“ஆசிரியர்கள் இளையதலைமுறையினருக்குப் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின், கலாச்சாரத்தின் முக்கிய விழுமியங்களையும், நெறிகளையும் கற்பிக்க வேண்டும். ‘எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை’ என்றும், ‘ஆழமான அறிவைப் பெறுதல் ஞானத்தை வளர்க்க உதவும்’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆழமான அறிவு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பொறுப்பு பற்றிய புரிதலையும், கற்கும் ஆர்வத்தையும் தூண்டும். இளைஞர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தேடவும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக மாறவும், இடர்களைக் குறைத்து வாய்ப்புகளைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.”
- திரு. பவன்குமார் சிங்,
திருச்சி, இந்திய மேலாண்மை
நிறுவன
இயக்குநர்