news-details
உலக செய்திகள்
பத்தாயிரம் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 9 அன்று பப்புவா நியூ கினி நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பாபேல் கோபுரத்தின் விவிலியக் கதையை ஒரு பாடமாக அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டு வழிகளை வேறுபடுத்தினார்.

ஒன்று, குழப்பத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது; மற்றொன்று, கடவுளுடனும், நம் சக மனிதர்களுடனும் சந்திப்பதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று தெளிவுபடுத்தி, நம்பிக்கையின் புன்னகையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தினார்.