news
உலக செய்திகள்
புனித சவேரியாரின் அழியா உடல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புனித சவேரியாரின் உடலைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிப்படுத்தும் நிகழ்வு இவ்வாண்டு நவம்பர் 21 -ஆம் தேதி டெல்லி பேராயர் அனில் கூட்டோ மற்றும் பத்து ஆயர்கள் தலைமையில் பசிலிக்காவில் திருப்பலியுடன் தொடங்கியது. வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள புனிதரின் நினைவுச்சின்னங்கள் இறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடவும் செபம் செய்யவும் அருகிலுள்ள சே கதீட்ரலுக்குக் கொண்டு செல்லப்படவும், 45 நாள்களுக்குப் பிறகு பழைய இடத்திலே வைக்கப்படவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வுகளில் ஏறத்தாழ 8 மில்லியன் மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றன.

news
உலக செய்திகள்
பத்துக் கட்டளைகள் யூத-கிறித்தவப் பொருள் விளக்கம்

இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகள் பற்றிய யூத மற்றும் கிறித்தவக் கண்ணோட்டங்கள் குறித்து கருத்தரங்கு உரோமையில் உள்ள திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்பல்கலைக்கழகமும், அர்ஜெண்டினாவில் உள்ள பியூனர்ஸ் அயர்ஸ் ஈசாக் அபர்பானெல் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ‘ஒரு வெளிப்பாடும் இரண்டு பாரம்பரியங்களும்: பத்துக் கட்டளைகளும் அதன் யூத மற்றும் கிறித்தவப் பொருள் விளக்கங்களும்என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு இரு சமயத்தினருக்கும் இடையே பொதுவாக இருக்கும் மதிப்பீடுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் அமைந்திருந்தது. “இவ்விரு மதங்களும் தங்களுக்குப் பொதுவானவைகள் குறித்து விவாதிக்க வேண்டும்  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

news
உலக செய்திகள்
உக்ரைன் சிறுவர்களையும் கைதிகளையும் திருப்பி அனுப்புவது உறுதி!

கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெற்றமனித பரிமாணம்குறித்த அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்,  இரஷ்யப் படையினரிடம் பிடிபட்ட உக்ரேனிய சிறார்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிக்க, அதன் மனிதாபிமான பணிகளைத் தொடர, வத்திக்கான் தனது உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுஎன்றார்.

குறிப்பாக, இரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட 19,000 -க்கும் மேற்பட்ட உக்ரேனிய சிறார்களை விடுவிப்பது மற்றும் கைதிகள் பரிமாற்றம் குறித்து ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திருத்தந்தையிடம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக  அவர்களை விடுவிக்க பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று பேராயர் கூறினார்.

news
உலக செய்திகள்
ஆயுதங்களை, பேச்சுவார்த்தை மாற்றட்டும்!

உலகெங்கிலும் உள்ள ஒன்பது நாடுகளில் மோதல் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு வழங்கும் ஒரு தொண்டு நிறுவனமானஅவசர நிலைஎன்ற உரோம் அலுவலகத்தின் உறுப்பினர்களை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்போது அவர் வழங்கிய செய்தியில், போரை நிராகரிப்பது குறித்த இத்தாலிய அரசியலமைப்பின் பிரிவு 11- மேற்கோள்காட்டி, “இந்தக் கோட்பாடு உலகெங்கிலும் பயன்படுத்தப்படட்டும்; போர் தடை செய்யப்படட்டும்; பிரச்சினைகளைச் சட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படட்டும்; ஆயுதங்கள் மௌனமாகட்டும்; பேச்சுவார்த்தை அவற்றின் இடத்தைப் பிடிக்கட்டும்; உரையாடலில் ஈடுபடவும், மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்என்று வேண்டுகோள் விடுத்தார்.

news
உலக செய்திகள்
விண்வெளியில் ஆயுதக் குவிப்பு

அக்டோபர் 30 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் கபிரியேல் காசியா, நியூயார்க்கில் விண்வெளிப் பாதுகாப்பு குறித்து இரட்டை அறிக்கைகளை வெளியிட்டார். .நா. பொதுச்சபையின் ஆயுதக் குறைப்பு மற்றும் சிறப்பு அரசியல் பணிகள் குறித்த குழுக்களில் உரையாற்றிய பேராயர் காசியா, “அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (ASAT) விண்வெளியில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இவை சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட எரிகணைகள். விண்வெளியின் பரந்த ஆற்றலை அரசுகள் பொதுநன்மைக்காகவும், அமைதிக்காகவும் பயன்படுத்த வேண்டும். ஆனால், அழிவுக்காக விண்வெளியின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றார்கள். விண்வெளியில் அனைத்து வகையான ஆயுதங்களையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேசச் சமூகம் ஒருமித்தக் கருத்தை எட்டாதது வருந்தத்தக்கதுஎன்று கூறினார்.

news
உலக செய்திகள்
பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றத்திற்குத் தண்டனை கொடுக்க வேண்டும்!

பத்திரிகையாளர்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைப்போர் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வது நிறுத்தப்பட வேண்டும் எனயுனெஸ்கோஅமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பல முயற்சிகளை எடுக்க நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுப்பதாகவும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்குவது, எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு முக்கிய நெம்புகோலாக அமையும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுஉண்மையை எடுத்துரைத்ததற்காகவே 2022, 2023 -ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு நான்கு நாள்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் வீதம் கொல்லப்பட்டனர் என்றும், இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படுவது கிடையாது என்றும் தலைமை இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.