில் தான் வைத்திருந்தக் குட்டை குடையால் பைக்கில் வந்திருந்த அந்த நபரின் முதுகில் அடிப்பதுபோல பாசாங்கு செய்தாள்.

இரண்டு வயது குழந்தை ஒன்று அந்தப் பைக்கின் முன்பக்கத்திலிருந்து எழுந்து தாவிக் குதித்து அவள் கைக்குள் அடங்கியது. வாரி அணைத்துக்கொண்டு அக்குழந்தையின் நெற்றி முகர்ந்து முத்தமிட்டாள். பேருந்து ஒன்று அந்த இடத்தில் நின்று சென்றபோதுதான் அது பேருந்து நிறுத்தம் என்பது புரிந்தது.

என் கையிலிருந்த தேநீர் தீர்ந்திருந்த நிலையில் என் கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்திருந்தன. அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு அந்தப் பைக் கிளம்பும்போது வெளிப்பட்ட கரும்புகை கொஞ்சம் என் முகத்தில் படாமல் இல்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளான பிறகும் பெண்கள்மீது நாம் கொண்டிருக்கும் பார்வை மட்டும் இன்னும் மாறாமலேயே இருக்கிறது. உடலில் நகை அணிந்துகொண்டு இன்று பெண் ஒருவர் சாலையில் நடந்துசெல்ல முடிவதாக இருக்கலாம்; ஆனால், சமூக வலைத் தளங்களில் தன் உண்மைப் பெயரைக் கொண்டு, தான் சொல்ல விரும்புகின்ற கருத்தைப் பயமில்லாமல் சொல்ல முடிவதில்லை. ஒரு பெண் கருத்து ஒன்றைச் சொல்கிறாள் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு பெண் சமூக ஊடகங்களில் இருக்கின்றாள் என்பதற்காகவே அவள் பலரால் பல்வேறு சீண்டல்களுக்கு (Online Harresments) உள்ளாக்கப்படுகிறாள்.

இன்று பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்புக்காக, கல்விக்காக, பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக, தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ‘சாத்வா கன்சல்டிங் (Sattva Consulting) என்ற நிறுவனம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 23 மில்லியன் பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது இணையம் பயன்படுத்தும் இந்திய ஆண்களைவிட 34% குறைவு ஆகும்.

அண்மையில் ‘#me too’  என்ற இணையவழி இயக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்களை இணையத்தில் அரங்கேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பெரும்புள்ளிகள் இணையத்தில் குரலெழுப்பிய பெண்களின் குரல்வளையை நெரிக்க பாலியல் மற்றும் தரக்குறைவான கருத்துகளைச் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டனர். இதேபோன்று கருத்து மோதல்களாலும் தொடர் சீண்டல்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்இன்புளுவன்சர்கள்தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் இணையத்தைப் பயன்படுத்தும் பெண்கள் அத் தளத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்கின்ற சூழல் உருவாகி பெருமளவில் டிஜிட்டல் மற்றும் பாலினப் பிளவு (digital and gender divide) உருவாகின்றது. இது இணையத்தில் பெண்களுக்கான வாய்ப்பைப் பறிப்பதோடு, அவர்களுக்கானப் பாலினச் சமத்துவத்தைக் (gender equality) கேள்விக்குள்ளாக்குகிறது.

எனவே, இணையத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இணையப் பகுப்பாய்வு மற்றும் இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு எல்லா நிலையினருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இணையத்தில் பெண்ணியப் பார்வையும் பெண்ணைப் போற்றும் கருத்துருவாக்கமும் அதிகரிக்கப்பட வேண்டும். இணையக் குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

பெண் உடல் சார்ந்த அரசியல், பெண் உடல் சாந்த விளம்பர உத்தி, பெண் உடல் சார்ந்த ஆன்மிகம், பெண் உடல் சார்ந்த வியாபாரம், பெண் உடல் சார்ந்த ஒழுக்கநெறிகள், பெண் உடல் சார்ந்த ஆபாசம் போன்ற பெண்களுக்கு எதிரான வன்மங்கள் இணையத்தின் பிரதான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளே.

news
சிறப்புக்கட்டுரை
திரைக்கலைஞர்களின் அரசியலும் / வருமான அமலாக்கத்துறைகளும்

ஒன்றிய அரசு புகழ்பெற்ற திரைக்கலைஞர்களைத் தன்வசம் வளைக்கக் குறுக்குவழி காண்கிறது. தன் தனி அதிகார வருமானவரி அமலாக்கத்துறை வழி அழுத்தம் கொடுத்துப் பிடிக்கிறது. தனக்கு ஏற்ற திரைக்கலைஞர்களை வளைக்கிறது; காங்கிரஸ், பா... என இருவருமே இச்சதியில் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்தான். கூட்டுப் பங்காளிகள்.

