news
சிறப்புக்கட்டுரை
முன்சார்பு எண்ணங்களும் முகமூடி இயந்திரங்களும் (வலையும் வாழ்வும் – 14)

நான் அருண். ஃபாதர் பிரேமும் நானும் பிரண்ட்ஸ். பள்ளியிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். இப்போ ஃபாதராகி எங்க ஊர்லதான் இருக்காரு. போன வாரத்தோட அவர் எங்க ஊருக்கு வந்து இரண்டு வருசம் ஆச்சு. பள்ளியிலநீ, ‘வா, ‘போனு தான் பேசிக்கிட்டிருப்போம். இப்போநீங்க, வாங்கன்னு சொல்லுறேன். ஃபாதர்னா எப்போதும் மரியாதை கொடுக்கணும்னு சொல்லியே அப்பா எங்களை வளர்த்தாரு.

ஊர்ல முக்கியமான பிரச்சினைக்கெல்லாம் என்கிட்ட கேட்டுட்டுதான் ஃபாதர் முடிவெடுப்பார். நானும் ஃபாதர் ஆகணுமுனு சிறுவயசுல நெனச்சேன். ஆனா முடியல. இப்போ மேரேஜ் பண்ணிக்கிட்டு ஃபாதர் ஆகலாமுனு இருக்கேன். இப்போ நான் கார் ஓனர். எப்போ கார் வேணுமுனாலும் பிரேம், சாரி! ஃபாதர் பிரேம் என்னைத்தான் கூப்பிடுவாரு. நானும் காரை எடுத்துக்கிட்டு வந்திடுவேன். ‘ஆமா! நீங்க இந்தக் காலேஜ்ல என்ன வொர்க் பண்ணுறீங்க?”

எப்படியோ இப்போதாவது பேச்சை முடித்தானே... என்றிருந்தது உமாவிற்கு. “நான் இங்க பிரின்ஸ்பாலா இருக்கேன்என்று சுருங்கத் தன் பதிலைக் கூறிக்கொண்டு தூரத்தில் சிலரோடு பேசிக்கொண்டிருந்த ஃபாதர் பிரேம் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். “காலேஜ் பிரின்ஸ்பால்கிட்டையா இவ்வளவு நேரம் ரீல் சுத்திக்கிட்டிருந்தேன்!” அதிர்ந்து அவ்விடமிட்டு நகர்ந்தான் அருண்.

ஃபாதர், வந்து எங்களுக்காகச் செபித்ததற்கு ரொம்ப தாங்ஸ்என்று ஒரு கவரை அவர் பக்கம் நீட்டினாள். ஃபாதர் பிரேம் அதனை வாங்கித் தன் அங்கிப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விடைபெற்றார். பிரின்ஸ்பால் ஃபாதர்கிட்ட தன்னை மாட்டிவிட்டுவிடுவாரோ என்ற பதற்றத்தோடயே காரை ஓட்டிக்கொண்டு போனான் அருண்.

ட்ராபிக் சிக்னலில் நின்றிருந்தபோது பெண் ஒருவர் ஒரு கைக்குழந்தையுடன் வந்து ஃபாதர் பக்கமாகக் கார் கதவைத் தட்டினாள். “இவங்களுக்கு வேறு வேலையே இல்ல. இருக்கிற டென்சன்ல நம்ம உயிர வாங்குறாளுங்கஎன்று அலுத்துக்கொண்டான் அருண்.

அந்தப் பெண் அந்த இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஃபாதர் சில்லறை ரூபாய்க்காகத் தன் பர்ஸைத் தேடினார். பர்ஸை எடுத்து வராதது தெரிந்தது. “இவங்களுக்கு நம்ம அஞ்சோ பத்தோ கொடுக்குறதாலதான் அடிக்கடி வந்து நம்மளத் தொந்தரவு பண்ணுறாங்க. இவங்களுக்கும் கொள்ளைக்கூட்டத்திற்கும் லிங் இருக்கு. காசு கொடுக்காதீங்க.” அருண் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவேயில்லை. எப்போதும் முன்சார்பு எண்ணம் கொண்டே இருந்தான்.

பிரின்ஸ்பால் உமா கொடுத்த கவருக்குள் கண்டிப்பாக ஐந்நூறு அல்லது ஆயிரம் இருக்கும் என்பது ஃபாதர் பிரேமுக்குத் தெரியும். தன்னிடம் பணம் இருப்பது தெரிந்திருந்தும் கார் கண்ணாடியைக் கீழே இறக்கிகாசு இல்ல, நீ போஎன்றார்.

அந்தப் பெண்காசு பணம் வேணாம் சாமி, என் பிள்ளைய ஆசிர்வாதம் பண்ணுஎன்று சொல்லிக் கைக்குழந்தையை நீட்டினாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனார் ஃபாதர். நாம என்னவோ நினைக்க, இந்தப் பெண் வேறெதுவோ நினைத்திருக்கிறாளே... என்றிருந்தது அவருக்கு. எளிதில் ஒருவரைத் தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும், பாக்கெட்டில் காசிருந்தும் இல்லை என்று சொல்லிவிட்டோமே என்ற குற்றவுணர்வும் அவரைக் குத்தூசியாய் ஆயிரம் முறை குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.

குழந்தையை ஆசிர்வதித்துவிட்டு அக்குழந்தையின் கண்களைக் கூர்ந்துப்பார்க்கக்கூட முடியாமல் கார் கண்ணாடியை வேகமாக இழுத்தடைத்துக்கொள்ள நினைத்தபோது, தன்னிடமிருந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண். ஒரு மனிதனை இப்படியும் தண்டிக்கலாமா? ‘இவரை விட்டு விடு போதும்என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அருணுக்கு. “வேணாமா, நீயே வச்சுக்கோஎன்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பச் சொன்னார் ஃபாதர்.

ட்ராபிக் சிக்னல் சிவப்பிலேயே இருந்தது. அந்தத்திக்... திக்...’ நிமிடங்கள் நரகத்தின் கோரப் பிரதிபலிப்பு போலிருந்தது. அங்கிப் பாக்கெட்டுக்குள் இருந்த பணம் அவருக்குப் பெரும் பாறாங்கல்லாய் கனத்தது. பச்சை சிக்னல் விழுந்து கார் கிளம்பியது. கிடைத்த வண்டு ஒன்றைக் கொன்று தின்ன இழுத்துச்செல்லும் கட்டெறும்புகள்போல அதிமிக வாகன நெரிசலில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தக் கார்.

ஒருவர் மற்றவரைப் பற்றிய முன்சார்பு எண்ணங்கள் (Bias) ஒருவரின் நன்மைத்தன்மையை அறியவிடாமல் செய்கிறது. சமூகங்களில் பிரதிபலிக்கும் இத்தகைய மனப்பாங்கு இன்று செயற்கை நுண்ணறிவுத் தளங்களிலும் பரவலாகக் காணக்கிடக்கின்றது. இதனால் பல்வேறு குழப்பங்களும் தாக்கங்களும் பிளவுகளும் சமூகத்தில் ஏற்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு பெரும் தரவுகளை (Big Data) அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இவ்வகைத் தரவுகள் முன்சார்புடையதாக அதாவது ஒரு மொழிக்கோ அல்லது ஒரு சமயத்திற்கோ அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமாயின், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும். பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மிகுந்து கிடக்கும் தரவுகளைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றில் அந் நாட்டு மொழிகள், கலாச்சாரம், ஆளுமைகள், கருத்தியல்கள் மிகுந்து காணப்படும். இந்தியா போன்ற நாடுகளின் தரவுகள் அதில் அதிகம் இடம் பெறவில்லை என்பதனாலேயே இதனைபிரதிநிதித்துவ சார்பு (Representation Bias) என்கிறோம்.

