news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.03.2026)

உண்மையின் ஊற்றாக நம்மில் எழும் நற்செய்தியின் வார்த்தை, ஒவ்வொருவரின் கண்களைத் திறக்கவும், அறிவார்ந்த விதத்தில் மதிப்பிடவும்,  சுதந்திரமான மற்றும் பக்குவப்பட்ட மனசாட்சியை உருவாக்கவும் உதவுகிறது.”

மார்ச் 8, உரோம் காணிக்கை அன்னை திருத்தலத் திருப்பலி மறையுரை

இராணுவச் சேவை என்பது இறையருளில் ஊன்றிய ஓர் அழைப்பு. வலுகுறைந்தவர்களைப் பாதுகாக்கவும், அமைதியைப் பேணவும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்.” 

மார்ச் 7, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி

நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல.”

மார்ச் 3,  காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செய்தி

இறையியல் என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; மாறாக, திரு அவையின் பணிக்கும், நம்பிக்கையில் வேரூன்றிய கலாச்சார, சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் அடிப்படையானது.”

மார்ச் 02,  இறையியல் நிறுவன குழுமத்தினருக்கு வழங்கிய உரை

மனிதகுலத்தையும் வாழ்க்கையையும் சிதைக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்பின் சான்றுகளாக இருப்போம். அதுவே மாற்றத்தைத் தருகிறது.”

மார்ச் 01,  குவார்த்திஜோலோ பங்குத்தள மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.03.2026)

இலாபத்தைவிட சமத்துவம் மற்றும் பொதுநலனை முன்னிறுத்தி, அனைவருக்கும் உலகளாவிய நலவாழ்வு உரிமை கிடைப்பதை அரசுகள் உறுதி செய்யவேண்டும்.”

பிப். 16, பாப்பிறை வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சந்திப்பு

திரு அவை என்பது இறைவனோடும் மக்களோடும் அனைவரையும் ஒன்றிணைக்கும் மீட்பின் உலகளாவிய அருளடையாளமாகவும், ஒப்புரவின் கருவியாகவும் திகழ்கிறது.”

பிப். 18, புதன் மறைக்கல்வி உரை

பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய அதிகாரமே, கிறிஸ்துவை நோக்கிச் சமூகத்தை வழிநடத்தும் உண்மையான ஆன்மிகப் பணியாகும்.”

பிப். 19, கிறிஸ்துவின் சேனை - துறவறச் சபையினர் சந்திப்பு

உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டி, இயேசுவின் அன்பு மற்றும் திருநற்கருணை வழியாக மாணவர்களை ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்துவதே ஓர் ஆசிரியரின் கடமையாகும்.”

பிப். 20, திருத்தூது மடலின் சிறப்புச் செய்தி

அன்னை மரியாவின் வழியில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அமைதியின் சாட்சிகளாகத் திகழ அன்புடன் அழைக்கிறேன்.”

பிப். 21, அமலமரி அர்ப்பணத் துறவு, திருத்தூதர்களின் அன்னை சபையினர் சந்திப்பில்...

தவக்காலத்தின் வழியாகப் பாவங்களை நீக்கி, இறைவேண்டல் மற்றும் இரக்கச் செயல்களால் கடவுளின் அன்பிலும் உண்மையான மகிழ்ச்சியிலும் நிலைத்திருப்போம்.”

பிப். 22, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.03.2026)

கிறிஸ்துவில் ஒன்றுபட்டு, புனித வாழ்வும் சகோதரத்துவ உறவும் வழியாக நற்செய்திப் பணியாற்றுவோம்.”

பிப். 09 - அருள்பணியாளர்களின் ஒன்றிப்புச் செய்தி

அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் திரு அவையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும்.”

பிப். 10 - மொனாக்கோவிற்கான திருத்தந்தையின் முதல் பயணம்

இறைவார்த்தையைத் திரு அவையின் நம்பிக்கையின் ஆதாரமாகவும், கிறிஸ்துவின் உயிருள்ள உறவாகவும் போற்றிப் புனிதமாக வாழ்வோம்.”

பிப். 11 - புதன்கிழமை பொது மறைக்கல்வி உரை

இறைவார்த்தை, நோன்பு மற்றும் சமூக நீதி வழியாக மனமாற்றம் பெற்று, அன்பின் பாதையில் நாகரிகத்தை உருவாக்குவோம்.”

பிப். 13 -  இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தி

திருப்பீட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவின் புதிய நியமனம் திரு அவையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”

பிப். 14 - அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா புதிய உறுப்பினராக நியமனம்

வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, அன்பு நிறைந்த நேர்மையான இதயத்துடன் இறைநீதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்.”

