news
உலக செய்திகள்
பேராசிரியர்கள் கதாநாயகர்கள்!
பெல்ஜியம் நாட்டின் லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தின் 600 -வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், “பல்கலைக்கழகத்தின் முதல் பணி ஒருங்கிணைந்த உருவாக்கத்தை வழங்குவதாகும்; கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் பெருக்குவதற்குப் பதிலாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்வினைப் பற்றி பேசுவதற்குமான இடங்களாகப் பல்கலைக்கழகங்களை உருவாக்குங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
news
உலக செய்திகள்
நாட்டின் மேன்மை!
46-வது திருத்தூதுப் பயணத்தின், முதல் பகுதியாக இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தின் 400 -வது யூபிலி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் திருத்தந்தை. ‘ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதன் நில அளவாலோ, மக்கள் எண்ணிக்கையாலோ, பொருளாதார மேன்மையாலோ குறிக்கப்படுவதில்லை; மாறாக, மக்கள் மீதான பாகுபாடுகளைக் கைவிட்டு, பொதுநலனை மையமாக வைத்து, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து, குடிமக்களை நன்முறையில் வாழவைக்கும் முறைகளாலேயே ஒரு நாட்டின் மேன்மையாக அறியப்படுகிறது’ என அந்நாட்டின் தலைவர்களிடம் கூறினார் திருத்தந்தை.
news
உலக செய்திகள்
கிறிஸ்தவத் தாய்க்கு மரணத் தண்டனை!
நாற்பது வயதான மருத்துவச் செவிலியரான கிரண், சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற புகாரின் அடிப்படையில் இஸ்லாமாபாத்தில் ஜூலை 2021-இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ‘பாரபட்சத்தின் அடிப்படையில் தவறானத் தீர்ப்பு’ என்று கருத்து தெரிவித்தக் கிரணின் வழக்கறிஞர் அப்துல் ஹமீத், ‘ஆதாரங்களைப் பார்க்கவோ அல்லது சரியான பகுப்பாய்வை நடத்தவோ நீதிபதி கவலைப்படவில்லை’ என்றார். மத நிந்தனைச் சட்டங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கும், அப்பாவி மக்களைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
news
உலக செய்திகள்
அணுசக்தியும் அமைதிக்கான பணியும்!
பேராயர் காலகர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டில் அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் பொதுநலன் மற்றும் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டியது என்று தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கும், அமைதியான அணு அறிவியலின் நன்மைகளைப் பரப்புவதற்கும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்பம் கிடைக்க உதவுவதற்கும், திருப்பீடத்தால் கையொப்பமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் எடுத்துரைத்தார். அணுசக்தி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான, இடரற்ற மற்றும் அமைதியான பயன்பாட்டிற்கும் திருப்பீடம் தனது ஆதரவை வழங்கும் என்றார்.
news
உலக செய்திகள்
பொருளாதாரச் சீர்திருத்தக் கடிதம்
செப்டம்பர் 20 அன்று  நிதி தொடர்பான வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு, ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தியும் திரு அவையின் அனைத்து கர்தினால்களுக்கும் கடிதம் அனுப்பிய திருத்தந்தை, திரு அவையின் மறைப்பணி சேவைக்கான பொருளாதார வளங்கள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வுடன் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
news
உலக செய்திகள்
திருத்தந்தையின் 46-வது திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை  இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கான தன் 46-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்அமைதி, புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், இளையோரின் எதிர்காலம்  உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் உரையாற்றினார். 1425 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Louvain கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 600-வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இந்தத் திருத்தூதுப் பயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், 14 ஆண்டுகளாகப் பெல்ஜியத்தின்  துறவுமடத்தை வழிநடத்திய வணக்கத்திற்குரிய Anna de Jesus அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வும் நடைப்பெற்றது.