news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.04.2025)

கிறித்தவ மகிழ்ச்சி என்பது ஒருபோதும் ஒருசிலருக்கு மட்டும் உரியது அல்ல; ஆனால், அது எப்போதும் எல்லாருக்கும் உரியது.”

- ஏப்ரல் 01, இத்தாலியத் திரு அவைக்கு அனுப்பியச் செய்தி

தொலைந்து போனவர்களைத் தேடிக் கண்டடையாமல் கடவுள் ஒருபோதும் கடந்துபோக மாட்டார்.”

- ஏப்ரல் 02, புதன் மறைக்கல்வி உரை

உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார் ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்று வாயாக இருக்கிறார்.”

- ஏப்ரல் 03, யூபிலி பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியச் செய்தி

புனிதக் கதவு வழியாக உள்நுழைவதும், திருத்தூதர்கள் மற்றும் மறைச்சாட்சிகளின் கல்லறைகளைத் தரிசிப்பதும் நாம் நமது வாழ்நாளில் எப்போதும் திருப்பயணிகளாக நடைபோடுகின்றோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.”

- ஏப்ரல் 04, ஸ்லோவாக்கியத் திருப்பயணிகளுக்கு அனுப்பியச் செய்தி

நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல; அவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.”

- ஏப்ரல் 06, மூவேளைச் செப உரை

எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக நாம் இருக்கும் தருணத்தில் கூட, கடவுள் நம்மைத் தனியாக விடுவதில்லை; தோல்வியடையும் சூழலிலும் கடவுளின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும்.”

- ஏப்ரல் 06, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.04.2025)

தம் அருளால் நம்மை இரக்கத்தின் பணியாளர்களாக நியமித்துள்ள இறைவனிடமிருந்து மன்னிப்பின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், அதே கொடையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவோம்.”

- மார்ச் 25, இளையோர் கூட்டத்திற்கான செய்தி

இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், இனி நமக்கு எதிர்நோக்கு இல்லை என்று நாம் நினைக்கும் நேரத்தில் அவர் நம் கண்முன் காணப்படுகிறார்.”       

- மார்ச் 26, மறைக்கல்வி உரை

கடவுளின் இரக்கத்திலிருந்து பிறக்கும் உண்மையான அமைதி, நம்மை ஒருபோதும் ஏமாற்றாத எதிர்நோக்கைக் கொணர்கிறது.”

- மார்ச் 27, அருள்பணியாளருக்கான செய்தி

இறைவன் எப்போதும் நம்முடன் நடக்கின்றார், நமது சோதனை நேரங்களில் நம்மைத் தாங்குகின்றார், அவரது அமைதி மற்றும் அன்பின் சான்றுகளாக இருக்க நம்மை அழைக்கின்றார்.”

- மார்ச் 29, செக். குடியரசு நாட்டின் ஆயர் பேரவையினருக்கு வழங்கிய செய்தி

உயிருள்ள சுடரைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்குக் கடவுளின் அன்பு பலம் அளிக்கின்றது என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்நோக்கின் சான்றுகளாக வாழ வேண்டும்.”                      

- மார்ச் 29, திருப்பயணிகளுக்கான செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.04.2025)

இறையழைத்தல் என்பது நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை. நன்மையை இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு.”

- மார்ச் 19, 62-வது உலக இறையழைத்தல் நாளுக்கான செய்தி

ஒவ்வோர் இறையழைப்பும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பொது நன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது.”

- மார்ச் 19, 62-வது உலக இறையழைத்தல் நாளுக்கான செய்தி

பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அன்பு ஒன்று மட்டுமே நம்மை ஒன்றாக இணைக்கின்றது; ஒன்றித்து வளரச் செய்கின்றது.”

- மார்ச் 22, யூபிலி ஆண்டை முன்னிட்டு திருப்பயணிகளுக்கான உரை

நமது வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் குறிப்பாக, கடினமான மற்றும் துயரமான நேரங்களிலும் அதனைக் கையாள்வதற்குப் பொறுமை மிக அவசியமானது.”

- மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை மூவேளைச் செபவுரை

எங்கெல்லாம் ஒரு குழந்தை அல்லது வலிமையற்ற ஒருவர் பாதுகாப்பை உணர நாம் உதவுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவனுக்குப் பணியாற்றி அவரைப் பெருமைப்படுத்துகின்றோம்.”

- மார்ச் 25, திருப்பீட அவைக்கு அனுப்பிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.03.2025)

செபத்தில் மூழ்கி, இறை ஒளியால் நிறைந்து, உருமாற்றம் அடைந்த இயேசு, தமது செயல்களின் வழியாக நமக்குத் தமது எல்லையற்ற அன்பின் ஒளியைக் காட்டுகின்றார்.” 

மார்ச் 16, மூவேளைச் செபவுரை

இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். துன்ப நேரங்களில் தமது அன்பின் ஒளிக்கதிரைப் பிரதிபலிக்கும் மக்களை நம் அருகில் வைப்பார்.”

- மார்ச் 16, மூவேளைச் செபவுரை

போர் என்பது சமுதாயங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வருவதால் உடன்பிறந்த உணர்வு, நீதி, எதிர்நோக்கு மற்றும் அமைதிக்கான ஆவல் நம்மில் எழுப்பப்பட வேண்டும்.”

- மார்ச் 18,  Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

போர் என்பது முட்டாள்தனமானது. எது வாழ்வைக் கொணரும், எது வாழ்வைக் கொல்லும்? என்ற உண்மையை நாம் அறிந்து, தனியாகவோ அல்லது சமூகமாகவோ எடுக்கும் பாதை குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.”

- மார்ச் 18, Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

வார்த்தைகள் என்பவை மனித குலத்தின் சூழலை வடிவமைப்பவை. அவை இணைக்கவும் பிரிக்கவும் ஆற்றல் பெற்றவை; எனவே, முதலில் வார்த்தைகளிலிருந்தும் நம் மனங்களிலிருந்தும், பின்னர் உலகிலிருந்தும் ஆயுதங்களைத் தவிர்த்திட முயற்சிக்க வேண்டும்.”

- மார்ச் 18, Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (23.03.2025)

“சாம்பல் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற நினைவை நம்மில் புதுப்பிக்கிறது, அதேவேளையில், நாம் என்னவாக இருப்போம் என்ற நம்பிக்கையையும் நம்மில் உருவாக்குகிறது.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, நாம் மனத்தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் தவக்காலத்தின் வழியாகப் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

நாம் வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. தனிநபர் இலாபம் மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது எதிர்நோக்கின் அடையாளமாகவும், இறைவாக்காகவும் இருக்கின்றது.”

- மார்ச் 09, மூவேளைச் செப உரை

சோதனைக்கு உட்படுத்தப்படும்போது நாம் தனியாக இல்லை; பாலைவனத்தின் வழியாக, வாழ்க்கைக்கான பாதையைக் காட்டும் இயேசு நம்முடன் இருக்கின்றார்.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை

இறைமகன் இயேசு பாலைவனத்திற்குச் செல்வது அவர் எத்துணை துணிச்சல் நிறைந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல; மாறாக, அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.03.2025)

காயமடைந்த குடும்பத்தின் வலியைக் குணப்படுத்த சிறந்த மருந்து மன்னிப்பு. மன்னிப்பு என்பது மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும்.”

- மார்ச் 4, திருத்தந்தையின் மார்ச் மாத செபக் கருத்து

இயற்கையை நமது பேராசை சுரண்டலில் இருந்து விடுவிப்பதற்காக, நாம் அனைவரும் நமது நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றுவோம்.”

- மார்ச் 5, பிரேசில் நாட்டு மக்களுக்கு அனுப்பிய கடிதம்

புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்... இவர்கள் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் வழியாக எதிர்நோக்கின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள்.”

- மார்ச் 3, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அச்சங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்குச் செவிசாய்ப்பது அவசியமாகிறது.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி

நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு. எதிர்நோக்கு ஒருபோதும் நமக்கு ஏமாற்றத்தைத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவைக்கு வழங்கிய செய்தி