news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (14.06.2026)

வழிபாட்டு முறையின் சடங்குகளும் அடையாளங்களும் வெறும் வெளிப்புறச் செயல்கள் அல்ல; அவை இறைவனின் அருளை அனுபவிக்கவும், கிறிஸ்துவோடு ஆழமான உறவில் வளரவும் நம்மை வழிநடத்தும் புனிதப் பாதைகளாகும்.” 

ஜூன் 3. பொதுமறைக்கல்வி உரை

சுயநலமற்ற சேவையின் வழியாக, இளைஞர்கள் ஒருமைப்பாட்டு பொறுப்புணர்வையும், பிறர்மீது அக்கறை கொள்வதையும் கற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் அன்பு, வரவேற்பு மற்றும் அமைதிக்கான சாட்சிகளாக மாறுகிறார்கள்.”

ஜூன் 1, ஐரோப்பிய கத்தோலிக்க வழிகாட்டிகள், சாரணர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாச் செய்தி

மூவோர் இறைவனின் மறைபொருள், மனிதகுலம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழவும், நல்லுறவை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவுமே படைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.” 

மே 31, மூவேளை இறைவேண்டல் உரை

கல்வி என்பது தனிமனிதவாதத்தை வளர்க்காமல், இணக்கமான உறவையும் உலகளாவிய ஒருமைப்பாட்டையும் உருவாக்கவேண்டும்.” 

மே 30, ’ஐபெரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு

செபமாலை வழியாக இயேசுவைத் தியானிக்கும் நாம், அமைதி என்பது வெறும் கற்பனையல்ல; அது நீதி, அன்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமை என்பதை உணரவேண்டும்.”

மே 29, வத்திக்கானில் செபமாலை வழிபாட்டுச் செய்தி  

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.06.2026)

“இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான அமைதி மன்னிப்பிலிருந்து பிறக்கிறது. பாவங்களை மன்னிக்கும் தெய்வீகப் பணியில் நம்மை ஈடுபடுத்தி, உலக வரலாற்றை அன்பினால் உருமாற்ற தூய ஆவியார் உதவுகிறார்.”

மே 24, தூய ஆவியார் பெருவிழா திருப்பலி மறையுரை

சூழலியல் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பத் தீர்வு மட்டுமல்ல,  மனமாற்றம், பொறுப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலமே வருங்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான பூமியை ஒப்படைக்க முடியும்.”

மே 23, காம்பானியா அசெர்ரா நகர் நகராட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

தொழில்நுட்பமானது ஞானத்தாலும் தார்மீக விழுமியங்களாலும் வழிநடத்தப்படும்போது, கடவுளின் படைப்புத் திட்டத்தோடு இணக்கமாகவும், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியும்.”

 மே 22, 60-வது உலகத் தகவல் தொடர்பு தினச் செய்தி

பிரிவினைகளை ஒற்றுமையாக்கும் தூய ஆவியாரைப் போல, உலக நாடுகளுடனான உறவிலும் திறந்த மனப்பான்மை, இருதரப்பு மரியாதை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும்.”

மே 21, திருப்பீடத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுடன் சந்திப்புச் செய்தி

திருவழிபாடு என்பது வெறும் சடங்கல்ல; அது கிறிஸ்துவின் மீட்புப் பணியில் நாம் பங்கேற்று, அவரோடு ஒன்றிணையும் புனித நிகழ்வு.”          

மே 20 , புதன் பொது மறைக்கல்வி உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (31.05.2026)

ஒவ்வொரு மனிதனின் உன்னத மதிப்பையும், பாதிக்கப்படக்கூடிய மக்களின் மாண்பையும் மக்கள் உணர்ந்து கொள்வதற்கு, இலக்கியம் ஒரு முக்கியக் கருவியாக அமையவேண்டும்.”

மே 13, 38-வது தூரின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் வாழ்த்துச் செய்தி

சட்டத்தின் ஆட்சி, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். மேலும், ஓர் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு இந்தக் கூறுகள் அத்தியாவசியமானவை.”

மே 14, போதைப்பொருளுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் சந்திப்பு

உறுதிப்பூசுதல் வழியாகப் பெறும் தூய ஆவியின் ஆற்றல், இளையோருக்கு நம்பிக்கையின் பாதையில் நடக்கும் துணிவைத் தருகிறது.”

மே 15, ஜெனோவா இளைஞர்களுடன் சந்திப்புச் செய்தி

பொருளாதாரச் செயல்பாடுகள் மனிதகுலத்திற்குத் தொண்டு செய்வதாகவும்; தாராளத்தன்மை, நீதி மற்றும் பொறுப்புணர்வுடன் படைப்பைப் பராமரிக்க கடவுள் விடுத்த அழைப்பைப் பிரதிபலிக்க வேண்டும்.”

மே 16, வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் சந்திப்புச் செய்தி

விண்ணேற்றம் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல; அது நம்பிக்கையாளர்களை இயேசுவோடு ஒன்றிணைக்கும் ஒரு வாழும் மறைபொருள்.”                      

மே 17, ‘அல்லேலுயாவாழ்த்துச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (24.05.2026)

இன்றைய உலகிற்கு அமைதி மிகவும் அவசியம். அந்த அமைதி என்பது ஆயுதங்களால் உருவாவதல்ல; மாறாக, இறைநம்பிக்கையாலும் தூய ஆவியின் வழிநடத்துதலாலும் மட்டுமே சாத்தியம்.”

