ஒளியின் ஆதாரமான கடவுள், தீபாவளி திருநாள் கொண்டாடுபவர்களின் மனத்தையும் இதயத்தையும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும் என்றும், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இரக்கம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்றும் வத்திக்கானின் பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் மிகுவேல் ஏஞ்சல் அயுசோ குய்சோட் மற்றும் அதன் செயலாளர் இந்துனில் ஜனகரத்ன கொடித்துவக்கு கங்கனமாலகே ஆகியோர் இணைந்து செய்தி அனுப்பியுள்ளனர்.
கிறித்தவர்களும்,
இந்துகளும், பிற சமய மரபுகளைச் சேர்ந்தவர்களோடும், நல்லெண்ணம் கொண்டவர்களோடும், வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அவசியம் என அவ்வாழ்த்துச் செய்தியில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.