“ரொம்ப நல்லவர். நாடுகளுக்கிடையே சமாதானத்திற்கு வழிகாட்டியவர். ஆன்மிகத்தில் தளராத பக்தி கொண்டவர். ஏழைகளிடமும், குழந்தைகளிடமும் எப்போதும் அன்பு செலுத்தியவர்.”
- செல்வி. காணிக்கைமேரி,
பாகாயம்,
வேலூர்
“எளிமையின் வடிவம். மிகுந்த பக்தி. அவரைப் பார்க்கும்போது தெரியும் அவருடைய இரக்கமும் மன தைரியமும். அவரை
நேரில் பார்க்கக்கூடிய பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.”
- திரு. அலெக்ஸாண்டர்,
கூடல்நகர்,
மதுரை
“சிறைச்சாலை கைதிகளின் பாதத்தைக் கழுவியதை நினைக்கும்போது அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. விளிம்புநிலை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர். சாதி, மதம், இனம் கடந்து எல்லாவித மக்களாலும் விரும்பப்பட்டவர்.”
- திருமதி. ரோஸ்லின்மேரி,
பொன்மலை,
திருச்சி
“ஏழை மற்றும் நலிந்த மக்களுக்காக வாழ்ந்த ஆன்மிகவாதி. உலகில் சமாதானத்துடன் மக்கள் வாழ பல முயற்சிகள் செய்தவர்.
உக்ரைன் போரின்போது அவரது உரை மக்கள்மீது அவர் எவ்வளவு அன்பு செய்தார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.”
- திரு. ஜோசப் பீட்டர்,
விருதுநகர்
“எளிமையானவர், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். திரு அவை வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தவர். இளைஞர்களைக் கிறித்தவத்தில் வளர பல முயற்சிகள் மேற்கொண்டவர்.
உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்.”
- திரு. அந்தோணிசாமி,
பாண்டிச்சேரி
“சமூகப்பற்றாளர், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று அதிகம் விரும்பியவர். தன்னுடைய வருமானத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டவர்; எளிமையானவர்.”
- திரு. கிறிஸ் அன்டோஸ்,
நெல்லை
“சுற்றுச்சூழல் மீது அதிகம் அக்கறை கொண்டவர். ரொம்ப எளிமையானவர் என்பதற்கு அவருடைய இறுதி அடக்கம் பற்றி அவர் கூறியிருப்பதே சிறந்த உதாரணம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.”
- திருமதி அருள்மேரி அருளானந்தம்,
உடுமலை
“அன்புக்கும் சமாதானத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எல்லா மக்களையும் விரும்பக்கூடியவர். கிறித்தவ சாட்சிய வாழ்விற்கு மிகுந்த சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.”
- திருமதி. மெர்சி, தஞ்சாவூர்
“அவருடைய மரண செய்தியைக் கேட்டபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நல்ல மனிதர். மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர். மிகவும் மென்மையானவர்.”
- திரு. ஜோசப்ராஜ், மாம்பலம்,
சென்னை
“எளிமையான வாழ்க்கைக்குச் சிறந்த முன்னோடி. அரபு நாடுகளுக்கு முதன் முதலில் சென்ற திருத்தந்தை. அவரைப்
பார்க்க வரும் பார்வையாளர்களை அன்போடு சந்தித்துப் பேசக்கூடியவர். மனிதநேயம் கொண்டவர்.”
- திரு. ஜேம்ஸ், ஈரோடு