பல நேரங்களில் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்கின்ற நிறுவனங்கள் சமூகத்தை, அதன் சிந்தனைத் திறனை மடைமாற்றம் செய்திட அதன் அல்காரிதச் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனஇதனால் நாம் எதைப் பார்க்கவேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? யாருக்கு வாக்குச் செலுத்த வேண்டும்? என்ன வாங்கவேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுக்க நாம் மறைமுகமாக நிர்பந்தப்படுத்தப்படுகிறோம். இதனைஅல்காரித சார்பு (Algorithmic Bias) என்கின்றனர். இத்தகைய அணுகுமுறை மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளையும் பிரிவினைகளையுமே விளைவிக்கின்றன. இதனால் செயற்கை நுண்ணறிவின்சோசியல் இன்ஜினியரிங்செயல்பாடு நம்மை ஆளுமைசெய்து, நம் முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையாத நிலையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் பல சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு முன்சார்புத்தன்மையற்ற தளங்களாக இருப்பதை அரசுகளும் பெரும் நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மேற்கூறப்பட்ட கதைமாந்தர்களான அருண் மற்றும் ஃபாதர் பிரேம் செய்த தவற்றைச் செயற்கை நுண்ணறிவும் செய்துகொண்டே இருக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
ஒளி விளக்கேற்றும் உயர் கல்வி!

தமிழ்நாடு இன்று உயர் கல்வித் துறையில் இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்வி மேலாண்மை, மாணவர் பதிவு, பெண்கள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூகநீதி சார்ந்த புதிய முயற்சிகள் ஆகிய அனைத்திலும் மாநில அரசு பல்வேறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. 2025-ஆம் ஆண்டுக்கான தரவுகள் மாநிலத்தின் உயர் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர்.

அரசு தரவுகளின்படி தமிழ்நாட்டின் மொத்த உயர் கல்வி பதிவு விகிதம் (Gross Enrollment Ratio) 48% கடந்துள்ளது. இது இந்திய சராசரி 28% விட சிறந்த நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2021-22-ஆம் ஆண்டு 45% மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்குச் சென்றனர். ஆனால், தற்போது 2023-24-க்குள் அந்த விகிதம் 74% ஆக உயர்ந்துள்ளது. இது மிகச் சிறப்பான வளர்ச்சியைக் குறிக்கிறது.

பெண்கள் கல்வியிலும் புதிய வரலாறு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘புதுமைப் பெண்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படுவதால், அவர்கள் உயர் கல்வியில் தொடரும் எண்ணிக்கை 2.09 இலட்சத்தில் இருந்து 4.06 இலட்சமாக இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.

பள்ளிகளில் செயல்படுவது போலவே அரசுக் கல்லூரிகளில் புதியகல்லூரி மேலாண்மைக் குழுக்கள் (IMC) அமையத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வட்டாரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகச் செயல்படும். கல்லூரியின் நிர்வாகத் திறனை உயர்த்த இது ஒரு நல்ல நோக்கம் ஆகும்.

2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் உயர் கல்விக்காக ரூ. 8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, கட்டட வசதி மற்றும் ஆசிரியர் நியமனம் ஆகியவற்றிற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்திட்டம் தற்போது 353 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 827 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செயல்படுகிறது. மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையில் மிகுந்த வளர்ச்சி காலமாக அமைந்திருக்கிறது. மாணவர் பதிவு விகிதம், பெண்கள் கல்வி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகத் தெளிவானது.

இந்த நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கிறித்தவ குறிப்பாக, கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர். இன்று கத்தோலிக்க மறைமாவட்டங்கள், துறவற சபை நிறுவனங்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் பல பின்தங்கிய பகுதிகளில் ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இத்தகைய சூழலில், அரசு உதவி பெற்று கிறித்தவச் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில், கத்தோலிக்க ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சில கல்லூரிகளில் கத்தோலிக்கக் கிறித்தவ மாணவர்களைவிட வசதி படைத்த பலர் அதிகமான வாய்ப்பினைப் பெறுகிறார்கள். இதுபோன்ற சூழலில் ஆயர் பேரவை, மறைமாவட்ட ஆயர்கள், துறவற சபைத் தலைவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதும் பலருடைய எண்ண ஓட்டங்கள்.

உயர் கல்வி என்பது ஒவ்வோர் இளைஞனின் கனவுகளை நனவாக்கும் கருவி. அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே சமுகநீதி. தமிழ்நாடு அரசு கல்விக்காக மேற்கொண்டு வரும் முன்னேற்ற முயற்சிகளில், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு ஓர் அமைதியான புரட்சிபோலவே திகழ்கிறது. கல்வி என்பது நற்செயலின் ஒரு வடிவம் என நம்பும் இந் நிறுவனங்கள் ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மாணவர்களுக்கு நம்பிக்கையுடன் எதிர்காலம் தரும் தூண்களாகவே இருக்கின்றன. ஆயினும், இந்தப் பணியில் சில இடர்ப்பாடுகள், பாகுபாடுகள், நிர்வாகச் சவால்கள் இருப்பதையும் நாம் மறுக்க இயலாது. நீதி வழி சென்று, திறந்த மனத்துடன் சவால்களை எதிர்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களின் பணிகள் தொடர வேண்டும். சமத்துவமான, தாராளமான, எல்லாருக்குமான கல்வி வழங்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டம் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் மலர வேண்டும்

நம் எதிர்காலத்தின் ஒளிக்கதிர்கள் கல்லூரித் திறவுகோல்களில் ஒளிந்திருக்கும். அந்த ஒளிக்கதிர்களை நோக்கி அனைவரும்  செல்ல வழிகாட்டும் ஒளிவிளக்காக, நமது கல்வி நிறுவனங்கள் என்றும் சுடர்விட்டுக்கொண்டே இருக்கட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
எது எளிது? அரசியலா? ஆன்மிகமா?

பொதுநலமா? சுயநலமா? விவசாயிகளின் தற்கொலையா? அரசாங்கத்தின் கடன் தள்ளுபடியா? மனிதன் சுட்டுக் கொல்லப்படுவதா? ஸ்டெர்லைட் காப்பர் கம்பெனி மூடப்படுவதா? சேலம் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதா? எட்டு வழிச்சாலை கைவிடப்படுவதா? மீனவர்களின் வாழ்வு முக்கியமா? மீனவர்களின் இருப்பிடத்தை அழிக்கும் துறைமுகங்கள் முக்கியமா? கலாச்சாரப் பண்பாட்டைக் காப்பதா? கறவை மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதா?

ஏன் இந்த அமைதி? ஏன் இந்தப் பொறுமை? எவரோ ஒருவர், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும்போது வருகின்ற கொந்தளிப்பு, ஏன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பாயம் வரவில்லை? அமைதி, பொறுமை, காலதாமதம் இவையெல்லாம் மனிதனின் வாழ்விற்கா? இல்லை, அவனின் அடிமட்ட அழிவிற்கா? ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ தலைநிமிர்ந்து நிற்பதைக் காட்டிலும், தலைகுனிந்து நடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். குற்றம் நடக்கின்ற இடத்தில், குற்றம் என்று தெரிந்தும் அவ்விடத்தில் அமைதிக் காப்பவன் தியாகி அல்ல; மாறாக, அவர் ஒரு தீவிரவாதி என்று நாம் படித்திருக்கிறோம்.

