“பணம்
இல்லையா, விளையாட முடியாது’ என்பதே இந்தியாவில் இன்று பெரும்பாலான
தடகள வீரர்களின் உண்மை நிலை. அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாமல் அவதிப்படுவதுடன்,
நாட்டின் விளையாட்டு அமைப்பு மீதான ஏமாற்றம் காரணமாக விளையாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள்
நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிடுவதைவிட
மிகப்பெரிய இழப்பு. இந்தியாவிடம் அளப்பரிய திறமை உள்ளது. தேவையான அனைத்து வசதிகளும்
வெளிப்படையான முறையில், நியாயமாகக் கிடைப்பது மட்டுமே வெற்றிபெறக்கூடிய அனைத்து விளையாட்டு
வீரர்களும் சமமாகப் பலனடைவதை உறுதி செய்யும்.”
- திரு. இராகுல் காந்தி,
காங்கிரஸ் எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர்