news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (09.03.2025)

ஞானியரின் பயணம் நம்பிக்கை, துணிவு மற்றும் எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது.”

- பிப்ரவரி 19, புதன் பொது மறைக்கல்வி உரை

எதையும் கேட்காமல் கொடுப்பது நம்மை ஒன்றிணைக்கின்றது; மக்களின் நன்மையைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாது ஒன்றித்து இருப்பதை வெளிப்படுத்துகிறது.”

- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான யூபிலி மறையுரை

மன்னிப்பது என்பது, நம்மிலும் நம் சமூகங்களிலும் ஒரு வரவேற்கத்தக்க, பாதுகாப்பான எதிர்காலத்தைத் தயார் செய்வதாகும்.”

- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான யூபிலி...

அன்பின் அடையாளமாக இருப்பது என்பது அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர்களாக மாறுவது; தீமையை நன்மையாக மாற்றுவது; உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குவதாகும்.”

- பிப்ரவரி 23, ஞாயிறு மூவேளைச் செபவுரை

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும் கடவுள் விடுக்கும் அழைப்புக்குச் செவிமடுத்து நம் வாழ்வை மாற்றியமைக்கவும் நல்வாய்ப்பைத் தருகிறது இந்தத் தவக்காலம்.”

- பிப்ரவரி 25, திருத்தந்தையின் தவக்காலச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (02.03.2025)

நிலம், நீர் மற்றும் உணவு ஆகியவை வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, அவை வாழ்க்கையின் அடிப்படை மற்றும் இயற்கையோடு உள்ள மக்களின் பிணைப்பு.”

- பிப்ரவரி 10, பூர்விக மக்களின் உரிமைக்கான செய்தி

 “போர்களால் குழந்தைகள் அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது. மேலும், நீதியான மற்றும் உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை ஊக்குவிக்கக்கூடிய ஓர் உலகளாவிய மொழியாக இசையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” 

- பிப்ரவரி 11, இசை விழாவிற்கான  செய்தி

இயேசுவின் பிறப்பிற்கு முதல் சாட்சிகளாக இருப்பவர்கள் இடையர்கள். இவர்கள் விலங்குகளுடனேயே பயணித்து அதனுடனேயே இருப்பதால் துர்நாற்றம் கொண்டவர்கள். சமூகத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்களே எதிர்நோக்கின் முன்மாதிரிகள்.” 

- பிப்ரவரி 12, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மறைக்கல்வி உரை

கிறிஸ்துவின் உடலில் சகோதர-சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ள அனைவரின் குடும்பமும், அனைவருக்கும் சமமாகப் பரிமாறப்படும் ஆன்மிக உணவான நற்கருணையால் உறுதிபெற வேண்டும். இது நம்மைக் கடவுளோடும், ஒருவர் மற்றொருவருடனும் ஒன்றிணைக்க வழிவகுக்கிறது.”

- பிப்ரவரி 14, திருப்பயணிகள் சந்திப்புச் செய்தி

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்து, அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.”              

- பிப்ரவரி 16, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (23.02.2025)

பல குணநலன்கள், விருப்பங்கள், கொடைகள், மற்றும் வரங்களை நமக்காக அல்ல; மாறாக, பிறருக்காகவே கடவுள் நம்மில் வைத்திருக்கின்றார்.”

- பிப்ரவரி 07, ஸ்பெயினின் தேசிய இறையழைத்தல் மாநாடு உரை

நமது குடும்பங்கள், சகோதரத்துவ அமைப்புகள், தலத்திரு அவைகள், பங்கு ஆலயங்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் வாழுமிடங்கள் என அனைத்து இடங்களிலும் அன்பின் செயல்கள் எதிரொலிக்கப்பட வேண்டும்.”

- பிப்ரவரி 08, திருப்பீடத்தின் மாநாட்டு உரை

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும்.”

- பிப்ரவரி 09, திருப்பலி மறையுரை

எந்த ஒரு புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் பொது நலனுக்குப் பலன் தருவதாக இருக்க வேண்டும்; அது மனிதப் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது.”

- பிப்ரவரி 11, ‘செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடுஉரை

நோயுற்றோரும் நோயுற்றோரிடையே சேவையாற்றுவோரும் இணைந்து பயணிப்பது அனைவருக்குமான ஓர் அடையாளம், மனித மாண்பிற்கான ஒரு கீதம் மற்றும் எதிர்நோக்கின் ஒரு பாடல்.”

- பிப்ரவரி 11, ‘எக்ஸ்தளப்பதிவு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.02.2025)

நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடாமல், நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர்ந்து ஒருவருக்கொருவர் தாங்கிக்கொள்ள வேண்டும்.”        -

சனவரி 31, ‘எக்ஸ்தளப்பதிவு

வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இடம் இருக்கின்றது; நமக்கென்று ஒரு பணி இருக்கின்றது; அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது; ஏனெனில் அது எப்போதும் நமக்காகவே இருக்கின்றது.”

