news-details
உலக செய்திகள்
புனித சவேரியாரின் அழியா உடல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புனித சவேரியாரின் உடலைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிப்படுத்தும் நிகழ்வு இவ்வாண்டு நவம்பர் 21 -ஆம் தேதி டெல்லி பேராயர் அனில் கூட்டோ மற்றும் பத்து ஆயர்கள் தலைமையில் பசிலிக்காவில் திருப்பலியுடன் தொடங்கியது. வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள புனிதரின் நினைவுச்சின்னங்கள் இறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடவும் செபம் செய்யவும் அருகிலுள்ள சே கதீட்ரலுக்குக் கொண்டு செல்லப்படவும், 45 நாள்களுக்குப் பிறகு பழைய இடத்திலே வைக்கப்படவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வுகளில் ஏறத்தாழ 8 மில்லியன் மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றன.