ஆம்! நாம் ஏன் இன்னும் அமைதி காக்கின்றோம்? அப்பாவி விவசாயிகளின் அழுகுரல் நம்முடைய காதுகளைத் துளைக்கவில்லையா? குண்டுகள் துளைத்து மண்டையிலிருந்து வெளிவந்த இரத்த ஆறுகளில் நம் மனம் ஈரமாகவில்லையா? எத்தனையோ தற்கொலைகள், எத்தனையோ கொலைகள்! ஆனால், ஊடகங்களில் மட்டும் வெளிவரவில்லை... ஏன்? குரல் கொடுக்கும் குரல்களின் அடையாளம் மறைக்கப்படுவதாலா? ஹெல்டர் கேமரா இவ்வாறு கூறுகின்றார்: “நான் ஏழைக்கு உதவி செய்யும்போது என்னைப் புனிதன் என்கிறார்கள்; நானோ இவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்று கேள்வி எழுப்பும்போது என்னைப் பயங்கரவாதி என்கிறார்கள்.”

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிஉரிமை இருக்கின்றது. மனிதா நீ போராடு! உரிமை உன் கையில் உள்ளது. எழுதுகோல் எடுத்து வாழ்வுக்கு எழுத்து, மூச்சுக் கொடுப்பவன் நீ! நீ போராளிதான். போராடினால் மட்டும் போதாது. நாம் எதை முன்வைக்கிறோமோ அதை நாம் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும். “செபிக்கும் உதடுகளைவிட, உதவும் கரங்களே மேலானவைஎன்கிறார் புனித அன்னை தெரேசா. கோவில் கட்டுவதற்கும், கோபுரம் எழுப்புவதற்கும் உதவுதல் மட்டும் அல்ல நம்பிக்கை வாழ்வு; மாறாக, நம்மை நாடி வருவோருக்கு ஒரு வேளை உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தலே ஆகும். மனிதா, எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி உடையும்போது, ‘என் வீட்டுக் கண்ணாடி உடையவில்லை, எனக்கென்ன கவலை?’ என்று இருந்துவிடாதே. இன்று எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி, நாளை உன் வீட்டுக் கதவுக் கண்ணாடி!

பதவியும் பணமும் தலைவிரித்தாடும் இக்களத்தில் இரண்டும் இல்லாத நான் என்ன செய்வது என்று எண்ணாதே? அன்று சிறுவன் தாவீது, கோலியாத்தைப் பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால் ஆண்டவரின் ஆற்றல் அச்சிறுவனிடமிருந்து வெளிவராமல் போயிருக்கும். அன்று பவுலாக மனமாறிய சவுல், உரோமை ஆட்சியை நினைத்து, இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால், இன்று கிறித்தவம் உலகெங்கும் பரவியிருக்குமா?

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டுஎன்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை மனத்தில் பதித்து, ‘என்னாலும் செய்ய இயலும்என்ற மனப்பக்குவத்தோடு, நம் அயலாருக்கு நம்மால் முடிந்ததைச் செயலாக்கிட முயல்வோம்.

அன்பு ஆயுதமாகிறது! ஆயுதம் அறமாகிறது!

அநீதிகளை அழிக்க! ஆணவங்களை ஒழிக்க!

அன்பாய் வாழ்வோம்! அறமாய்ச் செயல்படுவோம்!

அரசியலில் ஆன்மிகம் தேவையாகலாம்; ஆனால், ஆன்மிகத்தில் ஒருபோதும் அரசியல் கூடாது. ஏனென்றால், அரசியலும் ஆன்மிகமும் இரண்டும் அவ்வளவு எளிது அல்ல; ஆனால், இரண்டும் பல நேரங்களில் சுயநலத்தை நாடியே அமைந்துள்ளது. ஆகவே, அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும் பொதுநலம் கருதி மக்களுக்காக, மனிதநேயத்திற்காகப் பணிபுரிய வேண்டும். வீறுகொள்! உனது அறிவு எனும் தராசில் ஆன்மிகத்தையும், அரசியலையும் சரிவரப் பேணு! கேள்விக்குறியாய் இருக்கும் உன் வாழ்வு, உலகத்திற்கே ஆச்சரியக் குறியாய் மாறும்.

வாழ்க வளத்துடன்!

news
சிறப்புக்கட்டுரை
உருவாக்கப்பட்ட இயல்பான கூட்டணி

வரலாற்றிற்கு நாம் செய்யும் பெரிய சேவை என்பது, கடந்த கால நிகழ்வுகளைத் (வரலாற்று உண்மைகளை) திருப்பி எழுதுதல் அல்ல; வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தாழ்மையோடு கற்றுக் கொள்ளலே (‘தி இந்து - ஏப் 15, 2025).

அண்மையில்நம்மை ஆள்வதற்கே உதித்தனஎன்று பிதற்றித் திரியும் கட்சிகளின் தேர்தல் காலக் கூத்துகள், உலக அரசியல் எங்குமே சந்தித்திராத பெரும் கூத்தாகும்.

நாகரிக அரசியலின் சிந்தனையின் விளைவாக உருவான சனநாயகம் எனும் மிகப்பெரிய மானுட மதிப்பீடு மலிவான, தரம்தாழ்ந்த கட்சிகளால் சிதைக்கப்பட்டுவரும் நிலையில், மனச்சாட்சிமிக்க எவருமே கவலைகொள்ளாதிருக்க முடியாது. வள்ளுவர் காட்டும் கயமையின் இலக்கணத்தை வழுவாது காத்து நிற்கும் கூட்டம் மக்களுக்காகப் பேசுவதாகவும், ஊழலை ஒழிக்கப் போவதாகவும் உரத்தக் குரலில் பேசிவருகின்ற காட்சிகள் பொய்மையின் உச்சக்கட்டம்.

அரசியல் செயற்பாடு, அரசியல் தந்திரம் மற்றும் யுக்தி என்பனவெல்லாம் அரசியல் உலகு சந்தித்து வரும் நிதர்சனங்கள்தாம். யுக்திகளும் இலக்கை அடைய கைகொள்ளும் முயற்சிகளும் நூறு விழுக்காடு அறவழியில்தான் நடத்திப்பெற வேண்டும் என்று எவரும் இன்று எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய ஓர் அறமழிந்த சோகத்தை நாம் கண்கூடாகக் காண்கின்ற நிலையில், இப்போக்கும் கடந்துபோகும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கடந்து சென்றிடலாமா? நாளும் ஆளும் பொறுப்பை ஏற்க விருப்பவர்களின் இந்த அநாகரிகச் செயல்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? எதிர்கொள்வதும் எதிர்வினையாற்றுவதும் மானுடருக்கான இயல்பான கடமையென்பது உண்மையானால், குடிமக்கள் எப்படி எதிர்வினை ஆற்றப் போகின்றனர்? குடிமக்களுள் ஒரு பகுதியினரான, மதச்சிறுபான்மையினருள் ஒரு பிரிவினரான கிறித்தவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? அறமிழந்த இவ்வகை அரசியல் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதிருத்தல் மிகப்பெரிய பாவமில்லையா?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் வேளையில், பொறுமை இழந்து எதிர்க்கட்சித் தலைவர் புதுதில்லி விரைகிறார். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சென்னை விரைகிறார். எதிர்க்கட்சித்  தலைவர் வீட்டின் விருந்தோம்பலில் மகிழ்கிறார். ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டணியை அறிவிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார். இவர்களுக்கு இந்த அவசரம் ஏன்? பகை, பிளவு, எதேச்சதிகாரம் எனும் கேடுகளின் விளை நிலமாம் இச்சக்திகள் காட்டும் வேகத்திற்கு எப்படி ஈடு கொடுக்கப்போகிறோம்? எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம்?