- பிப்ரவரி 01, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரை.

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்லர்; மாறாக, மக்கள் மத்தியில் ஒரு மனிதராக இருக்கின்றார் என்பதை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துக் காட்டுகின்றது.”

- பிப்ரவரி 02, ஞாயிறு மூவேளைச் செப உரை 

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும். இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள்; திருப்பயணிகளான நம் வாழ்க்கைப் பயணத்தில் தூய ஆவியார் நம்மை வழிநடத்தும் வழிகள் இவை.”

- பிப்ரவரி 03, திருப்பயணிகள் சந்திப்பு உரை

நாம் ஒவ்வொருவரையும் ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நடத்தி, ஒன்றிணைந்து வருங்காலத்திற்காக உழைப்போம், உண்மையான செல்வம் என்பது மக்களிலும் அவர்களுடன் நாம் கொள்ளும் உறவிலும் காணக்கிடக்கிறது.”

- பிப்ரவரி 04, ‘எக்ஸ்தளப்பதிவு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.02.2025)

அருள்பணித்துவ மாணவர்கள், உண்மையான உள்மனச் சுதந்திரம் உள்ளவராக, மனித உறவுகளுக்குத் தகுதியான, சமநிலையான பக்குவம் அடைந்தவராக, மென்மை, உடனிருப்பு, இரக்கம் என்னும் கடவுளின் பண்பு கொண்டவராக, மறைப்பணி ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.”

- ஜனவரி 25, குருமட அதிபர் மற்றும் குருமாணவர்கள் சந்திப்புச் செய்தி

நாம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை ஒரு விலைமதிப்பற்ற கொடை. நாம் கொண்டாடும் யூபிலி ஆண்டானது, வெறும் வரலாற்று நினைவாக மட்டுமல்லாமல், நம்மிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் காணும் உறுதிப்பாடாகக் கொண்டாடப்பட வேண்டும்.”

- ஜனவரி 25, புனித பவுல் பெருங்கோவிலில் வழங்கிய மறையுரை

அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும் அதில் மறைந்திருக்கும் நன்மையின் துகள்களைத் தேடுங்கள்; எதிர்நோக்கிற்கு நேர்மாறான அவநம்பிக்கைச் சூழலிலும் எதிர்நோக்கைத் தேட அனுமதியுங்கள்.”

- ஜனவரி 26, சமூகத்தொடர்பாளர் நாளுக்கான குறுஞ்செய்தி

உடன்பிறந்த உணர்வு, மன்னிப்பு மற்றும் அமைதியின் வழியில் அனைவருக்கும் திறந்த இதயத்தைக் கொண்டிருக்க இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். இதன் வழியாக, சகோதரத்துவ மற்றும் நீதியான உலகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப வேண்டும்.”

- ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை மூவேளை செபவுரை.

துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் வாழும் இடங்கள் பெரும்பாலும் பகிர்வின் இடங்களாக இருக்கின்றன; அங்கு நாம் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளப்படுத்தி நம்பிக்கையோடு இருக்க வலியுறுத்த வேண்டும்.”

- ஜனவரி 27, 33-வது  உலக நோயுற்றோர் தினத்திற்கான (பிப்ரவரி 11) செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.01.2025)

எதிர்நோக்கு என்பது இறையியல் பண்பு, இலத்தீன் மொழியில்விர்த்தூஸ்அதாவதுவலிமைஎன்னும் பொருள்படுகின்றது. அது பண்பு நலன் அல்ல; மாறாக, எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல் 

- ஜனவரி 11, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரையின் முதல் கூட்டத்தின் உரை

தாழ்ச்சியின் வழியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து, நமக்கான புதிய வழிகளைத் திறக்கின்றார், புதிய பாதைகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்.” 

- ஜனவரி 11, குறுஞ்செய்தி

குழந்தைகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய கொடை; நம்பிக்கையின் பரிசு, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்; நல்ல சூழ்நிலையை உணர வேண்டும்.”

- ஜனவரி 12, வத்திக்கான்  நிகழ்வு

இயேசு வழியாக இறைத்தந்தை தமது முகத்தை இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுத்தினார். மனிதகுலத்துடனான உரையாடல் மற்றும் உறவிற்குள் நுழைவதற்கான சிறப்புமிக்க இடத்தைக் கடவுள் நிறுவுகிறார்.”

- ஜனவரி 12, மூவேளைச் செப உரை

மனிதர்களாகவும் அரசியல் சமூகங்களாகவும் நம்மை இணைத்து வைத்திருக்கும் உறவுகள் குறித்து நாம் மீண்டும் எண்ணிப் பார்ப்பதற்கு இந்த யூபிலி ஆண்டு கிறித்தவர்களுக்கும் கிறித்தவரல்லாதவர்களுக்கும் ஏற்ற வாய்ப்பை வழங்குவதாக அமையட்டும்.”

- ஜனவரி 14, ‘எக்ஸ்தளப்பதிவு