news
தமிழக செய்திகள்
‘இதயம் காப்போம் திட்டம்’

உலகச் சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.70 கோடி பேர் மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதிஉலக இதய தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துணை சுகாதார நிலையம், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.”

- திரு. டி.எஸ். செல்வ விநாயகம், தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்

news
தமிழக செய்திகள்
மதமாற்றம் நடக்கவில்லை!

கும்பகோணம் கீழ் மைக்கேல்பட்டியில் உள்ள புனித திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி 2022, ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டதற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை (சி.பி..) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், 265 ஆவணங்களைத் தயார் செய்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தெரிவித்தது. மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை ஆதரிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

news
தமிழக செய்திகள்
நீர்நிலைகள் பாதுகாவலர் விருது

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் நீர்நிலைகள் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.”

- திரு. பி. செந்தில் குமார், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர்

news
தமிழக செய்திகள்
நூல்கள் வாசிப்பின் பயன்

நூல்கள் நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகச்சிறந்த ஆயுதம். வாசிப்பின் பயனை உணர்ந்து வாசித்தால் நமது வாழ்க்கை வளம் பெறும்.”

- திரு. மு.பெ. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

news
தமிழக செய்திகள்
நன்றி!

இந்த இதழ் ‘நம் வாழ்வு’ சிறப்பிதழாக வெளிவர வாழ்த்துரை வழங்கிய கோவை ஆயர் பெருந்தகை அவர்களுக்கும், முதன்மைக்குரு அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, விளம்பரங்கள் கொடுத்து உதவிய அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் 384-ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

‘நம் வாழ்வு’ வாசகர்களாகிய நீங்கள் இங்கு வரும்பொழுது, ‘நம் வாழ்வு’ புத்தக ஸ்டால் இங்கே அமைந்திருக்கும். உங்கள் ஆண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் புதிய சந்தாக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் திருமண நாள் மற்றும் பிறந்த நாள் பரிசாக ‘நம் வாழ்வு’ வார இதழை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கவும். அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகள்!

அன்புடன் முதன்மை ஆசிரியர்

‘நம் வாழ்வு’ மற்றும் எஸ்.ஏ. கிறிஸ்டி (கோவை மண்டலப் பொறுப்பாளர்)

news
தமிழக செய்திகள்
விடுதலையை பெற்றுச் செல்ல அன்னையை நாடிவருக!

பசிலிக்கா பங்குத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாக விளங்கும் கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னையின் வரலாறு 384 ஆண்டுகள் கொண்டதாகும். ‘செபமாலையே நமக்கு நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு ஏற்ப அன்னையின் அருள் வரம் பெற்றுச்செல்வோர் ஏராளமானோர்! இது நமது கத்தோலிக்க இறை நம்பிக்கைக்கு மிகப்பெரிய சான்றாகும். இங்கு வருவோர் அனைத்து மதம், மொழி, இனங்களைக் கடந்து, அன்னையைத் தரிசித்து, பூரண நலம் பெற்று, எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்றுச் செல்வோர் எண்ணிலடங்கா!

இப்பேர்பட்ட நமது செபமாலை அன்னைக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெகு சிறப்பாக அன்னையின் ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்பட இருக்கின்றது. இதில் நீங்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் வழியாக இறை ஆசிரைப் பெற்றுச்செல்ல எம் பங்கு இறைமக்களோடு இணைந்து அழைக்கிறேன்.

அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!

அருள்பணி. KMC. அருண், பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, கருமத்தம்பட்டி