இயல்பும் முரணும்

கட்சிகள் வெறும் பெயர்கள் அல்ல; கட்சிகள் சனநாயகத்தின் கொடை. கருத்துச் சுதந்திரம் இதன் உள்ளடக்கம். பன்மையைப் போற்றும் சனநாயகம் கருத்துரிமையை மதிப்பதால், ‘கருத்துஎனும் உள்ளடக்கத்தைக் கொண்ட கட்சிகளை ஏற்கிறது. முரண்பட்ட கட்சிகள் இயங்கலாம் என்ற அடிப்படை உரிமை கட்சிகளுக்கு உண்டு. ஒரே கொள்கைகொண்ட கட்சிகள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சனநாயகம் அல்ல; ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதனால், ஒரே கொள்கையுடைய ஒரே கட்சிதான் இருக்கமுடியும் என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் இந்த நிலைமைக்கு என்ன பெயர்?

இன்றைய நிலை என்ன?

இன்று இந்நாட்டை ஆளும் மதவாதப் பாரதிய சனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் முன்னணியென்பதை அனைவரும் அறிவர். ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கின்ற வலுவான சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் ஒரு கருவியே இன்றைய ஆளுங்கட்சி; இது இந்து தேசத்தை உருவாக்க இந்துத்துவத்தைக் கேடயமாகக்கொண்ட கட்சி. இக்கொள்கைகளை உயிர்க் கொள்கையாகக்கொண்ட இக்கட்சி, சித்தாந்த வலுவுடைய இக்கட்சி, எந்தச் சூழலிலும் தன் கொள்கையைச் சமரசம் செய்வதே இல்லை. சனநாயகம், சமயச்சார்பின்மை, சமத்துவம் என்பன இக்கட்சியின் பொருந்தாக்கொள்கைகள். சனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரான இக்கட்சி, சனநாயகம் தரும் தேர்தலை மிகச் சாதுரியமாகக் கையிலெடுத்து, மதவழி மக்களை ஓர்மைப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றி வருவதோடு, தொடர்ந்து மக்களை மயக்கி ஆட்சியையும் நடத்தி வருகிறது.

வர்ண தர்மத்தின் சாதிபேதத்தை ஒழித்து, சமதர்மத்தைப் பேணக் குரல் கொடுத்த பெரியாரின் திராவிடம் தீர்க்கமான கோட்பாட்டை அல்லது சித்தாந்தத்தைக் கொண்டது.

ஒன்று மனுவாதி பேசுவதுமற்றொன்று சமூக நீதி பேசுவது. இரண்டும் முரண்பட்டவை. இவைகளுள் சமரசம் செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட்டால், அது இயல்பான கூட்டணியா? கள்ளக் கூட்டணியா? இது முரணா? இயல்பா?

இக்கள்ளக் கூட்டணியில் சவாரி செய்த அவப் பெயர் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்குத் தலைமை ஏற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு. திராவிடச் சித்தாந்தத்தை உரக்கப் பேசும் தி.மு.. தேசிய சனநாயக முன்னணியோடுகூட்டணிஎன்ற பொய்மையில் வாழ்ந்த காலமும் உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய சனதாவோடு பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தாமரையை அறிமுகப்படுத்திய பெருமை கலைஞருக்கும் உண்டு.

எதிர்கொள்ளும் பேரபாயம்

இந்திய சனநாயகம் அல்லது இந்திய சனநாயகக் குடியரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளது.

இந்தியா எனும் ஓர் உபகண்டம், இதன் உண்மையான பன்முகப் பண்புகளைக் காத்திட துணை நிற்கும் சனநாயகம் எனும் வலுவான தூண் இன்றைய ஆட்சியாளர்களின் பாசிசப் போக்கினால் தகர்ந்து போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. சனநாயக இந்தியாவா? சனநாயகத்தை அப்புறப்படுத்தும் எதேச்சதிகார அரசா? என்ற கேள்வி எழும் பேரபாயச் சூழலில் நாடு நிற்கிறது.

சனநாயகம் எனும் மாபெரும் மானுட மதிப்பீட்டைத் தாங்கி நிற்கும் இந்திய அரசமைப்புச் சட்டங்கள், படிப்படியாகத் துகில் உரியப்பட்டு வருவதை இந்நாட்டுக் குடிமக்கள் மகாபாரதத் துரியோதனக் கூட்டத்தினரைப் போல் காணாதிருக்கின்றனரா? அல்லது கண்டும் செயல்படும் ஆற்றலின்றி இருக்கின்றனரா?

என்ன நடக்கிறது? நாட்டின் ஒருமை, ஒற்றுமை, இறையாண்மை என்பனபற்றியெல்லாம் எந்தத் தெளிவும் பெற இயலா மக்கள் ஒருபக்கம்; மறுபக்கம் பொய்யான சொல்லாடல்களை நம்பி ஏமாந்து போகும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி; ஏமாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலை வேறு. அண்மையில் தமிழ்நாட்டு கட்சிகள் முன்னெடுத்திருக்கும் கூட்டணி முடிவுகள் மிகப்பெரிய ஆபத்தைத் தருவன. திராவிடத் தமிழ்நாட்டில் பா...வோடு கூட்டணியென்பதுமுரணானகூட்டணியாகத்தான் இருக்க முடியுமென்பதே உண்மையாயிருக்க, இக்கூட்டணியைஇயல்பானகூட்டணியென்று .தி.மு..வும் பாரதிய சனதாவும் அறிவிக்கின்றன என்பதுதான் இங்கு வேடிக்கை.

இயல்பான கூட்டணிஎன்ற சொல்லாடல் தமிழ்நாட்டுத் தேர்தல் கூட்டணி வரலாற்றுக்குப் புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா அம்மையார்மோடியா? லேடியா?’ என்ற தேர்தல் முழக்கமாக ஓங்கி ஒலித்தாலும், அம்மையார் பாரதிய சனதாவின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டவர் அல்லர். அம்மையார் தீவிர இந்து மத பக்தர் என்பதால் நாம் இம்முடிவுக்கு வரவில்லை. இராமசென்ம பூமியில் இராமருக்கான கோவில் விவகாரத்தில் இவர் காட்டிய சார்புநிலை, கோவில் கட்ட கரசேவகர் மூலம் செங்கற்களை அனுப்பி வைத்த முறை, இராமருக்கான கோவிலைக் கட்டி எழுப்புவதற்கான முடிவை நியாயப்படுத்திய முறை என்பவையெல்லாம் இவரின் மதச்சார்பை மட்டுமல்ல, அரசியல் சார்பையும் வெளிப்படையாகவே காட்டின.

