“கிறித்தவ
மகிழ்ச்சி என்பது ஒருபோதும் ஒருசிலருக்கு மட்டும் உரியது அல்ல; ஆனால், அது எப்போதும் எல்லாருக்கும் உரியது.”
- ஏப்ரல் 01, இத்தாலியத் திரு
அவைக்கு
அனுப்பியச்
செய்தி
“தொலைந்து போனவர்களைத் தேடிக் கண்டடையாமல் கடவுள் ஒருபோதும் கடந்துபோக மாட்டார்.”
- ஏப்ரல் 02, புதன் மறைக்கல்வி
உரை
“உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார் ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்று வாயாக இருக்கிறார்.”
- ஏப்ரல் 03, யூபிலி பங்கேற்பாளர்களுக்கு
அனுப்பியச்
செய்தி
“புனிதக் கதவு வழியாக உள்நுழைவதும், திருத்தூதர்கள் மற்றும் மறைச்சாட்சிகளின் கல்லறைகளைத் தரிசிப்பதும் நாம் நமது வாழ்நாளில் எப்போதும் திருப்பயணிகளாக நடைபோடுகின்றோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.”
- ஏப்ரல் 04, ஸ்லோவாக்கியத்
திருப்பயணிகளுக்கு
அனுப்பியச்
செய்தி
“நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல; அவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.”
- ஏப்ரல் 06, மூவேளைச் செப
உரை
“எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக நாம் இருக்கும் தருணத்தில் கூட, கடவுள் நம்மைத் தனியாக விடுவதில்லை; தோல்வியடையும் சூழலிலும் கடவுளின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும்.”
- ஏப்ரல் 06, உலக நலவாழ்வுக்கான
யூபிலி
நாள்
திருப்பலி
மறையுரை