கன்னியாகுமரி
மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 1 -ஆம் தேதி பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்
நடைபெறும் என
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம்
இனி குமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக 200 கிராமங்களில்
மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.