மனித
அறிவால் உருவாக்கப்பட்ட நுண்ணறிவு, நல்லவைகள் மற்றும் தீயவைகளுக்கு வழிவகுக்கும் என்பதைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பீடத்தின் நம்பிக்கை கோட்பாட்டுத்துறையும், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துறையும் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட திருத்தந்தை, “செயற்கை நுண்ணறிவு, ஏழ்மை, பாகுபாடு, சுரண்டல் மற்றும் தவறான செய்திகள் பரப்புதல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது; இயல்பான மனித தலையீடு இல்லாமல், போர் போன்ற நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய ஒழுக்க ரீதிப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் பாதிக்கப்படுவது, என்ற
கவலையையும் தெரிவிக்கின்றது. மோசமான தனிமைப்படுத்தல், பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தாக்கம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதை அவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது” என்று
கூறினார்.