news-details
தமிழக செய்திகள்
‘இதயம் காப்போம் திட்டம்’

உலகச் சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.70 கோடி பேர் மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதிஉலக இதய தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துணை சுகாதார நிலையம், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.”

- திரு. டி.எஸ். செல்வ விநாயகம், தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்