“தற்போது
நாட்டில் உள்ள 45 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் 1,200 பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுக்கு 4.3 கோடி பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் கணினி அறிவியல் கல்வி பயில்கின்றனர். அகில இந்திய அளவில் தற்போது 28.3 சதவிகிதமாக இருக்கும் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை, அடுத்த 11 ஆண்டுகளில் 50 சதவிகிதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில், திறமை மிகுந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, வேலைவாய்ப்பைப் பெறவும், கிடைத்த வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.”
- திரு. டி.ஜி.
சீதாராம்,
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர்