“இறைவனுக்காக நாம் காத்திருப்பது என்பது நம் நம்பிக்கைப் பயணத்தின் ஒரு முக்கியப் பகுதி. எனவே, ஒவ்வொரு நாளும் நமதாண்டவர் நம்மை வந்து சந்திக்கிறார், இறுதிக் காலத்தில் அவர் மீண்டும் வருவார்.” -
நவம்பர் 29,
‘எக்ஸ்’ தளப்பதிவு
“வெறும் வார்த்தைகள் மட்டும் எப்போதும் பயன்படாது; மாறாக, நோய்வாய்ப்பட்ட ஒருவரது கையைப்பிடித்து ஆறுதல் அளிக்க வேண்டும்; அத்தகைய செயல் நோயாளருக்கு மட்டுமல்ல, நமக்கும் பல நன்மைகளை அளிக்கும்.”
- நவம்பர் 30,
வத்திக்கானில் இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
“தலைநிமிர்ந்து நில்லுங்கள், விண்ணகத்தை நோக்கியே எப்போதும் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள். தேவையற்ற வீண் கவலைகளினால் உங்கள் உள்ளம் மந்தம் ஆகாதவாறு கவனமாகச் செயல்படுங்கள்.”
-
டிசம்பர் 01,
மூவேளைச் செப உரை
“நவீன அடிமைத்தனமாகிய மனிதவர்த்தகம், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், மனித உறுப்புகள் வர்த்தகம் ஆகியவை மிகவும் மோசமானது, தவறானது, மனித நேயமற்ற செயல்.”
- டிசம்பர் 02,
‘எக்ஸ்’ தளப்பதிவு
“கடவுளின் தாயாம் அன்னை மரியா நமக்காகப் பரிந்து பேசுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை; எனவே, எப்போதும் நம் கரம்பிடித்து வழிநடத்த அவரிடம் கேட்பதை நாம் நிறுத்தக்கூடாது.”
- டிசம்பர் 02,
அன்னை மரியின் அமல உற்பவப் பெருவிழா தயாரிப்பு உரை