அவர் ஆட்சியின்போது தலைநகர் டில்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டமொன்றில், “சிறுபான்மையினருக்கு அளிக்கப்பெறும் உரிமைகள் பெரும்பான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடாதுஎன்ற இவரின் கருத்து இந்திய மதப் பெரும்பான்மை மதவாதிகளின் போக்கைப் பிரதிபலிக்கவில்லையா? தமிழ்நாட்டில் இவர் அறிமுகப்படுத்திய மதமாற்றுத் தடைச்சட்டம் இவரின் முகவரியை மிகத் தெளிவாகவே காட்டியது. சுருங்கக் கூறினால், அம்மையார் பா...வோடு தேர்தல் கூட்டணி கொள்ளாவிட்டாலும், பா...வின் உள்ளார்ந்த மதவாதத்திற்கு முற்றிலும் முரண்பட்டவர் அல்லர் என்பதே உண்மை.

தான் சார்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூர்வாசிரமக் கோட்பாடுகளுக்கும், இவருக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. இவருக்கு முந்தைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நீண்டகாலத் திராவிட இயக்கத் தொடர்பின் சாயல் இவர் ஆட்சியின் எப்பகுதியிலும் வெளிப்பட்டதாகவே தெரியவில்லை. திராவிடத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக, பொருளாதார அடிப்படையிலான கொள்கையைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்து, மக்கள் கொடுத்த தேர்தல் தோல்வியால் பின்வாங்கியவர் எம்.ஜி. இராமச்சந்திரன். .தி.மு.. முன்னோடிகளின் கொள்கை பின்னணி இப்படியிருக்க, இன்றைய எடப்பாடியார் எப்படி முரணான முடிவுகளை எடுக்கமுடியும்? .தி.மு..வின் இன்றைய பாரதிய சனதாவுடனான கூட்டணியில் புதுமை எதுவுமில்லை. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றுமே எங்குமே மறைத்ததில்லை. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுக்கும்சிந்தூர்போர் நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியப் பெரும்பான்மைவாதச் சாயலைப் பார்க்க முடியும்.

நாம் எங்கே இருக்கிறோம்?

மதவாதிகள், அன்றைய இந்துத்துவப் பெரும்பான்மைவாதிகள்  எதையெல்லாம் கொள்கையாக வகுத்தனரோ, அவை எல்லாவற்றையும் இன்று நிறைவேற்றி வருவதைப் பார்க்கிறோம். அரசின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் இந்திய சனநாயகத்திற்கும் அரசமைப்புக்கும் எதிரானவை என்றாலும், ஆட்சி அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைத்தான் பார்க்கிறோம்.

.தி.மு.., பாரதிய சனதாவின் எந்தக் கொள்கை முடிவுகளையும் எதிர்த்ததில்லைஎனவேதான், இடையில் முறிந்தது போன்று காட்டப்பெற்ற உறவு, மீண்டும் துளிர்த்தமைக்குக் காரணம் இதுவே. இவ்விரு கட்சிகளும் உறவுகொண்டதை விமர்சித்த தமிழ்நாடு முதல்வருக்கு எடப்பாடியார் அளித்த பதிலை நாம் நினைவுகொள்ளல் அவசியம். “நாங்கள் எவருடனும் கூட்டணி வைக்கமுடியும். ஏன் முதல்வர் பதறுகிறார்?”

எடப்பாடியார் பதில் மிக ஆழமானது, .தி.மு..வின் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு இப்பதில் தரும் செய்தி என்ன? .தி.மு..வின் இந்நிலைப்பாடு தமிழ்ச் சமூகத்திற்குத் தரும் செய்தி என்ன?

கட்சித் தலைவர்களின் போக்கு சுயநலப் போக்கில் அமைந்திருக்கலாம். தி.மு.. அரசை வீழ்த்த நினைக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எடுக்கும் நிலைப்பாடு அல்ல; பாரதிய சனதா என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முன்னணியின் கருத்தியல், தமிழ்நாடெங்கும் பரவிக் கிடக்கும் கட்சித் தொண்டர்களை ஈர்க்கும் கருத்தாக மாறுகையில் பின்விளைவை, அபாயத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

news
சிறப்புக்கட்டுரை
பகல்காம் பயங்கரவாதப் படுகொலைகள் கற்றுத்தரும் பாடங்கள்

கறுத்துத் திரண்ட பகைமேகங்கள் கலையத் துவங்கியுள்ளன. பீரங்கிகளும் ட்ரோன்களும், நாடுவிட்டு நாடு தாவும் ஏவுகணைகளும் அவைகளை இயக்கிய இராணுவமும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. நம் எல்லைப்புற மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதை நம்மால் கேட்க முடிகிறது.

ஏப்ரல் மாதம் 22-இல் தொடங்கி மே மாதம் 7-இல் உச்சத்தைத் தொட்ட சில இந்தியக் காட்சி ஊடகங்களின்கூச்சல்இன்னும் ஓய்ந்தபாடில்லை. இரண்டு நாடுகளிலும் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களின் பேரிழப்புகளுக்கும் பெரும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு யுத்தத்தை .பி.எல். கிரிக்கெட் போட்டியைப்போல வணிகப்படுத்தி வியாபாரம் செய்த அவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. செய்திகளைச் சுவைப்படச் சொல்ல சிறிதுமசாலாதேவை என்பதை நம்மால் புரிய முடிகிறது; ஆனால், செய்தி முழுவதுமேமசாலாஎன்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? ‘தேசிய ஊடகங்கள்என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக்கொள்ளும் சில பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளுக்கும் (Visuals), களத்தில் நடந்தவைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உண்மை கண்டறியும் பல நடுநிலை ஊடகங்கள் வலுவான ஆதாரங்களோடு நிரூபித்துள்ளன. அவற்றை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்.

முதலில், நமது இராணுவத்தின் முப்படைகளுக்கு நமது மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்! ‘சிந்தூர் நடவடிக்கைகள்தொடங்கிய நாளில் இருந்து, முடிந்த நிமிடம் வரை பாகிஸ்தான் அரசையும், அவர்களது இராணுவத்தையும், தீவிரவாதக் குழுக்களையும் கலங்கடிக்கச்செய்து அவர்களை நிலைகுலையச் செய்த நம் இராணுவத்தினரின் வீரதீர சாகசங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்! எதிரியின் அடிமடியிலேயே கைவைத்து, தங்களது அசைக்கமுடியாத, வலிமையான யுத்த ஏற்பாடுகள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடங்களுக்குள் எல்லாம் எளிதாக நுழைந்து எதிரிகளின் உயிர்த்தளங்களைச் சில நிமிடங்களிலேயே நிர்மூலமாக்கும் நமது இராணுவத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகளையும், அவைகளை மிகவும் இலாவகமாகக் கையாளும் நமது வீரர்களின் திறமைகளையும் துணிச்சலையும் பார்த்து, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலக நாடுகளே பிரமிப்படைந்துள்ளன. நமக்குச் சேதங்களே இல்லை என்பது அல்ல; யுத்தக் களத்தில் சேதம் இல்லாமல் இருப்பது எப்படிச் சாத்தியம்?

சிந்தூர்இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட செலவுகளும் இழப்புகளும் ரூபாய் 50,000 கோடி என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இராணுவ நடவடிக்கைகளின்போது உயிரிழந்த வீரர்களுக்கும், பாகிஸ்தான் இராணுவத்தின் முறையற்ற தாக்குதலால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் நமது வீர வணக்கம்!

