தமிழ்நாட்டில்
பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பலர் ஆற்றிவரும் அரிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ. 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘www.tn.gov.in/ta/forms/Deptname/I’ என்ற இணையதளத்தில்
இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம்
அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப்
படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
- தமிழ்நாடு அரசு