news-details
உலக செய்திகள்
78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை

78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்   திருத்தந்தை

78,000 மக்கள் அமரக்கூடிய கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘வார்த்தையைக் கேட்பதும், வார்த்தையை வாழ்வதும்என்ற மையக்கருத்தில் மறையுரையாற்றினார். வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தை தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே, காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. முதல் சீடர்கள் இயேசுவைத் தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, வாழ்வாக்க வேண்டும் என்று நிறைவு செய்தார் திருத்தந்தை.