news-details
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.