போர்என்று அறிவிக்கப்படாத இந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பாகிஸ்தானின் எல்லை தாண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அவர்களோடு நாம் யுத்தம் நடத்துவதும் இது ஒன்றும் முதல்முறையல்ல. ஒவ்வொரு முறையும் நம்மோடு மோதுவதும், மோதித் தோற்றபின் அவமானப்படுவதும் பாகிஸ்தானுக்குப் புதிதல்ல. நமது கடந்தகால அனுபவங்களை நினைவில் கொண்டு, புதிய சூழ்நிலைகளின் கட்டாயங்களை உள்வாங்கி, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அத்துமீறல்களை முழுமையாகத் தவிர்க்கும் அணுகுமுறைகளின் அடிப்படையில்சிந்தூர்இராணுவ நடவடிக்கைகளை நாம் நிறுத்தியுள்ளோமா? என்கிற கேள்வியினைப் பல புவிசார் அரசியல் நோக்கர்கள் முன்வைத்துள்ளனர்.

1965-இல் நாம் யுத்தத்தை நிறுத்தியதும் அயூப்கான் அரசு கவிழ்ந்தது. 1971-இல் நம் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, அதன் பூகோளத்தையே மாற்றி அமைத்தார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. 1999-இல் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை அமெரிக்கா உள்பட உலக நாடுகளால்இரவுடிகளின் தேசம் (Rogue State) என்றழைக்கப்பட்டு, கார்க்கிலில் இருந்து நமது இராணுவத்தால் பாகிஸ்தான் படைகள் அவமானத்துடன் வெளியேற்றப்பட்டன. இம்முறை நமது இராணுவம் வெற்றி முகத்தில் இருந்தபோது, வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தான் பலவீனப்பட்டு நிற்கின்றபோது, இனிமேல் அவர்கள் விரும்பினாலும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தில் ஒருநாளும் ஈடுபட முடியாத ஓர் ஏற்பாட்டை உருவாக்கும் சாத்தியம் இருந்த வேளையில், அந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோமோ என்ற வினாவை என்னால் தவிர்க்க இயலவில்லை.

கடந்தகால யுத்தங்களின்போது நமக்குக் கிடைக்காத பல அனுகூலங்களும், சாதகமான சூழ்நிலைகளும் இம்முறை நமக்கு இருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. இம்முறை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், குடிமைச் சமூகமும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவினை ஒன்றிய அரசுக்கு வழங்கின. தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக, இசுலாமியப் பெருங்குடி மக்களும் பயங்கரவாதத்தின் விளைநிலமாக இருக்கின்ற பாகிஸ்தான் இராணுவத்தின் விஷப்பற்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதிலே ஒன்றுபட்டு நின்றனர். இசுலாமிய நாடுகளும் பயங்கரவாதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை ஒன்றுபட்டு ஆதரித்தன.

கடந்த யுத்தங்களின்போது இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து, ஆயுதங்கள் உள்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்கா இப்போது நமது நட்பு நாடு. அதன் அதிபர் டிரம்ப் நமது பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பர்.

நமது நாடு உலகின் வல்லரசுகளில் ஒன்று. நாம் இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரச் சந்தை. உலகில் மிக அதிகமாக நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடு. இவ்வளவு வசதிகள் இருந்தும், பாகிஸ்தான் எனும் பயங்கரவாத நாட்டின் முதுகெலும்பை உடைக்கவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதை நமது பிரதமருக்கு யார் கூறுவது?

யுத்தத்தின் வெற்றிப்பிடி நம் கையில் இருக்கும்போது, தோல்வி பயத்தில் எதிரி துவண்டு கிடக்கும்போதுஉன்னை மன்னித்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துகிறோம்என்று நமது பிரதமர் அல்லவா அறிவித்திருக்க வேண்டும்! அதனை எப்படி அமெரிக்கக் குடியரசு தலைவர் அறிவிப்பது? அது நமது இறையாண்மைக்கு அவமானமல்லவா?

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் உங்கள் இரண்டு நாடுகளோடும் அமெரிக்கா எவ்வித வியாபாரத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதுஎன்று நான் எச்சரித்தவுடன்இரண்டு நாட்டு பிரதமர்களும் அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக இராணுவத் தாக்குதல்களை நிறுத்திவிட்டனர்என்று அதிபர் டிரம்ப் பேசுவதை நமது பிரதமர் மோடி எப்படிச் சகித்துக்கொள்கிறார்? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஓர் அஞ்சாநெஞ்சன் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் நமது பிரதமர், பலமுறை பல சர்வதேச அரங்குகளில் டிரம்ப் இப்படித் தொடர்ந்து பேசிவருகின்றபோது அமைதி காக்கவேண்டிய அவசியம் என்ன?

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “நமது இராணுவத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நமது இராணுவத் தளபதியிடம்தாக்குதல்களை நிறுத்துங்கள்என்று கெஞ்சிக் கேட்டார். அதனால் தாக்குதல்களை நிறுத்திவிட்டோம்என்று பேசினார்ஆனால், நமது பிரதமர் பேசுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே பாகிஸ்தான் மக்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,”நாம் இந்தியாவை வென்றுவிட்டோம்; இந்த வெற்றிக்கு உதவி செய்த சீனா, அமெரிக்க அதிபர்களுக்கு நன்றிஎன்று  எப்படிப் பேசினார்? நமது தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நாட்டின் பிரதமர் இப்படிப் பேசக்கூடுமா? இப்படி மமதையுடன் பேசும் அவர்கள் எதிர்காலங்களில் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பிரதமர் இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பாராளுமன்றத்திற்கும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கும்சிந்தூர்இராணுவ நடவடிக்கைகள் மூலம் தாம் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தாக்குதலுக்குப் பின்னரும், இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளாததைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்திய சனநாயகத்தில் தவிர்க்கக்கூடாத எதிர்க்கட்சிகளைச் சந்திப்பதை ஏன் அவர் தவிர்த்தார் என்பது நமக்குப் புரியவில்லை.

பகல்காம் சம்பவங்களுக்குப் பாதுகாப்புக் குறைவின்மை ஒரு காரணம் என்பதை ஆராய்ந்து, அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற  பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களைக் கண்டு நூறு பயங்கரவாதிகளை அழித்தொழித்த நமது படைகளால், நமது நாட்டுக்குள் இருநூறு கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அப்பாவி பொதுமக்கள் இருபத்தாறு பேரைக் கொன்றுவிட்டு தங்களது வசதிப்படி தப்பிச்சென்ற பகல்காம் பயங்கரவாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் வருந்துகிறது. அவர்களைப் பிடித்துச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, நியாயம் காணும்வரை தங்கள் குடும்ப ஆண்களை இழந்த நமது பெண்கள் எப்படி அமைதியடைவர்?

பிரதமர் உரையில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று: “நமது ஒற்றுமையே நமது பலம்.” பிரதமரின் இந்தக் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன். பிரதமர் போற்றும் தேச ஒற்றுமையைக் குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தேச விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தேசத்தின் ஒற்றுமையினைப் பிரதமர் காப்பாற்ற வேண்டும்.

