தமிழ்நாட்டில்
11-வது பேராலயமாகவும், இந்தியாவின் 35-வது பேராலயமாகவும், உலகளவில் 1933-க்கும் மேற்பட்ட பேராலயங்களின் வரிசையில் சென்னை புனித தோமையார் மலை - புனித தோமையார் திருத்தலம் அகில இந்தியத் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தந்தையின் அறிவிப்பினைத் தமிழில், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் வாசித்தார்கள்.
03.07.2025 அன்று மாலை 4 மணிக்குத் திருத்தல வளாகத்தில் நடந்த இப்புனித நிகழ்வில் மேன்மை பொருந்திய நமது திருத்தந்தையின் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தூதர் பேராயர் லியோ போல்தோ ஜிரெல்லி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அவரோடு ஐதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா, மும்பை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியஸ் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்றனர். விழா நிறைவில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன்,
ஆர். இராஜேந்திரன், சா.மு. நாசர்,
மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர்
திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.