தன் வருமானவரிப் பிரச்சினைகள் தீர்ந்தபின் நடிகர் ரஜினிகாந்த்போல தப்புபவர் ஒருசிலரேதென்னிந்தியாவின் அழகு தேவதைஎன வருணிக்கப்பட்ட நடிகை சௌந்தர்யா பா... கட்சிக்காக 2004-இல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றைய தெலுங்கானாவின் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் பறந்தார். விபத்து ஏற்பட்டு பரிதாப மரணமடைந்தார். இதுதான் திரைத்துறையினர் மீதான ஒன்றிய அரசுகள் சுமத்தும்  கட்டாய, வலுத்த, பளுவான நெருக்கடி அரசியல்.

மலையாள திரையுலகில் பிரேம் நசீர் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 700 திரைப்படங்களில் நடித்தவர். நடிகை ஷீலாவுடன் மட்டும் கதாநாயகனாக 130 திரைப்படங்களில் நடித்தவர். பிரேம் நசீர் கின்னஸ் சாதனை புரிந்த பெருமைக்குரிய நடிகர். அவரும் அரசியலுக்கு வந்தார். ‘ஏன்?’ என அவரது மகன் ஷாநவாஸ் கௌமுதி தொலைக்காட்சிஸ்ட்ரெய்ட்லைன்என்ற நேர்காணலில் கூறுகிறார்: “என் தந்தை பிரேம் நசீருக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட அழுத்தம் தரப்பட்டது. அவர் மறுத்து தேர்தல் பிரச்சாரம் மட்டுமே செய்தார். அவருக்கு அதற்காக வருமான வரித்துறை மூலம் நெருக்கடி தரப்பட்டது.”

மலையாள மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதை நடிகர் பிரேம் நசீர் உணர்ந்திருந்தார். தன் அரசியல் வாழ்வைத் தேர்தல் பிரச்சாரத்தோடு முடித்துக்கொண்டார். கதாநாயகன் என்றால் என்றும் அவர் கதாநாயகன்தான்!

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி! இவரது பெயரைக் கூறினாலே ஆந்திராவே அதிரும். நடிகர் சீரஞ்சீவி 2008-ஆம் ஆண்டுபிரஜா ராஜ்யம்என்ற கட்சியை ஆரம்பித்தார். 2009-ஆம் ஆண்டு ஆந்திரத் தேர்தல் களத்தில் நடிகர் சிரஞ் சீவிக்குக் கூடிய கூட்டமும், அதிரடிப் பிரச்சாரமும் ஆந்திரத் தேர்தல் களமே அதிர்ந்தது. நடிகர் சிரஞ்சீவி  முடிவில் 16% வாக்குகளையும், 18 இடங்களையும் வென்றார். 2011-ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். இவ்வாறாக சிரஞ்சீவி, தன் அரசியல் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொண்டார். நடிகர் சிரஞ்சீவி கூறுகிறார்: “இனி என் வாழ்நாள் முழுவதும் அரசியலிலிருந்து விலகி இருப்பேன்.” நடிகர் சிரஞ்சீவியும் அரசியலுக்கு வர, விடைபெற, வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் தவிர வேறு  அழுத்தங்கள் இல்லை.

வாருங்கள், கன்னட தேசம் காண்போம்: கன்னடத்தில் கொடிக்கட்டிப் பறந்தமூத்த சகோதரர்எனப் பொருள்படும்அண்ணாவ்ருஎன மதிக்கப்பட்டவர் கன்னட சூப்பர் ஸ்டார் இராஜ்குமார். அவருக்குக் காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி கொடுத்த அழைப்பை மறுத்தார். ஆனால், அவரது மகன் சிவராஜ்குமார் 2023-இல் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். காலங்களின் அழுத்தமின்றியும், அரசியல் நடப்பதும்  சிறப்பு. அது மதவெறி அரசியலை முறியடிக்கும் துணிந்த மாநிலங்களின்  போராட்டத்தில் புதிய பக்கங்கள்.