ஆனால், பிரதமர் கூறுவதை அவரது சொந்தக் கட்சியினரே பின்பற்றுவதாகத் தெரியவில்லையே! பகல்காம் சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அந்தப் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்புபடுத்தி தேசம் முழுவதும் இசுலாமிய எதிர்ப்புணர்வினை உருவாக்குகின்ற வகையில் வலதுசாரி பாசிச மதவெறி சக்திகள் ஒரு பெரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று உணராத அவர்களது வெறுப்புப் பிரச்சாரத்தை, அப்படுகொலைகளால் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அநியாயமான அந்த விஷமப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள் மீதும் மிகவும் கேவலமான தாக்குதல்களை மதவெறி சக்திகள் வன்மத்துடன் தொடர்ந்தன.

கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷி அகர்வால்இந்தத் துன்பியல் சம்பவத்திற்குக் காஷ்மீரிகளையோ, முசுலிம்களையோ குறைசொல்ல வேண்டாம்என்று இணையதளத்தில் தெரிவித்ததற்குப் பா... உள்பட பலர் அவரை மிகவும் கொச்சையாக விமர்சித்தனர். இறந்துபோன திருவனந்தபுரம் இராமச்சந்திரன் என்பவரின் மகள் திருமதி. சரத் அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னோடு இறுதிவரை நின்று உதவி செய்த இரண்டு இசுலாமியக் காஷ்மீரி இளைஞர்களைப் பார்த்து, “தந்தையை இழந்து நின்ற எனக்கு இறைவன் கொடுத்த இரண்டு சகோதரர்கள்என்று கூறியதையும் வலதுசாரி மதவாதச் சக்திகள் கடுமையாக, கொச்சையாக விமர்சித்தன.

பயங்கரவாதச் சம்பவங்களுக்குத் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்கள் செய்த அனைத்து உதவிகளையும் செய்திகளாக வெளியிட்ட உள்ளூர் தொலைக்காட்சிகளையும், பத்திரிகையாளர்களையும் வன்முறையாளர்கள் கடுமையாக மிரட்டினர். காஷ்மீரத்துச் சாமானிய மக்கள் - குதிரை ஓட்டுவோர், சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்றவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்து உதவி செய்தனர். ஆனால், தேசிய ஊடகங்கள் உள்பட பெரும்பாலான ஊடகங்கள் இந்த நல்ல செய்திகளை இருட்டடிப்பு செய்தன.

பகல்காம் பயங்கரவாதப் படுகொலைகள் நடப்பதற்குப் பாதுகாப்புக் குறைபாடுகளும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வியைக் கேட்பதே தேச விரோதச் செயல் என்று அவர்கள் கொக்கரிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? இதனைப் பற்றிய விவாதங்கள் பொதுத்தளத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. இதற்காகவே இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை வேகப்படுத்துகிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது. அதற்காகச் சில நேரங்களில் அவர்கள் எல்லைகளை மீறும்போது தேசத்தின் எதிர்காலம் பற்றிய நமது கவலை அதிகமாகிறது.

நீண்ட அனுபவம் உள்ளவரும், இராஜதந்திர நடவடிக்கைகளில் நிறைந்த அனுபவம் உள்ளவருமான நமது வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது என்பதை அறிவித்ததற்காக அவர் மோடியின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சமூக ஊடகங்களில் அவர்மீது பழிசுமத்தி அவரையும், வெளிநாட்டில் வாழும் அவரது மகளையும் வரைமுறையில்லாமல் திட்டித்தீர்த்த சங்கிகளின் மூர்க்கத்தனத்தைத் தடுத்து நிறுத்தி, தட்டிக்கேட்டுத் தவறிழைத்தவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ..எஸ். அதிகாரிகள் சங்கத்திற்கு இருந்த உணர்வுகூட ஒன்றிய அரசிடம் இல்லையே! கடைசியில் தனது சமூக ஊடகக்கணக்கையே மூடிவைப்பதைத் தவிர மிஸ்ரிக்கு வேறொன்றும் செய்ய இயலவில்லை! அதைவிடப் பெரும் கொடுமைமதச்சார்பற்ற இந்திய இராணுவத்தின்முகமாகச் சர்வதேச ஊடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் சர்வதேச ஊடகங்களுக்குச் சிறப்பாக அறிவித்துக் கொண்டிருந்த கர்னல் சோபியா குரேஷியைபயங்கரவாதிகளின் சகோதரிஎன்று மத்தியப் பிரதேசத்தின் பா... அமைச்சர் விஜய்ஷா பகிரங்கமாக அறிவித்ததுதான். தேசம் முழுவதும் உள்ள குடிமைச் சமூகமும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பின்னரும் பிரதமரும் பா...வும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது ஆச்சரியமாக இருக்கின்றது.

தேச ஒற்றுமையின் ஆணிவேரை அழித்துவிடத் துடிக்கும் இப்படிப்பட்ட தேசவிரோதிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்படித் தேச ஒற்றுமையைக் காப்பது என்பதைப் பிரதமர் நமக்கு விளக்க வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கே தேச ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டின் எதிர்காலம் என்ன?

எங்கள் பிரதமரே! எனக்கு நம்பிக்கை இல்லாத, தனது சிந்தனையில், செயல்பாட்டில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு தத்துவத்தை நான் மற்றவர்களுக்குப் போதிப்பதால் என்ன மாற்றம் வந்துவிடும்? சொல்லுங்களேன்!

news
சிறப்புக்கட்டுரை
வல்லுநர்களின் மாறுபட்ட கருத்து (உலகம் உன் கையில்! – 5)

அண்மையில் இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழக விஞ்ஞானி செம்ரா ஓர்கான் என்பவர்..’-யை அணுகுண்டுவிற்கு ஒப்பானது என்றும், எப்படி அணுகுண்டு அழிவிற்குக் காரணமாயிருக்கிறதோ, அதேபோன்று கடந்த காலத்தில் நன்மை பயக்கும் அணு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தூண்டுகோலாயிருந்தது. அதேபோன்று, வருங்காலத்தில், ஆக்கத்திற்கும் அழிவிற்கும்..’ காரணமாய் அமையலாமென்றும் கூறுகிறார். இவர் கணித்ததுபோன்று இன்று உலகம், மின் தட்டுப்பாட்டைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட அணு மின்சக்தியை நாடும் நிலை உருவாகியுள்ளது.

காயா என்ற விஞ்ஞானி கூறுகிறதாவது: ‘..’-யின் தொழில்நுட்பம் சுகாதாரம், கல்வி, நீதி போன்ற துறைகளில் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும்..’ மூலம் வேலைப் பளு குறையும்; அதேபோன்று மருத்துவத்துறையில் புற்றுநோய் அல்லது இல்லாத (non tumorous) செல்களைத் துல்லியமாக ஆயந்தறியவும் உதவும். ஆனால், எவ்வளவு நன்மைகளிருந்தாலும், ஆயுதப் போட்டிக்கு இது காரணமாகிவிடும் என்று கூறுகிறார்.

போகும் வேகத்தில்..’-க்கு ஓர் ஆணையிட்டால் அதனை அப்படியே (blind folded) நடைமுறைப்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ‘..’ தன்னிச்சையாக இயங்குவதால் அது எந்த வகையில் மனித வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்று ஆராய வேண்டுமென்கிறார். ஒரு பக்கம், வேலை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும், இச்சூழல் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது அடுத்த பத்து ஆண்டுகளைப் பொருத்திருக்கிறது என்கிறார்.

