news
உலக செய்திகள்
கிறிஸ்தவத் தாய்க்கு மரணத் தண்டனை!
நாற்பது வயதான மருத்துவச் செவிலியரான கிரண், சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற புகாரின் அடிப்படையில் இஸ்லாமாபாத்தில் ஜூலை 2021-இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ‘பாரபட்சத்தின் அடிப்படையில் தவறானத் தீர்ப்பு’ என்று கருத்து தெரிவித்தக் கிரணின் வழக்கறிஞர் அப்துல் ஹமீத், ‘ஆதாரங்களைப் பார்க்கவோ அல்லது சரியான பகுப்பாய்வை நடத்தவோ நீதிபதி கவலைப்படவில்லை’ என்றார். மத நிந்தனைச் சட்டங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கும், அப்பாவி மக்களைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
news
உலக செய்திகள்
அணுசக்தியும் அமைதிக்கான பணியும்!
பேராயர் காலகர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டில் அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் பொதுநலன் மற்றும் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டியது என்று தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கும், அமைதியான அணு அறிவியலின் நன்மைகளைப் பரப்புவதற்கும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்பம் கிடைக்க உதவுவதற்கும், திருப்பீடத்தால் கையொப்பமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் எடுத்துரைத்தார். அணுசக்தி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான, இடரற்ற மற்றும் அமைதியான பயன்பாட்டிற்கும் திருப்பீடம் தனது ஆதரவை வழங்கும் என்றார்.
news
உலக செய்திகள்
பொருளாதாரச் சீர்திருத்தக் கடிதம்
செப்டம்பர் 20 அன்று  நிதி தொடர்பான வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு, ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தியும் திரு அவையின் அனைத்து கர்தினால்களுக்கும் கடிதம் அனுப்பிய திருத்தந்தை, திரு அவையின் மறைப்பணி சேவைக்கான பொருளாதார வளங்கள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வுடன் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
news
உலக செய்திகள்
திருத்தந்தையின் 46-வது திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை  இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கான தன் 46-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்அமைதி, புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், இளையோரின் எதிர்காலம்  உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் உரையாற்றினார். 1425 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Louvain கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 600-வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இந்தத் திருத்தூதுப் பயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், 14 ஆண்டுகளாகப் பெல்ஜியத்தின்  துறவுமடத்தை வழிநடத்திய வணக்கத்திற்குரிய Anna de Jesus அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வும் நடைப்பெற்றது.

news
உலக செய்திகள்
திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்!
சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தாரைச் சந்தித்த திருத்தந்தை, ‘மக்களோடும் கடவுளோடும் ஒன்றுபட்டு, தங்களுக்குள் சகோதரர்களாக, ஆயருடன் ஒன்றிணைந்தவர்களாக வாழ வேண்டும்’ என்று குருக்களிடம் கேட்டுக் கொண்டார். பிறகு பெண்களிடம் பேசிய திருத்தந்தை, தங்கள் அடையாளத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ‘திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்’ என்றும் கூறினார். இறுதியாக ‘புன்னகைத்துக்கொண்டே இருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
news
உலக செய்திகள்
சிங்கப்பூரில் திருத்தந்தை
தனது 45-வது திருத்தூதுப் பயணமாக, செப்டம்பர் 12 அன்று சிங்கப்பூர் சென்ற  திருத்தந்தை பிரான்சிஸ், ‘சிங்கப்பூர் கீழ்நிலையிலிருந்து வளர்ச்சியின் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது, இது தற்செயல் அல்ல; உண்மையில் நன்கு சிந்திக்கக்கூடிய தலைவர்கள், இணக்கமான திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக இது அமைந்துள்ளது. பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடு இது. ஒருவருக்கொருவர் மீதான மரியாதை, ஒத்துழைப்பு, உரையாடல், சட் டத்தின் எல்லைக்குள் ஒருவரின் நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை சிங்கப்பூரின் வெற்றி மற்றும் நிலைத்தன்மைக்குக் காரணம். பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வழியாக, மனிதகுலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு, சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது’ என்று கூறினார்.