தமிழ்நாடு அரசியலிலும் திரைத்துறையிலும் மறுக்க முடியாத உச்சங்களைத் தொட்டவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் எனப்படும் எம்.ஜி.ஆர். அவருக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நெருக்குதல்கள் தரப்பட்டன. 1971-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தனது வெளிநாட்டுத் திரைப்படப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவரது வருமானம், சொத்துகள் குறித்து வருமான வரித்துறை நேரில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறது.

மன உளைச்சலிலிருந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்குபிரதமர் இந்திராகாந்தியைச் சந்தியுங்கள்; உங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்என்று ஆலோசனை தரப்பட்டது. அவ்வாறே எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்தார். பிரச்சினைகள் தீர்ந்தன. 1972-ஆம் ஆண்டுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற புதிய கட்சி உருவானது. .தி.மு.. உருவாகப் பல காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புதைந்த வரலாறு.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் தலைவராக உருவாகியுள்ள நடிகர் விஜய் அவர்களின் வருமான வரி வரலாற்றையும் புரட்டிப்பார்ப்போம். 2015-ஆம் ஆண்டு முதலே நடிகர் விஜய் அவர்களுக்கு வருமான வரித்துறையின் அழுத்தங்கள் ஆரம்பமாகி விட்டன. தமிழ்நாடு அரசியலில் நடிகர் ரஜனிகாந்திற்கு  மாற்றாக நடிகர் விஜய் அவர்களை ஆர்.எஸ். எஸ். அன்றே குறிவைத்துவிட்டது. மெல்லக் கொடுத்த அழுத்தங்கள் 2020-இல் உச்சம் பெற்றது. நெய்வேலியில்மாஸ்டர்திரைப்படப்  படப்பிடிப்பு நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த வருமான வரித்துறையினர்விசாரணைக்கு வரவேண்டும்என விஜய் அவர்களைக் கட்டாயப்படுத்தி, படப்பிடிப்பை இடைநிறுத்தம் செய்தனர். வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்கள். பனையூர் பங்களாவில் அவரது குடும்பத்தாரின் சொத்துகள், உள்நாடு-வெளிநாடு என வகைப்படுத்தப்பட்ட விவரங்களைக் காட்டி கேள்விகள் அடுக்கினர். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் விசாரணை வளையத்துக்குள் உட்படுத்தப்பட்டார். 24 மணி நேரத்திற்குக்  கிடுக்குப் பிடி விசாரணை நீண்டது.

நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை விசாரணையை நடத்தியவர் வருமான வரித்துறை ஆணையர் அருண்ராஜ். இவர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. முன்பு அவர்தான் நடிகர் விஜய் அவர்களுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார் எனக் கிசு கிசுக்கப்பட்டது. அவர் தனது வருமான வரித்துறைப் பதவியை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்கிறார். உடன் அவர் .வெ..வில் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளராக நியமனம் பெறுகிறார். பின்னாள்களில் நடிகர் விஜய் அவர்களின்  வருமான வரிக்கணக்குகளில் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை எனப் புனிதம் பெறுகிறார்.

இதனிடையே புதிய கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தில், புதிய கட்சி அங்கீகாரம் பெற புஸ்ஸி ஆனந்துடன் உடன் சென்றவர் பிரகாஷ் எம். சுவாமி. இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக வெளிச்சம் பெற்றவர். அவருக்கும், நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும் நடிகர் விஜய் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் உடனே கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது. நடிகர்களின் அரசியலில் திரைமறைவு ஆர்.எஸ்.எஸ். நோக்கங்களை நிறைவேற்ற வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும்  பா...வால் முடுக்கி விடப்படுகின்றன.

ஒரு குடியாட்சியில் எந்தத் தொழில் செய்வோரும், எந்தப் பணியாற்றுவோரும், தன் பங்களிப்பைத் தரலாம். அவர்கள் தேர்தல் களம் காண்பது நாட்டு மக்கள் நலனுக்கா? அல்லது தங்கள் வருமான வரி, அமலாக்கத்துறை  பிரச்சினை தீரவா? என்ற சுயநல அரசியலை அடையாளம் காண்பதே நம் சனநாயகக் கடமை என்போம். மதவாத ஒன்றிய அரசின் முகங்களை, முகமூடிகளை முறியடிப்போம்.