“ஒவ்வொரு
தனி மனிதனும் தன்னளவில் நேர்மையோடும் உண்மையோடும் இருந்திட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் சின்னச் சின்ன ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் நம்மையும் வாழ்வில் உயர்த்தும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நேர மேலாண்மையை நாம் சரியாகப் பின்பற்றினால், நம்மைப் பார்த்து சக ஊழியர்களும் பின்பற்றுவார்கள்.
யாராவது நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், நம் மனமறிந்து உண்மையாகவும் விதிகளை மீறாமலும் செயல்பட்டால் நமக்கான இலக்கினை நம்மால் விரைந்து அடைய முடியும்.”
- திரு. வி. நந்தகுமார்,
ஐ.ஆர்.எஸ்.,
வருமான
வரித்துறை
ஆணையர்