உலகெங்கிலும் உள்ள ஒன்பது நாடுகளில் மோதல் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு வழங்கும் ஒரு தொண்டு நிறுவனமான ‘அவசர நிலை’ என்ற உரோம் அலுவலகத்தின் உறுப்பினர்களை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அப்போது
அவர் வழங்கிய செய்தியில், போரை நிராகரிப்பது குறித்த இத்தாலிய அரசியலமைப்பின் பிரிவு 11-ஐ மேற்கோள்காட்டி, “இந்தக் கோட்பாடு
உலகெங்கிலும் பயன்படுத்தப்படட்டும்; போர் தடை செய்யப்படட்டும்; பிரச்சினைகளைச் சட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படட்டும்; ஆயுதங்கள் மௌனமாகட்டும்; பேச்சுவார்த்தை அவற்றின் இடத்தைப் பிடிக்கட்டும்; உரையாடலில் ஈடுபடவும், மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”
என்று வேண்டுகோள் விடுத்தார்.