news
தமிழக செய்திகள்
நீர்நிலைகள் பாதுகாவலர் விருது

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் நீர்நிலைகள் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.”

- திரு. பி. செந்தில் குமார், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர்

news
தமிழக செய்திகள்
நூல்கள் வாசிப்பின் பயன்

நூல்கள் நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகச்சிறந்த ஆயுதம். வாசிப்பின் பயனை உணர்ந்து வாசித்தால் நமது வாழ்க்கை வளம் பெறும்.”

- திரு. மு.பெ. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

news
தமிழக செய்திகள்
நன்றி!

இந்த இதழ் ‘நம் வாழ்வு’ சிறப்பிதழாக வெளிவர வாழ்த்துரை வழங்கிய கோவை ஆயர் பெருந்தகை அவர்களுக்கும், முதன்மைக்குரு அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, விளம்பரங்கள் கொடுத்து உதவிய அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் 384-ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

‘நம் வாழ்வு’ வாசகர்களாகிய நீங்கள் இங்கு வரும்பொழுது, ‘நம் வாழ்வு’ புத்தக ஸ்டால் இங்கே அமைந்திருக்கும். உங்கள் ஆண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் புதிய சந்தாக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் திருமண நாள் மற்றும் பிறந்த நாள் பரிசாக ‘நம் வாழ்வு’ வார இதழை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கவும். அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகள்!

அன்புடன் முதன்மை ஆசிரியர்

‘நம் வாழ்வு’ மற்றும் எஸ்.ஏ. கிறிஸ்டி (கோவை மண்டலப் பொறுப்பாளர்)

news
தமிழக செய்திகள்
விடுதலையை பெற்றுச் செல்ல அன்னையை நாடிவருக!

பசிலிக்கா பங்குத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாக விளங்கும் கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னையின் வரலாறு 384 ஆண்டுகள் கொண்டதாகும். ‘செபமாலையே நமக்கு நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு ஏற்ப அன்னையின் அருள் வரம் பெற்றுச்செல்வோர் ஏராளமானோர்! இது நமது கத்தோலிக்க இறை நம்பிக்கைக்கு மிகப்பெரிய சான்றாகும். இங்கு வருவோர் அனைத்து மதம், மொழி, இனங்களைக் கடந்து, அன்னையைத் தரிசித்து, பூரண நலம் பெற்று, எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்றுச் செல்வோர் எண்ணிலடங்கா!

இப்பேர்பட்ட நமது செபமாலை அன்னைக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெகு சிறப்பாக அன்னையின் ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்பட இருக்கின்றது. இதில் நீங்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் வழியாக இறை ஆசிரைப் பெற்றுச்செல்ல எம் பங்கு இறைமக்களோடு இணைந்து அழைக்கிறேன்.

அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!

அருள்பணி. KMC. அருண், பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, கருமத்தம்பட்டி

news
தமிழக செய்திகள்
நாடி வருவோருக்கு வரங்களை அள்ளித் தரும் செபமாலை அன்னை!

முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டத்தில் முதல் தலைமை ஆலயமாக உருவானது கருமத்தம்பட்டி, புனித செபமாலை அன்னை பசிலிக்காவாகும். இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் செபித்து, ஏராளமான அருள் வரங்களைப் பெற்றுச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுவே அன்னை தன்னை நாடி வரும் மக்களுக்கு இறைவனிடம் பரிந்து பேசி, ஏராளமான புதுமைகளை அருள்கின்றார் என்பதற்குச் சாட்சியாகும்.

இறைவனுக்கும் மக்களுக்கும் இடையேயான பாலம் அன்னை மரியா. பல நூற்றாண்டுகளையும் கடந்த பின்பும் அனைத்து நலன்களையும் பெற்றுத் தருபவள் அன்னை மரியா. இப்பேர்பட்ட அன்னைக்கு நாம் நன்றி கூறி திருவிழா கொண்டாடுகிறோம். வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித செபமாலை அன்னையின் தேர்த் திருவிழாவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை இயேசுவின் ஆசிரைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறேன். பசிலிக்கா அருள்பணியாளர்களுக்கும், இறைமக்களுக்கும் மற்றும் வருகின்ற, திருப்பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!    இறையாசிர்!

- பேரருள்திரு. ஜான் ஜோசப் ஸ்தனிஸ், முதன்மைக்குரு, கோவை மறைமாவட்டம்

news
தமிழக செய்திகள்
செபமாலை அன்னை பக்தி குடும்பங்களை ஒன்றிணைக்கும்!

கோவை ஆயரின் ஆசியுரை

அன்புள்ள அருள்தந்தையர்களே, அருள்சகோதர, சகோதரிகளே! திருப்பயணம் மேற்கொள்ளும் இறைமக்களே! மற்றும் ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கோவை, கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் பெயரால் வாழ்த்துகளையும், செபங்களையும் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அன்னைக்கு ஆயிரம் பெயர்கள் இருந்தாலும், ‘செபமாலை அன்னை’ என்னும் பெயரும், அதன் பொருள் பொதிந்த ஆன்மிகச் செயலான செபமாலை செபிப்பதும், நாம் அன்றாட வாழ்வில் அவரை நினைவுகூர்வதும் சிறப்பு வழிமுறைகளாகும். இந்தப் பக்தி முயற்சி நமது குடும்பங்களை ஒன்றிணைத்து, திரு அவையையும் சமூகத்தையும் புதுப்பிக்கும் ஓர் உன்னத செயல். அக்டோபர் மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதம் ஆகும். இந்தத் தருணத்தில் கோவை மறைமாவட்டத்தில் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவில் ஆண்டுப் பெருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. இதைக் காணும் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை ஆசிரைப் பெற்றுச் செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன். இறையாசிர்!