மே 11, வத்திக்கான் - கேப் வெர்டே 50 ஆண்டுகால உறவின் பொன்விழாச் செய்தி

இரக்கம் என்பது நாம் விரும்பினால் செய்யக்கூடிய ஒன்று அல்ல; மாறாக, நமது அன்றாட வாழ்வில் இறைவனின் நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான ஒரு தெய்வீக அழைப்பு.”

மே 10, சமயங்களுக்கிடையிலான உரையாடலுக்கான 8-வது கருத்தரங்கு செய்தி

அமைதியை நிலைநாட்ட நீதி அவசியம். வேலை மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சுற்றுச்சூழலுக்கான நிலையான மற்றும் நியாயமான பாதுகாப்பை மேம்படுத்தவேண்டும்.”

மே 9, ஈடித் ஹேபர்லேண்ட்-வாக்னர், அகுஸ்தினியர்-பிராவ் நிறுவனத்தின் உறுப்பினர்களின் சந்திப்பு

உலகியல் அதிகாரங்களோ அல்லது ஆயுதங்களோ உண்மையான அமைதியைத் தர இயலாது. இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய தெய்வீக அன்பினால் மட்டுமே போர் மற்றும் வெறுப்புக்குத் தீர்வு காணமுடியும்.”

மே 08, வெள்ளியன்று, பொம்பெயி நகர் திருப்பலிச் செய்தி

வாசிப்பு நம் அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், தீவிரவாத எண்ணங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், வாசிப்பு என்பது குறுகிய மனப்பான்மைக்கு ஒரு மாமருந்து.”

மே 07, வத்திக்கான் பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (17.05.2026)

குருத்துவ அழைப்பு அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி; அது நாம் கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் ஆழமான உறவை, எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய நம் இதயத்தைத் தூண்டுகிறது.”

ஏப்ரல் 27, புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டுத் திருப்பலி

கல்விசார் பாடத்திட்ட மாற்றங்களைவிட, ஒரு குருவின் உள்ளத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மனமாற்றமேமுக்கியம்; மேலும், பணிவு, கனிவு, பிறருக்குச் செவிமடுத்தல் போன்றவை குருத்துவப் பணியின் அடிப்படைப் பண்புகளாக இருக்கவேண்டும்.”

ஏப்ரல் 28, திருப்பீடத் தூதரகக் கல்வி நிறுவனத்தின் 325-வது ஆண்டு நிறைவுச் செய்தி

தனது சாட்சிய வாழ்வின் மூலமாகவும், இறைவார்த்தையைத் துணிச்சலுடன் அறிவிப்பதன் மூலமாகவும், அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கச் செய்வதும், அந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்வதும் திரு அவையின் பொறுப்பாகும்.”

ஏப்ரல் 29 , புதன் பொது மறைக்கல்வி உரை

உலகின் வாழ்விற்காகப் பிட்கப்பட்ட அப்பமான இயேசுவைப் போல, நீதிக்காகப் பசியும், சகோதரத்துவத்திற்காகத் தாகமும் கொண்ட இதயத்தைப் பெறவேண்டும்.”

ஏப்ரல் 30, மே மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல்

நாம் கிறிஸ்துவை நெருங்கிச் செல்லும்போது, ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும், நமது ஒற்றுமையில் ஆழமாகவும் வளர்கிறோம் என்றும், இந்த மறைபொருள் நம்மை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தையுமே உருமாற்றுகிறது.”

மே 02, துணை ஆயர்கள் திருநிலைப்பாட்டுத் திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.05.2026)

குருத்துவ அழைப்பு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி. கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் ஆழமான உறவு, எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய நம் இதயத்தைத் தூண்டுகிறது.”

ஏப்ரல் 26,  புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டுத் திருப்பலிச் செய்தி

உண்மையான ஒற்றுமை என்பது வேறுபாடுகளைக் கடந்து, மனித மாண்பினைப் போற்றி, ஆக்கப்பூர்வமான ஒன்றைக் கட்டியெழுப்புவதாகும்.”

ஏப்ரல் 25, ஐரோப்பிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல; அது உண்மையை நேசிக்கும், சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் கொண்ட இதயங்களை உருவாக்கும். இதில்தான் நம்பிக்கையும் அறிவும் இணைந்து செயல்படும்.”

 ஏப்ரல் 24, கத்தோலிக்க ஆசிரியர்களுடன் சந்திப்பு

தனிமனிதர்கள் இல்லங்களிலும் சமூகங்களிலும் காட்டும் சிறிய அன்புச் செயல்கள், இருள் சூழ்ந்த சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்ஒளியாகமாறும்.”

ஏப்ரல் 22, எக்குவடோரியல் கினியாவின் பாட்டாவில்  இளைஞர்களுடன் சந்திப்பு

கடவுள் நம்மை நாம் இருக்கும் நிலையிலேயே அன்பு செய்கிறார். நாம் நோயுற்ற நிலையிலேயே முடங்கிவிடாமல், நம் பலவீனங்களைக் குணமாக்கும் அன்புடன் மேம்படவேண்டும் என்பதே அவரது விருப்பம்.”

ஏப்ரல் 21, மலாபோவின்ஜீன் பியர் ஓலிமனநல மருத்துவமனை நோயாளிகளுடன் சந்திப்பு