அக்டோபர் 30 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் கபிரியேல் காசியா, நியூயார்க்கில் விண்வெளிப் பாதுகாப்பு குறித்து இரட்டை அறிக்கைகளை வெளியிட்டார். ஐ.நா. பொதுச்சபையின் ஆயுதக் குறைப்பு மற்றும் சிறப்பு அரசியல் பணிகள் குறித்த குழுக்களில் உரையாற்றிய பேராயர் காசியா, “அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (ASAT) விண்வெளியில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இவை சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட எரிகணைகள். விண்வெளியின் பரந்த ஆற்றலை அரசுகள் பொதுநன்மைக்காகவும், அமைதிக்காகவும் பயன்படுத்த வேண்டும். ஆனால், அழிவுக்காக விண்வெளியின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றார்கள். விண்வெளியில் அனைத்து வகையான ஆயுதங்களையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேசச் சமூகம் ஒருமித்தக் கருத்தை எட்டாதது வருந்தத்தக்கது” என்று கூறினார்.