பிப். 15 - மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.03.2026)

இயேசுவின் அருள்பேறுகள், அநீதியுள்ள உலகில் நம்பிக்கையாளர்களுக்கு மாற்றம் தரும் மீட்பின் வழிகாட்டியாகின்றன.”

பிப். 1, மூவேளைச் செபவுரை

அர்ப்பண வாழ்வினர் தாராளம், தியாகம், பிறரன்பு வழியாகக் கடவுளின் மீட்கும் உடனிருப்பிற்குச் சான்றுபகர அழைக்கப்படுகிறார்கள்.”

பிப். 2, துறவியரின் 30-வது உலக நாள் திருப்பலி மறையுரை

மனித மொழியில் வெளிப்படும் கடவுளின் வார்த்தை, ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது வாழ்வை மாற்ற அழைக்கிறது.”

பிப். 4, புதன் மறைக்கல்வி உரை

துன்புறும் குழந்தைகளுக்கு இரக்கம், மருத்துவப் பராமரிப்பு, நம்பிக்கை வழங்கத் திரு அவைச் சமூகத்தை அழைக்கிறது.”

பிப். 5, பிப்ரவரி மாத இறைவேண்டல்

கிறிஸ்துவின் மகிழ்ச்சியைச் சமூகத்தில் பகிரும் நம்பிக்கைப் பயணமே, உருவாக்கப் பயிற்சியின் முழுமையான அர்ப்பணிப்பாகும்.”

பிப். 6, திருப்பீடத்துறையின் பங்கேற்பாளர்கள் சந்திப்பு

பணிவு, இரக்கம், நீதிச்செயல்கள் மூலம் கிறிஸ்துவில் மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி உலகிற்கு வெளிப்படுகிறது.”

பிப். 8, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.02.2026)

உண்மை, இரக்கம், அன்பு சமநிலையுடன் ஆன்ம மீட்பை நோக்கி திரு அவை நீதியுடன் செயல்படவேண்டும்

சன. 26, வத்திக்கான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திப்பு

வன்முறைக்கு மாற்றாக உரையாடலின் மூலம் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்.”

சன. 27, இத்தாலி தொலைக்காட்சிக்கு அளித்த அறிக்கை

திருவிவிலியமும் புனித பாரம்பரியமும் இணைந்து, தூய ஆவியின் வழிநடத்துதலில் திரு அவை நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கடத்துகின்றன.”                        

சன. 28,  புதன் மறைக்கல்வி உரை

தொழில்நுட்ப யுகத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”

சன. 24, 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான செய்தி

ஆன்மிக வழிகாட்டுதல், நம்பிக்கை பரிமாற்றம் மற்றும் நீதிப் பணி மூலம் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிப்போம்.”

சன. 29, விசுவாசக் கோட்பாட்டிற்கான துறை உறுப்பினர்கள் சந்திப்பு

இளைஞர்களை இறைவேண்டல் வலையமைப்பில் ஈர்த்து, நற்செய்தி அறிவிப்பில் பங்காளர்களாக்குவோம்.”

சன. 30, உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்புக் குழு சந்திப்பு

நற்செய்தியை மக்கள் இதயத்தில் நிலைநிறுத்தி, ஒப்புரவு மூலம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.”

சன. 31, மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தலத்திரு அவைக்குப் பாராட்டு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.02.2026)

இறையன்பினால் துன்புறுவோருக்கு ஆற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையே கிறித்தவ வாழ்வின் அடிப்படை மாற்றமாகும்.”

சன. 19, பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படும் 34-வது உலக நோயுற்றோர் நாளிற்கான செய்தி

இயேசுவின் மனிதநேய உறவின் வழியாக இறைவனை அறிவதே மீட்புக்கான உண்மையான இலக்காகும்.”

சன. 21, புதன் மறைக்கல்வி உரை

மனித உரிமைகளின் அடிப்படையான உயிர், புனிதத்தைப் பாதுகாப்பதே சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளம்.”

சன. 22, ‘2026 வாழ்வுக்கான அணிவகுப்புஎன்ற தலைப்பில் செய்தி

தூதரக உறவை வலுப்படுத்தி, சமூகநலன் மற்றும் மனித மாண்புகளைப் பாதுகாப்போம்.”

சன. 23, இலக்ஸம்பர்க் நாட்டின் ஐந்தாம் இளவரசர் சந்திப்பு

தொழில்நுட்ப காலத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”

சன. 24, 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான செய்தி

சவால்களையும் கடந்து நற்செய்தியைப் பகிர்ந்து, அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்போம்.”

சன. 25, மூவேளை இறைவேண்டல் உரை