news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.10.2024)

“நாம் இவ்வுலகில் எந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறோமோ அதை வைத்துதான் நாம் மதிப்பிடப்படுகிறோம் என்பது உலகப் பார்வை. ஆனால், நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்ற உண்மையை நமக்கு நற்செய்தி நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது.” 

- செப்டம்பர் 20, ‘எக்ஸ்’ தளப் பதிவு

“ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல; மாறாக, அதன் இயற்கை, கலை, கலாச்சாரம், மதப் பாரம்பரியம், குழந்தைகளின் புன்னகை ஆகியவற்றில் அடங்கியுள்ளது.”

- செப்டம்பர் 21, வத்திக்கானின் பொருளாதார இராணுவ அதிகாரிகளின் 250-வது ஆண்டினை முன்னிட்டுச் செய்தி

“அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றவர்களுக்காகவும், ஏழைகள் மற்றும் பூமியின் அழுகைக்குப் பதிலளிக்கும் வகையில் பொது நன்மைக்காகப் பாடுபடுபவர்களுடனும் நான் இருக்கிறேன்.”

- செப்டம்பர் 22, ஞாயிறு மூவேளைச் செப உரை

“மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மைகள், விரோதம் மற்றும் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துதலையோ தூண்டக்கூடாது.”

- செப்டம்பர் 24, அமைதிக்கான சர்வதேசக் கூட்டத்தில் செய்தி

“நம் இறைவேண்டல் சமயத்தில் எழும் ஏனைய பிரச்சினைகளில் இயேசுவின் கேள்விகளை நாம் கண்டுணர்ந்து, நன்மைத் தனத்தை நோக்கி நடைபோடும்போது, ஆழமான அன்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறோம்.”

- செப்டம்பர் 24, ‘எக்ஸ்’ தளப் பதிவு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.09.2024)

கடவுள் நம்மிடம் காட்டும் அன்பும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் அன்பும், ஏழைகளின் தேவைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்கிறது, துயரத்தில் இருப்பவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கிறது.”  

- செப்டம்பர் 12, சிங்கப்பூர் தேசிய திறந்தவெளி மைதானத்தில் சிறப்புத் திருப்பலி மறையுரை

இளைஞன் என்பவன் ஒரு விமர்சனச் சிந்தனையாளராக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். வெறுமனே குற்றங்களையும் குறைகளையும் மட்டுமே கூறும் விமர்சனம் புதிய வழிகளைத் திறக்காது.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

இளமை வயது என்பது துணிவின் வயது. ஆனால், இந்தத் துணிவை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி உங்களுக்குப் பயன் தராத செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, உங்களின் முன்னேற்றத்திற்கும் பிறருடன் உரையாடுவதற்கும் அதனைப் பயன்படுத்துங்கள்.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

துன்புறும் பல குடும்பங்களில் உள்ள மக்கள், போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், வறுமையினால் துன்புறும் குடும்பங்கள் ஆகிய அனைவர்மீதும் கன்னி மரியாவின் அன்பும் கருணையும் நிறைந்த பார்வை இருக்கும்.”

செப்டம்பர் 16, 17-வது தேசியத் திருயாத்திரையை முன்னிட்டுத் திருத்தந்தையின் செய்தி