நசீம் கெமல் உரெஎன்ற விஞ்ஞானி தானியங்கி மூலம் ஓட்டுநரில்லாத வண்டிகள் (driverless vehicles) பல விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ளவும்..’ அல்கோரிதம் அடிப்படையில் (possiblilties) இயங்குவதால், எதிர்பாரா விளைவுகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.

மனிதனுக்கு இணையான .. (human level ai)

மனிதனுக்கு இணையான..’ என்பது ஓர் இயந்திரம் அல்லது பல இயந்திரங்களின் கட்டமைப்பு (networks of machines) செய்யும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதர் செய்யும் வேலைகளைக் கற்பதோடு, அவற்றைச் செய்யும் திறனையும் பெற்று, இலக்குகளை ஏற்படுத்தி அதனை அடைய முனைவது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளர், மருத்துவர், விளக்குபவர்/விரிவுரையாளர், ஆசிரியர், சிகிச்சையாளர், வாகன ஓட்டுநர், முதலீட்டாளர் என்ற பணிகளை..’ செய்தல்.

மற்றொன்று, இன்றுள்ள அனைத்துத் தொழில்நுட்பத் தளங்களையும் இணைத்து (technology of wireless networking to connect the device) பயன்பாட்டினால் மாபெரும் தகவல் களஞ்சியம் (IOT (Internet Of Things) என்ற தளமாக உருவெடுத்திருப்பது. இதன் வாயிலாக, எவ்வாறு பெருங்கடல் ஒரு திமிங்கலத்திற்கு விளையாட மகிழ்ச்சி தருகிறதோ அதேபோன்று, ‘..’ கையாள்வதற்கு எண்ணற்றத் தரவுகள் கிடைக்கும்; அதன்மூலம் சமுதாயம் அடையும் நன்மைகள் ஏராளம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், முடிவெடுப்பவர் ஞானமுள்ளவராகவோ அல்லது கனிவானவராகவோ  இருக்கலாம். கேடுண்டாக்கும் செய்தி கேடான முடிவுகளை எடுக்க உடந்தையாய் இருக்கிறது என்பது நம் அனுபவம்.

இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்வளவு ஏராளமான தரவுகளிலிருந்தும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான கரியமில வாயு தொடர்ந்து வெளிப்படுத்துவதைத் தவிர்க்க ஏன் தீவிரம் காட்ட முடியவில்லை? அமெரிக்க முதலீட்டாளர் Marc Andreessen தன்னுடைய ‘6.6.23’ கட்டுரையில.. மனித இனத்தின் அனைத்துத் தேவைகளையும் தீர்த்துவிடும்என்றும், ‘..’ உலகை அழிக்காது; ஆனால், காப்பாற்றும்என்றும் கூறுகிறார்.

உலகின் புகழ்பெற்ற தத்துவ ஞானிகளும், ‘..’ வல்லுநர்களும் (Yoshua Bengal, Geoffrey Hinton, Sam Altman, Elon musk, Mustsfa Suleyman) AI மனித நாகரிகத்தை அழித்துவிடலாம் என்கின்றனர். சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள்..’ தெரிந்தோ தெரியாமலோ மனித சமுதாயத்திற்குத் தீங்கு இழைக்கலாம் என்று (Bletchley declaration on AI) ஒரு சாசனத்தில் கையெழுத்தும் இட்டுள்ளனர்.

மனிதர்களில், பேராசையும் கொடூரக்குணமும் அதிகாரத்தின் மீது மோகமும் கொண்ட சிலர் எப்போதும் இருக்கிறார்கள் என்பது வரலாறு. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரைத் தலைவராகப் பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஏன்? அவர்கள் மனநோயாளிகள் என்பதனாலா? மனிதனின் மனப்போக்கு தனிப்பட்ட மனநிலையினால் அல்ல; கூட்டமாகச் செயல்படுவதனால் அல்லவா!

ஏற்கெனவே நாம் வாழும் உலகை வெப்பமயமாக்கிவிட்டோம். இன்றிருக்கும்ட்ரோன்ஸ், சேட்போட் மற்ற அல்கோரிதம் செயலாற்றல்கள் ஒருநாள் மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு, ஏன் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தாது?

இன்று சீனாவும் அமெரிக்காவும்..’ தொழில்நுட்பப் போட்டியில் முதன்மையிலிருந்தாலும், ஐரோப்பா, இந்தியா, பிரேசில், இரஷ்யா என்று பல நாடுகள் தங்களுக்கென்று தனி டிஜிட்டல் உலகை உருவாக்கி வருகின்றன. இது ஒருவகையில் இரண்டு துருவங்களைக் கொண்டிருக்காமல், பன்முனை சாம்ராஜ்ஜியங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா-இரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் இருந்தும் எதிர்பார்த்தவாறு அணு ஆயுதப் போர் வெடிக்கவில்லை; ஏனெனில், ஒருவேளை போர் மூண்டால் இரு தரப்பும் அழிவதை இரு தரப்பாரும் அறிந்திருந்தனர். இப்போதுள்ள நிலை, தமிழ் பழமொழி கூறுவதுபோல்தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்என்ற நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் குழப்பச் சூழலில், ‘யார் பலிகடாக்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்?’ என்ற நிச்சயமற்ற எதிர்காலம் வரும் சந்ததியினருக்குக் காத்திருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

இன்றைய சைபர் போர்ச்சூழலில், தாக்குதலுக்கு எது இலக்காகப் போகிறது என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. யார் தாக்குதலைத் தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஒருவேளை வலிமையான நாடு தன் ஆயுதங்களை இயக்கினால், அவை அவர்களின் ஆணைக்குக் கட்டுப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது. வலிமையான போர் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம் என்று எண்ணும் நாடு, அதில் தோல்வி அடையும் நிலையும் உருவாகலாம்.

உலகில் இன்று முக்கிய முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைப்பதென்பது, ஒருநாள் இப்புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையான நாம்மனிதர்என்பதை இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் பலர் மனத்தில் எழுந்தாலும், ‘..’ நம் வாழ்க்கை முறையை வசதியாய் அமைக்கும் கருவியாய் இருக்கிறதென்பதை மறுக்க இயலாது.

மனித வாழ்க்கைத் தத்துவத்தில் நுண்ணறிவு என்பது ஒட்டுமொத்த நிறைவை வெளிப்படுத்துவதல்ல; பிழைகள் என்பது மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றிவிட்ட நிகழ்வு. இவை அடுத்து நாம் சரியான முடிவுகளை எடுக்கவும், திருத்தி அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன. ‘..’ தொழில்நுட்பத்தில் மனிதக் கோட்பாடுகளை அடித்தளமாய் அமைப்பதென்பது ஒழுக்கத்திற்கான தேவை என்பதைவிட, சமுதாய மேம்பாட்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இன்றிமையாததாக உள்ளது என்றே உணரப்படுகிறது.

இதற்கான பொறுப்பு..’-யை உருவாக்குபவர்களிடம் என்றில்லை. இதன் பங்காளிகளான அரசு, வணிகம், பொதுத்துறை நிறுவனங்கள், தனிமனிதர் என்று அனைவருக்கும் உள்ளது.

..’ சமுதாயத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியாக அமைய வேண்டுமென்றால், இத்தொழில்நுட்பம் மனிதத்துவத்தோடு ஒன்றியிருப்பதற்கு நாம் அளிக்கும் பங்கில் அனைவரும் விழிப்புடன் இருப்பதைப் பொருத்தே உள்ளதென்பது பொதுவான கருத்து.