உலகில்
பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனைச் சட்டங்கள் இன்னும் அமலில் இருந்து வருகின்றன. ஆகவே, மரணதண்டனைகளை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பன்னாட்டு நீதித்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ‘சான் எஜிதியோ என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு’ அண்மையில் உரோமையில் கூட்டியது. இந்த 14-வது கருத்தரங்கில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 2010 நபர்கள் தீர்ப்புப் பெற்று, மரணதண்டனைக்காகச் சிறைகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, சவுதி அரேபியா உட்பட 55 நாடுகளில் மரணதண்டனைச் சட்டம் அமலில் இருப்பதாகவும், இந்த நாடுகளின் உலக மக்கள்தொகையில் பாதிபேர்
வாழ்வதாகவும் தெரிவித்துள்ள இந்த அமைப்பு, அனைவரும் ஒன்றிணைந்து மரணதண்டனைச் சட்டத்திற்கு எதிராக உழைத்தால் மட்டுமே இச்சட்டம் மறையும் எனத் தெரிவித்துள்ளது.