இந்தியாவின் நான்கு மறைமாவட்டங்களான தமிழ்நாட்டின் வேலூர், மும்பையின் வசை, கொல்கத்தாவின் பாக்டோக்ரா ஆகியவற்றுக்குப் புதிய ஆயர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயரையும் நவம்பர் 9 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டற்குப் புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களையும், மும்பையின் வசை மறைமாவட்டப் புதிய ஆயராக அருள்தந்தை தாமஸ் டிசோசா அவர்களையும், கொல்கத்தாவின் பாக்டோக்ரா மறைமாவட்ட ஆயராக ஆயர் பால் அவர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்குத் துணை உதவி ஆயராக அருள்தந்தை அந்தோணி தாஸ் பிள்ளை அவர்களையும் நியமித்துள்ளார்.